உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தியாகம் பற்றி துரோகம் பேசுவதா? பன்னீர் செல்வம் கண்டனம்

தியாகம் பற்றி துரோகம் பேசுவதா? பன்னீர் செல்வம் கண்டனம்

சென்னை: தியாகம் பற்றி துரோகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: 45 சதவீதமாக இருந்த அ.தி.மு.க., ஓட்டு வங்கி இன்று 20 சதவீதமாக குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க முடியாது. அ.தி.மு.க., வீறுகொண்டு எழ பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் இணைய பண்புள்ள தலைமை தேவை.தியாகம் பற்றி துரோகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது . 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்ற வேண்டும். அ.தி.மு.க.,வை ஆட்சி கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம். இவ்வாறு பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kadaparai Mani
அக் 18, 2024 16:37

பார்லிமென்டரி தேர்தலுக்கும் சட்டசபை தேர்தலுக்கும் வேறுமாதிரி தமிழக மக்கள் ஓட்டளிப்பார்கள் .தேர்தல் நெருங்க நெருங்க ஆதிமுகவா திமுகவா எடப்பாடி பழனிசாமியா ஸ்டாலினா என்றாகிவிடும்


A.Gomathinayagam
அக் 18, 2024 14:10

மக்கள் அறிவார்கள் ஒன்று பட்டாலும் வாக்கு வாங்கி உயராது என .நடுநிலை வாக்காளர்கள் முடிவு தான் அடுத்த தேர்தலில் எதிரொலிக்கும்