உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈ.டி.,யை விமர்சிப்பது நோக்கம் அல்ல; டாஸ்மாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

ஈ.டி.,யை விமர்சிப்பது நோக்கம் அல்ல; டாஸ்மாக் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

'அமலாக்கத்துறை செய்யும் தவறுகளை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோமே தவிர, அவர்களை விமர்சிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qy5t0p1b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில், 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில், கடந்த மார்ச்சில் சென்னை, விழுப்புரம் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். நிர்வாக இயக்குநர் வீடு சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதன்பின், மே மாதம் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் திரைத் துறையைச் சேர்த்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என, 12க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை மே மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

அமலாக்கத் துறை தொடர்பான விவகாரங்களில், அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில், நாங்கள் ஏதேனும் சொல்ல முற்பட்டால், அமலாக்கத் துறைக்கு எதிராக தேவையில்லாத கருத்துகளை நீதிமன்றம் கூறுவதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகிறார். சுட்டிக்காட்டுகிறோம் நாங்கள் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை தான் விமர்சிக்கிறோம்; எந்த ஒரு தனி நபரையோ அல்லது அமைப்பையோ, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. வழக்கத்திற்கு மாறாக விஷயங்களை செய்யும் போது, அதை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். யாரையும் குறிப்பிட்டு விமர்சனங்களையும், கருத்துகளையும் கூற வேண்டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இதை தொடர்ந்து பேசிய அமலாக்கத் துறை வழக்கறிஞர், 'டாஸ்மாக் விவகாரத்தில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்' என்றார். அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். அதுவரை, அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் கூறினர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

ManiMurugan Murugan
ஆக 19, 2025 23:46

உச்சநீதிமன்றத்தில் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணியின் குற்றச்சாட்டு எதன் அடிப்படையில் விசாரணை என்பது தானே உச்ச நீதி மன்றத்திடம் ஒரு கேள்வி அமலாக்கத்துறை வேலை என்ன அதிகாரமற்ற ஆவனமற்ற தவறான முறையில் சேர்க்கப்படும் பணம் சொத்து கட்சிக் கூட விசாரிப்பது தானமுறை 40 வழக்குகள் டாஸ்மாக் ஊழல் அதை விசாரிக்க உண்மையா பொய்யா அறிந்துக் கொள்ள எங்கே செல்வார்கள் டாஸ்மாக் அலுவலகமா முதலமைச்சர் வீடா பதில் நீதிமன்றம் சொல்ல வேண்டும் அமலாக்கத்துறை 40 வழக்கை யும் பட்டியல் இட்டு இதன் சார்பாக என்று பதிவு செய்ய வேண்டியது தானே


Balamurugan Pandurangan
ஆக 19, 2025 16:17

correct


venugopal s
ஆக 19, 2025 15:51

உச்ச நீதிமன்றம் ....ப்பைக் கழட்டி உச்சந்தலையில் அடித்தாலும் அமலாக்கத்துறைக்கும் அவர்களுடைய எஜமானர்களுக்கும் புத்தி வரப்போவதில்லை.விமர்சனம் செய்தால் மட்டும் கவலைப்படப் போகிறார்களா?


GoK
ஆக 19, 2025 12:48

மோடி அரசு வந்ததிலிருந்து இதுநாள் வரை ஒரு பொருளாதார குற்றத்தில் ஒரு அரசியல்வாதி கூட சிறைக்கு போகவில்லை லல்லூ பிரசாத் தவிர... 2G இல் உள்ளே போனவர்கள் தாரை தப்பட்டையுடன் வெளியே வந்தார்கள் ...தெருவோர பாம்பாட்டி கீரிக்கும் பாம்புக்கும் சண்டை காமிக்கிறேன் என சொல்லி சொல்லி கடைசி வரை அது நடக்காது. அது போலத்தான் இதுவும். அரசியல் ஊழல் இந்தியாவின் அடையாளம். சத்தியமே வெல்லும் என்பதை உடனே மாற்றுங்கள் ஊழலே வெல்லும் என்று. ரூபாய் நோட்டில் காந்தியின் படத்தை நீக்கி கலைஞர் படத்தை போடுங்கள் அதிலாவது சத்தியம் வெல்லட்டும்


திகழ்ஓவியன்
ஆக 19, 2025 11:33

கேவலமா இருக்கு ED இன்னும் 4 வாரம் அவகாசம் கேட்பது ஏன் துணை ஜனாதிபதி காககா வா, தமிழக அரசு வாய்தா வாங்கும் என்று பார்த்தல் ED அவகாசம் கேட்குது


Mettai* Tamil
ஆக 19, 2025 12:48

ஊழலுக்கு முட்டு கொடுப்பதை விட்டுவிட்டு , கேவலமா இருக்கு ன்னு 60 வருசமா தமிழ்நாட்டில் ஊழல் செஞ்சுகிட்டு இருக்கிற ஊழல்வாதிகளை பார்த்து கேட்கவேண்டும்.அந்த ஊழல் பணத்தில் சிறுதொகையை வாங்கி ஓட்டு போடும் மக்களையும் பார்த்து கேட்கவேண்டும்


Narayanan
ஆக 19, 2025 10:42

கீழமை நீதிமன்றங்கள் வழங்குகின்ற தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் ஏன் தள்ளுபடி செய்கிறது . அப்போ இவர்களின் நீதிகள் ஏன் மாறுகிறது ? லஞ்ச ஊழல் வழக்குகளுக்கு ஏன்உச்சநீதிமன்றம் உறுதுணையாக இருக்கிறது ? சட்டம் ஒன்றேதான் .


john
ஆக 19, 2025 10:06

சூப்பர், நீங்க எங்க சார் சட்டம் பட்ச்சிங்க


Sundar R
ஆக 19, 2025 09:41

அமலாக்கத்துறையின் குற்றங்களை சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டுவதை விட, மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற அரசியல்வாதிகளை, அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது சுப்ரீம் கோர்ட் பொறுப்பு. 2021 முதல் இன்றுவரை, "இண்டி" கூட்டணியின் எத்தனை ஊழல் அரசியல்வாதிகளை சுப்ரீம் கோர்ட் அடையாளம் கண்டு தண்டித்துள்ளது.


GMM
ஆக 19, 2025 08:50

அமலாக்கத் துறை விசாரணை அதிகாரிகள் தவறுகளை கண்காணிக்க உயர் அதிகாரிகள் உள்ளனர். சட்ட விதிகளுக்கு பொருந்தாத கருத்துகள் தவறான கருத்துக்கள். டாஸ்மாக் ஒரு அரசு நிறுவனம். கவர்னர் அனுமதி இல்லாமல், தமிழக அரசு மேல் முறையீடு வழக்கு தாக்கல் ஒரு தவறான முன் உதாரணம். மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை முழுமை பெறாமல், நீதிபதி மனு ஏற்பது மற்றும் வழக்கறிஞர் வாதம் செய்வது மூலம் சட்டம் செயல் இழந்து விடும்.


shyamnats
ஆக 19, 2025 08:40

இந்த அமலாக்கத்துறையானது ஏதோ தனியார் அமைப்பு போலவும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது போலவும், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அரசியல் கட்சிகள் நாடகமாடுகின்றன. ஊழலை தடுப்பதற்கான அமைப்பை சுதந்திரமாக செயல் பட விடாமல் நீதி துறையும் தடைகள் போடுவது அதன் நம்பகத்தன்மையை, மக்கள் சந்தேக படும்படியாக உள்ளது. டாஸ்மாக்கில் பல கோடிக்கு ஊழல் எனும்போது அதை தீவிரமாக விசாரிக்க அனுமதிப்பதே சரியான நடவடிக்கையாகும்.


Mariadoss E
ஆக 19, 2025 08:54

உண்மை தான் ஆனால் எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமே குறி வைத்து நடக்கும் நடவடிக்கைகள் சந்தேகத்தை கண்டிப்பாக உருவாகும்.


V Venkatachalam
ஆக 19, 2025 09:30

இதுக்கு அரசியல் சாயம் எதுக்கு. என்னை ரெய்டு பண்ணுகிறார்கள் அவன்களை பண்ணவில்லை. ஸ்கூல் பசங்க டீச்சரிடம் என்னை கிள்ளிட்டான் அவனை கிள்ளல ன்னு அமர்க்களம் பண்ணுவான்கள். இங்கே முட்டு குடுக்குறவன்கள், அதை விட கேவலமா போயிட்டானுங்க..


சமீபத்திய செய்தி