உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி அணியின் எந்த திட்டமும் இங்கு பலிக்காது; சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

டில்லி அணியின் எந்த திட்டமும் இங்கு பலிக்காது; சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கடலூர்: தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டில்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.''உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில், இன்று முதல்வர் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக, 3,563 இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. மக்களிடம் மனுக்களை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.உங்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு காணப்படும். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு, அன்றைய தினமே தீர்வு காணப்படும். இன்று துவங்கி நவம்பர் மாதம் வரை, 10,000 முகாம்கள் நடைபெற உள்ளன.நகரப்பகுதிகளில் 3,768, ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இன்று துவங்கி ஆகஸ்ட் 15 வரை, முதற்கட்டமாக 3,563 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் 1,428 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 2,135 முகாம்களும் நடக்க உள்ளன.

பிரத்யேக இணையதளம்..!

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் முகாம் நடைபெற உள்ள இடத்தின் விவரங்களை அறிய பிரத்யேக இணையதளத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது.சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காமராஜர் பிறந்தநாளில் மாபெரும் முன்னெடுப்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் காரணமாக அரசு மேல் நம்பிக்கை வைத்து இன்னும் பலர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

பல லட்சம் மனுக்கள்

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 5,000 முகாம்கள் நடத்தி பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம். தகுதி இருந்தும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், முகாமில் விண்ணப்பம் கொடுத்தால் போதும் நிச்சயம் உரிமைத் தொகை கிடைக்கும். மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அரசின் சேவையை வழங்குவது தான் திட்டத்தின் நோக்கம்.தமிழகம் ஓரணியில் இருக்கும் போது எந்த டில்லியின் அணியின் காவி திட்டமும் இங்கே பலிக்காது.

லிஸ்ட் பெரியது

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பிக்கும் மகளிருக்கு, நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். லிஸ்ட் பெருசா இருக்கு.சொல்ல நேரம்தான் இல்லை. ஆனால் நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். தமிழகம் வரலாற்றில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். இந்த திட்டங்கள் மட்டும் போதுமா என்றால் கேட்டால் போதாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Ambedkumar
ஜூலை 16, 2025 05:06

மத்திய அரசின் நிதியை மட்டும் சத்தமில்லாமல் வாங்கிக்கொண்டு டில்லி...டில்லி என்று புலம்புவது ஏன்? உதாரணமாக, கடந்த மாதம் மத்திய அரசு ரூ. 111 கோடியை தமிழகத்தில் உள்ள 100 நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கு அளித்துள்ளது. தமிழக அரசு அதனுடைய பங்காக ரூ. 12 கோடி மட்டுமே அளித்துள்ளது. இது PWD website லேயே உள்ளது.


தாமரை மலர்கிறது
ஜூலை 15, 2025 19:24

முடியாது, நடக்காது என்று மறுத்தவர்களை மாற்றி முடித்து காட்டிய மத்திய அரசின் திட்டங்கள் நீட், உதய் திட்டம், ஆதார் என்று பல இருக்கின்றன. வெற்றுச்சவடால்கள் மத்திய அரசிடம் பலிக்காது. அடுத்த ஆண்டே எடப்பாடி முதல்வர் ஆனவுடன் மும்மொழி கொள்கையும் தமிழகத்தில் வரும்.


vbs manian
ஜூலை 15, 2025 18:35

தமிழ்நாடு இவர் ஜமீனா. நாற்பது சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகளே வாங்கியுள்ளனர்.


Iyer
ஜூலை 15, 2025 16:17

 பிஜேபி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பது காலத்தின் கட்டாயம்.  அண்ணாமலை போன்ற ஒரு படித்த, தகுதியுள்ள, சுத்தமான கரங்களை கொண்ட தேச பக்தர் தமிழக முதல்வர் ஆவார்  தமிழ் நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை ஜெயிலுக்கு அனுப்ப நேரம் பிடிக்கும்.  ஆனால் ஊழலில் சம்பாதித்த சொத்துக்களை மோதி அவர்கள் கைப்பற்றுவார்.


JANA VEL
ஜூலை 15, 2025 16:05

படித்தவர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு... படிக்காத தற்குறிக்கு செல்லும் இடமெல்லாம் பயம் உளறல்


NRajasekar
ஜூலை 15, 2025 15:26

மக்கள் நல திட்டங்களை கல்வி வாழ்கை தரம் உயர்த்துதல் இப்படி எந்த மத்திய அரசு திட்டத்தையும் வர்விடாது செய்து. விளம்பரம் பொய் வாக்குறுதி ஓட்டுவாங்க இது போதும்


Loganathan Balakrishnan
ஜூலை 15, 2025 15:17

இன்னும் பிஜேபி வந்துவிடும் என்ற பூச்சாண்டியை வைத்தே ஜெயிச்சுவிடலாம் என்ற நம்பிக்கை


SUBBU,MADURAI
ஜூலை 15, 2025 14:40

மக்களிடம் மனுக்களை...இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கருணாநிதி தமிழர் அல்ல என்ற உண்மை தமிழர்களுக்கு தெரிய வருமா என்பது சந்தேகம்தான் அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோலில் தெலுங்கு சின்ன மேளம் என்ற ஜாதியை சேர்ந்தவர் அவரது தந்தையின் பெயர் முத்துவேல் அல்ல முத்தய்யா என்பதுதான் அன்னாரது உண்மையான பெயர் அதாவது தெலுங்கு பெயர்களான பாலய்யா,சோமய்யா,நாகய்யா என்பதை போல இந்த முத்தய்யா இந்த முத்தய்யாவிற்கு கோவில்களில் டோலக் என்ற இசைக்கருவியை இசைப்பதுதான் முழுநேர தொழில். அங்கிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக மெட்ராஸ் என்றழைக்கப் படும் சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள். அங்கிருந்து அவர்கள் சொந்தங்களானவர்கள் அழைப்பின் பெயரில் திருவாரூருக்கு குடி பெயர்ந்தார்கள். அப்போது கருணாநிதி என்ற தட்சினா மூர்த்திக்கு நான்கு வயது அதனால் அவர் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை என்பதும் ஆந்திராவில் பிறந்து இங்கு வளர்ந்தார் என்பது தெளிவாக தெரிகிறது.


Kjp
ஜூலை 15, 2025 14:12

இன்னுமாய்யா இந்த தமிழகம் இவரை நம்புவது.தேரதலுக்கு மனுக்களின் நிலை என்ன.. அதைப் பற்றி கேட்டால் முறையான பதில் சொல்ல முடியாமல் உருட்டுகிறார்.நன்றாக வாயாலே வடை சுடுகிறார்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 15, 2025 14:08

துட்டு குடுத்து ஒட்டு வாங்கிரலாம் ன்னு நினைச்ச உங்களை மனு வாங்க வெச்ச மக்களின் மனசு, நாடித் துடிப்பு .... இனியாச்சும் வெட்கப்படு மாமன்னா .....