மேலும் செய்திகள்
அஷ்வின் 14 ஆண்டு பயணம்: விராத் கோலி நெகிழ்ச்சி
18-Dec-2024
பிரிஸ்பேன்:சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின்.இந்திய அணியின் நட்சத்திர 'ஆப் ஸ்பின்னர்' அஷ்வின், 38. கடந்த 2011, உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணியில் இடம் பெற்றவர். 106 டெஸ்டில், 537 விக்கெட் கைப்பற்றினார்.சுழற்பந்து வீச்சில், 'கேரம் பால்' போன்ற புதுமைகளை புகுத்தியதால், 'கிரிக்கெட் விஞ்ஞானி' என அழைக்கப்பட்டார். பேட்டிங்கிலும் கைகொடுத்து, 'ஆல் ரவுண்டராக' ஜொலித்தார்.தற்போதைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அஷ்வினுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த விரக்தியில் நேற்று பிரிஸ்பேன் டெஸ்ட் முடிந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பார். வரும் 2025ல் சென்னை அணிக்காக ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவார்.அஷ்வின் கூறியதாவது:இந்திய வீரராக, அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுகிறேன். என்னிடம் இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் திறமை மீதமுள்ளது. இதை, கிளப் அளவிலான உள்ளூர் போட்டியில் வெளிப்படுத்த விரும்புகிறேன். ரோகித் உள்ளிட்ட சக இந்திய வீரர்களுடன் செலவிட்ட தருணங்கள் மறக்க முடியாதவை. எனக்கு வாய்ப்பு அளித்த பி.சி.சி.ஐ.,க்கு நன்றி. ரோகித், கோலி, ரகானே, புஜாரா போன்றோர் துடிப்பாக 'கேட்ச்' பிடித்து, எனக்கு விக்கெட் கிடைக்க உதவினர். இவர்களுக்கும் நன்றி. இது உணர்ச்சிகரமான தருணம் என்பதால், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. என்னை பாராட்டியும், சில நேரங்களில் விமர்சித்தும் எழுதியதற்கு நன்றி.இவ்வாறு அஷ்வின் கூறினார்.
18-Dec-2024