உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதில் அளிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதில் அளிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை போல இனியொரு சம்பவம் இதுபோல நிகழாது என உறுதி கூறத்தான் முடியுமா? முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காவலர்கள் சுட்டுப் பிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. பெருநகரத்தின் சர்வதேச விமான நிலையத்தின் அருகிலேயே ஒரு பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி எறியும் அளவிற்குக் குற்றவாளிகளுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? தேசத்தையே உலுக்கிய இவ்வழக்கில், மறைந்து ஒளிந்து கொண்டால் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் குற்றவாளிகளுக்கு எப்படி வந்தது? ஒரு வேளை அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்ற வந்த 'சார்' கொடுத்த தைரியமா? சம்பவ இடத்தில் சட்டவிரோத மதுபானக்கடை இயங்கியதும் குற்றம் நிகழ்வதற்கான ஒரு காரணமே. இத்தனை நாட்கள் அந்தக் கடையை இந்த அரசு கண்டுகொள்ளாதது ஏன்? இப்படி திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் சட்டம் ஒழுங்கை சீர்கெடச் செய்து, குற்றங்களைப் பெருகவிட்டு, பின் குற்றவாளியை சுட்டுப் பிடிப்பதால் யாருக்கு என்ன பயன்? இழந்த மாணவியின் வாழ்வை மீட்டுக் கொண்டு வரமுடியுமா? மக்கள் மனதில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க முடியுமா? அல்லது இனியொரு சம்பவம் இதுபோல நிகழாது என உறுதி கூறத்தான் முடியுமா? முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Padmasridharan
நவ 05, 2025 14:59

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா சாமி. . கெடாமல் இருக்கத்தானே காவல் நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் பல காவலர்களும் அதிகார பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தெரியாத குற்றங்கள் நடக்கும் இடமா. எந்த இடத்தில் இருந்தால், எப்படி மக்களை மடக்கி பிடித்து, எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று நன்றாக இவர்களுக்கு தெரியும். பணம் பிடுங்கி, குடிமக்களை புதிய குற்றவாளிகளாக உருவாக்குவதில், பழைய குற்றவாளிகளையும் காப்பாத்தும் கில்லாடிகள் ஆச்சே.


M.Selvam
நவ 04, 2025 15:59

நயினார் இதே வேகாத்தை கொடநாடு ponra விஷயத்தில் காட்டலாம்


Indian
நவ 04, 2025 15:58

அவர் பதில் சொல்லிவிட்டார் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்கள் நீங்கள் சும்மா சாக்கு போக்கு குற்றம் சொல்லும் மோடில் இருந்து வெளியே வாருங்கள்.


Rahim
நவ 04, 2025 14:23

அவர் பதில் சொல்லிவிட்டார் காவல்துறையும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்கள் நீங்கள் குற்றம் சொல்லும் மோடில் இருந்து வெளியே வாருங்கள்.


Ashanmugam
நவ 04, 2025 13:33

எவன் எந்த நேரத்தில் கொலை செய்வான், கொள்ளை அடிப்பான், கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு கொலை செய்தல் என்பதை யாரால் கணிக்க முடியும்? அப்படி பார்த்தால் தமிழ் நாட்டுக்கு என்று தனி விண்வெளி கண்காணிக்கும் சாட்டிலைட் வைக்கவேண்டும்? இந்த சம்பவங்கள் எல்லா ஆட்சி காலத்திலும் நடந்து வருகிறது. இதற்கு எப்படி எந்த விதத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பாவார்? சொல்லுங்கள் தமிழக மக்களே?


Rahim
நவ 04, 2025 14:21

உங்களின் பாயிண்டுகள் கேள்விகள் சாதாரண மக்களுக்கு புரியும் ஆனால் ...


Manyam
நவ 04, 2025 13:00

சமுதாயத்தில் தனி மனித ஒழுக்கமில்லை. மனிதன் மிருகம் போல் நடந்து கொள்கிறான். தவறு செய்ய தூண்டும் ஆபாச வெப்சைட்டுகள், தொடர்கள் மற்றும் டிவி சேனல்கள் முதலில் தடை செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டுப்பாடுடன் வளர்க்க வேண்டும். இதற்கான தண்டனையில் சட்ட சீர்திருத்தம் செய்து மிக கடுமையாக்க படவேண்டும்.


என்னத்த சொல்ல
நவ 04, 2025 12:43

பிஜேவி ஆளும் மாநிலங்களில், பாலியல் வன்கொடுமை நடக்காதென்று நீங்கள் உறுதி கொடுக்க முடியுமா?.. இந்த அர்த்தமற்ற கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லனுமா?


ஆரூர் ரங்
நவ 04, 2025 14:53

அதுக்கு இது பதிலில்லையே . பிஜெபியைக் குறைகூற ஆளும் திமுகவுக்கு சற்றும் தகுதியில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.


duruvasar
நவ 04, 2025 12:23

கம்பெனியை மூடிட்டாங்களா ?


ramesh
நவ 04, 2025 11:20

இது உண்மையிலேயே மிகவும் கண்டிக்க பட வேண்டிய விஷயம் .இருந்தாலும் , இந்த கால பெண்கள் டிவி மற்றும் செய்தி தாள்களில் இதே போன்ற செய்திகளை பார்த்து வருகிறார்கள் .அப்படி இருக்கும் பொது தாங்கள் தான் முன் எச்சரிக்கை உடன் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் . காதலனுடன் இப்படி மறைவான இடங்களுக்கு சென்று பேசுவதை தவிர்க்க வேண்டும் .எல்லா இடத்திலும் எல்லா இடங்களுக்கு போலீஸ் உடன் வருவது என்பது முடியாத காரியம் . பின்னர் காவல் துறையினர் வந்து நடவடிக்கை எடுப்பதால் எந்த பயனும் இல்லை . பாதிக்க பட்டது பட்டது தான் . அதனால் பெண்கள் தான் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது முக்கிய மானது


duruvasar
நவ 04, 2025 11:14

பல்கலைக்கழக பாலியல் வன் கொடுமை, விமானநிலைய விபரீதம் , தெருமுனை துன்புறுத்தல் , பெண் காவலர்களிடத்தில் பேடித்தனம் இப்படி பேசிக்கொண்டே இருக்கவேண்டியர்த்துதான் திராவிட மாடல் எதுவும் செய்யாது