உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றிவேல்....வீரவேல்... கோஷம் விண்ணைப் பிளந்தது: திருச்செந்துாரில் சூரனை முருகன் வேல் சம்ஹாரம் செய்தது

வெற்றிவேல்....வீரவேல்... கோஷம் விண்ணைப் பிளந்தது: திருச்செந்துாரில் சூரனை முருகன் வேல் சம்ஹாரம் செய்தது

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழா, லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் இன்று கோலாகலமாக நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2wp0flr9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான சஷ்டி விழா நவ.2ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நவ.,7 மாலை திருச்செந்தூர் கோயில் முன்புள்ள கடற்கரையில் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடந்தது. சஷ்டி மண்டபத்தில், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மதியம் 2:30 மணிக்கு சிவன் கோவிலில் இருந்து, சூரபத்மன், படை, பரிவாரங்களோடு, கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். மாலை, 4:40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து, கடற்கரைக்கு வந்தான். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்க, முதலில் கஜமுகசூரன், சுவாமியுடன் போர் புரிந்தான். தொடர்ந்து, பல்வேறு அவதாரங்கள் எடுத்து, போரிட்டு வீழ்ந்தான். முடிவில், சூரபத்மனாக முருகப்பெருமானிடம் போரிட்டான். ஆணவத்தை அழித்து, அவதார மகிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில், செந்திலாண்டவர் வேலால் சூரபத்மனை வீழ்த்தினார். அவன், சேவலாகவும், மாமரமாகவும் மாறி, முருகனிடம் தஞ்சம் அடைந்தான். சூரனின் தலையை முருகன் கொய்ததும், விரதமிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, விரதத்தை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Balasubramanian
நவ 08, 2024 05:40

அரசியல் அஜமுகி கஜமுகன் சூரபத்மன் இவர்களை எப்படி வீழ்த்துவது? வழிகாட்டி அருள் முருகா!


mindum vasantham
நவ 07, 2024 22:04

தளபதி விஜய் முருகர் வழிபாட்டிலும் ஈடுபாடு கொண்டவர் அவர் தாயாரும் வெற்றி பெறட்டும் அவர்கள்


Ramesh Sargam
நவ 07, 2024 19:40

சூரன் ஒழிந்தான். அதுபோல திமுகவும் ஒழியவேண்டும். என்று ஒழிவார்கள். யார் ஒழிப்பார்கள்.


Svs Yaadum oore
நவ 07, 2024 20:53

அண்ணாமலையார் ...


Anantharaman Srinivasan
நவ 07, 2024 21:07

அந்த செந்தில் முருகனையே விரதமிருந்து கேளு..


J.Isaac
நவ 08, 2024 11:04

சூரன் ஒழிகிறானோ இல்லையோ, பக்தர்களில் பாதி பேர் மது, புகைத்தல் விட்டால் டாஸ்மாக்கை மூடி அநேக குடும்பங்களில் ஒளி உதிக்கும்