உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி 78 சதவீத விண்ணப்பங்கள் வினியோகம்

 சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி 78 சதவீத விண்ணப்பங்கள் வினியோகம்

சென்னை: தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த 4ம் தேதி துவங்கியது. இதற்கான விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் வாயிலாக, வீடுதோறும் வினியோகம் செய்யப் படுகின்றன. இந்நிலையில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில், தமிழகத்தில் 78.09 சதவீதம் வாக்காளர்களுக்கு, விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 6 கோடியே 41 லட்சத்து 14,587 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, 5 கோடியே 67,045 வாக்காளர்களுக்கு, விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, 78.09 சதவீதம் வாக்காளர்களுக்கு, விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டுள்ளது என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ