உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் அப்படி சொல்லி இருக்கக்கூடாது; கம்யூ.,

ஸ்டாலின் அப்படி சொல்லி இருக்கக்கூடாது; கம்யூ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: “த.வெ.க., அரசு, மூன்று மாதங்கள் கூட, தாங்குமா என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கக் கூடாது,” என்று இ.கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 20 கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கெலமங்கலம் பகுதியில், கோவில் நிலங்களை ஆக்கிரமித்து, 1,027 வீடுகள் கட்டி குடியிருப்பது தெரிந்தது. இவற்றை, ஹிந்து சமய அறநிலையத்துறை அகற்ற முயற்சிப்பதை கண்டித்து, இ.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பின், வீரபாண்டியன் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில் தான் இதுவரை, இ.கம்யூ., உள்ளது; அக்கூட்டணியில் தான் வெற்றி பெற்றோம். தமிழக உரிமைகளில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., என, ஜனநாயக சக்திகள் சேர்ந்து போராடும். மீண்டும் தேர்தல் வரக்கூடாது; கவர்னர் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக, த.வெ.க., அரசை, நாங்கள் வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழகத்தின் மூத்த தலைவர். அவர், 'த.வெ.க., ஆட்சி மூன்று மாதம் தாங்குமா' என கூறியிருக்க கூடாது. தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பல கட்சிகள் இல்லாத சூழ்நிலையில், அக்கூட்டணி இல்லை என்ற நிலைமை உருவாகிறது. ஒரு கூட்டணியில் இருந்து விலகுவதை, முறைப்படி தான் அறிவிக்க வேண்டும்.தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் தொடர்கிறோமா என்பதை, போகிற போக்கில் கூறி விட முடியாது. நாளை 9ம் தேதி செயற்குழு மற்றும் 10, 11ம் தேதி நிர்வாகக்குழு நடக்கிறது.அந்த கூட்டங்களில் ஆலோசித்து, எங்கள் முடிவை அறிவிப்போம். தி.மு.க., கூட்டணி வாயிலாக, எம்.பி.,யாக வெற்றி பெற்றவர்கள், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venugopal, s
ஜூன் 09, 2026 09:18

மறு தேர்தல் வந்தால் என்ன செய்வது.


Srini Raman
ஜூன் 09, 2026 07:31

இப்போது சட்டசபையில் இருப்பது 229 எம் எல் ஏக்கள். பெரும்பான்மையை நிரூபிக்க 115 எம் எல் ஏக்கள் தேவை . கம்யூனிஸ்ட் இல்லாமலேயே முதல்வர் விஜய் அவர்களுக்கு 116 எம் எல் ஏக்கள் உள்ளனர் . அதனால்தான் கம்யூனிஸ்ட் பதறிப்போய், நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம் என்கின்றனர். அரசியலின் தரம் மிகவும் மோசம்.


Mani . V
ஜூன் 09, 2026 04:35

விடுங்க பாஸ், அவரென்ன புரிந்தா அப்படிச் சொல்கிறார்? மிகப்பெரிய தோல்வியின் வேதனையில் எதையாவது உளறிக்கொண்டு இருப்பார். இதுவே இரும்புக்கை கோப்பால் ஸ்டாலின் சார் ஆட்சியின் பொழுது மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு இளவரசர் பாலிடால் "நாங்கள் ஆட்சிக்கு வந்து 110 நாட்கள்தானே ஆகியுள்ளது" என்று கேட்டது. அப்பொழுது இவர் எங்கே இருந்தாராம்? தன் கூடவே இருந்தவர்களின் கூட்டுச் சதியால்தான் நம்ம இரும்புக்கை கோப்பால் சார் மண்ணைக் கவ்வினார் என்பதையே இன்னும் அவர் தெரிந்து கொள்ளவே இல்லை. பாவம்.


பேசும் தமிழன்
ஜூன் 09, 2026 01:28

அப்படி சொல்லி இருக்க கூடாது..... முதுகில் குத்தி விட்டு சென்ற உங்களை.... எட்டப்பன்.... ஓடுகாலி என்று தான் அழைக்க வேண்டும்.


V Venkatachalam, Chennai-87
ஜூன் 08, 2026 20:05

ஸ்டாலின் அப்புடி பேசி இருக்க கூடாது. கரீட்டுதான். மூணு மாசத்துக்கு பதிலா ஒரு மாசந்தான்னு பேசியிருந்தா காம்ரேட்ஸ் கம்முனு இருந்திருப்பாங்கோ. வாயால் சுடும் வடைக்கு நீ நான் போட்டா போட்டி.


rajasekaran
ஜூன் 08, 2026 19:55

பின்ன எப்படி சொல்லுணுமா . ஸ்டாலின் இப்போதாவது எல்லாவற்றையம் புரிந்து கொண்டு சம்பாதித்த கொள்ளை அடித்த பணம் மற்றும் பாவம் எல்லாம் போதும் என்று தன்னை தானே பரிசோதனை செய்து கொண்டு இனிமேல் இந்து மதம் உள்பட எந்த மதத்தையும் கேலி செய்யாமல் இனிமேல் யாரையும் கூட்டணி சேக்காமல் தோல்வியோ வெற்றியோ தனியாக நின்று தன் பலத்தை காட்ட வேண்டும். மேலும் இப்போது உள்ள மாவட்ட செயலாளர்கள் எல்லோரையும் மாற்றி கழகர்த்திக்கு நன்கு வேலை செய்ய கூடிய சுமார் 40 வயதுக்கு உட்பட நல்ல மனிதர்களை போட வேண்டும்.


duruvasar
ஜூன் 08, 2026 19:52

யோவ் கடந்த 5 ஆண்டுகளாக எந்த புத்தில் பதுங்கியிருந்தீக. . 1 மாசமா அப்பப்ப வந்து இறை சாப்பிட்டு போறீங்க. வெளிய வந்தப்பறம்தான் தெரியுது கலப்பின கொடுக்கு புள்ளபூச்சினு.


பிரேம் குமார்
ஜூன் 08, 2026 19:47

காங்கிரஸ் உள்பட எல்லா எதிர்க்கட்சிகளும் எந்த மாநில கட்சியின் ஆதரவில் எந்த மாநிலத்திலிருந்தும் எந்த பதவிக்கு போட்டியிட்டு ஜெயித்து இருந்தாலும் அந்த வெற்றியின் பின்னால் இருந்தது 90 சதவிகித இந்துக்களின் வோட்டுக்கள் தான்.. எனவே அப்படிப்பட்டவர் களுக்கு எதிராக பேசியும் எழுதியும் ஆதரித்த உண்மையான அந்த வாக்காளர்களை அவமான படுத்தாதீர்கள்.


Anand
ஜூன் 08, 2026 19:28

இவ்வளவு நாட்களாக திமுகவின் வீட்டு சோத்துக்கு சட்டி எடுத்த உண்டியல், இப்போது தவெகவின் ஓட்டல் சோத்துக்கு சட்டி எடுத்துள்ளது. அடுத்து எதை நோக்கி சட்டியை எடுப்பார்கள் என பார்ப்போம்.


Tamilan
ஜூன் 08, 2026 19:17

மோடி மறைமுகமாக செய்ததை இவர்கள் நேரடியாகவே செய்வார்கள். கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் தமிழர்களின் தமிழ் நாட்டின் மானம் முற்றிலுமாக போய்விடும்.


Venkatesh
ஜூன் 08, 2026 19:57

எல்லாவற்றிற்கும் அங்கே தான் போக வேண்டுமா


Aarbinms
ஜூன் 08, 2026 20:27

ஒனக்கு மான மறுவாதி பத்தியெல்லாம் கவலையெதுக்கு ஒனக்கு தேவை 200 மட்டுமே


Raman
ஜூன் 08, 2026 20:28

Pavam, nee, pulambu


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை