உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவில் மரபுகளுக்காக தனித்திட்டம்

 கோவில் மரபுகளுக்காக தனித்திட்டம்

'கோவில் நிர்வாகங்களின் நேரடி கண்காணிப்பில் பிரசாதங்கள் தயாரிக்கப்படும்' என்ற, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பிரசாதம் தயாரிப்புக்கு, வெளிப்படையான 'டெண்டர்' வாயிலாக அனுமதி வழங்க வேண்டும். அதிக வருமானம் ஈட்டும் கோவில் நிதியில், ஒரு பகுதியை கொண்டு புராதன, பாரம்பரிய கோவில்களை புனரமைக்க வேண்டும். கோவில்களின் வரலாறு, பண்பாடு, ஆன்மிக சிறப்புகளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல, கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். கோவில் கலை, இசை, ஓவியம், சிற்பம், ஓலைச்சுவடி மற்றும் பாரம்பரிய மரபுகளை பாதுகாக்க தனி திட்டங்களை உருவாக்க வேண்டும். - - ஸ்ரீகாந்தி செயல் தலைவர், ராமதாஸ் ஆதரவு பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை