உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவாக பிஸ்கட் தரக்கூடாது

 அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவாக பிஸ்கட் தரக்கூடாது

சென்னை: ''அரசு பள்ளிகளில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் போது, கட்சித் தலையீடுகள் இருக்கக்கூடாது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தி உள்ளார். சென்னையில் அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளிக்குள் முதல்வரின் படத்தோடு, த.வெ.க., தோழர்கள் சென்றதை ஏற்க முடியாது. இது குறித்து, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்துடன் பேசி உள்ளேன். அவர், சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு, நம் தொண்டர்கள் நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கலாம். ஆனால், பள்ளி இயங்கும் நாட்களில், மாணவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. பள்ளிகளுக்குள் கட்சி சார்ந்த கொடிகளையோ அல்லது விளம்பரங்களையோ பயன்படுத்தாமல், பொருட்களை தலைமை ஆசிரியரிடம் அமைதியாக ஒப்படைக்க வேண்டும். மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அரசு பள்ளியில் காலை உணவுக்கு பதிலாக, 'பிஸ்கட் பாக்கெட்' வழங்கப்பட்டதாக தகவல் அறிந்தேன். மாணவர்களுக்கான காலை மற்றும் மதிய உணவு என்பது, வெறும் உணவு மட்டுமல்ல; அது மாணவர்களுக்கான ஊட்டச்சத்து; அது, ஆற்றல் தருவது. பிஸ்கட் என்பது வெறும் துணை உணவு மட்டுமே. அதனால், குறிப்பிட்ட நேரத்தில் உணவு சமைக்கவோ, ஏற்பாடு செய்யவோ முடியாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு உணவு வகைகளை தான் வழங்கி இருக்க வேண்டும்; பிஸ்கட் வழங்கக்கூடாது. அவ்வாறு ஏன் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. முழு விபரம் வந்த பின், உரியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில், கழிப்பறை இல்லாத வகுப்பறைகள் பயனற்றவை. நிதி ஒதுக்கி, புதிய நவீன கழிப்பறைகளை கட்டுவதுடன், மாதத்திற்கு ஒரு முறை அவை சரியாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

duruvasar
ஜூன் 22, 2026 20:30

பிஸ்கேட்டையும் நிறுத்த சொன்னா எப்படி தலைவரே ?


Vasan
ஜூன் 22, 2026 14:31

ஏதோ காரணத்தால் காலை உணவு திட்டமிடுதலில் பிழை, அதனால் சிலருக்கு கிடைக்கவில்லை, உடனே மாற்றாக பிஸ்கட் வழங்கியதற்க்கு நன்றி. இனி தவறு நடக்காமல் திட்டமிடல் வேண்டும், அதிக உணவு திட்டமிட்டு விரயமும் ஆகக்கூடாது.


கரீம் பாய், ஆம்பூர்
ஜூன் 22, 2026 10:32

சிலுவை அணிந்து வரும் மாணவர்கள் மாணவிகள் அணிந்துவரும், புர்க்கா இவைகள் எப்போது தடை விதிக்க படும்?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 22, 2026 09:11

உணவுப்பொருட்களை [அரிசி, பருப்பு, காய்கறிகள் / கீரை] அமுக்கிவிட்டதால் பிஸ்கட் .... இதுல என்ன விசாரணை ?


R K Raman
ஜூன் 22, 2026 08:23

பாராட்டுக்கள்


BHARATH
ஜூன் 22, 2026 10:30

எதுக்கு பாராட்டு???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை