உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்

போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: ''தி.மு.க.,விடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்றும் வகையில் அ.தி.மு.க., - பா.ஜ., வலுவான கூட்டணியாக உள்ளது'' என்று, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், வரும் 27ம் தேதி, ஹிந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிவபக்தர்கள் மாநாடு, ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி என கட்சியின் முப்பெரும் விழா நடக்கிறது. திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகத்தில், தமிழ் இல்லாமல் இல்லை. தேவாரம், திருவாசகம் பாட உள்ளனர். ஆகம விதிகள்படி தான் அங்கு கும்பாபிஷேகம் நடக்க வேண்டும்.திருச்செந்துார் கோவிலுக்கு, சிவ நாடார், 280 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளை செய்தார். ஆனால், தி.மு.க., அரசு, தங்களால் தான் நடப்பது போல், விளம்பரம் தேடுகிறது. கோவில் கும்பாபிஷேகங்களுக்கு தி.மு.க., அரசு நிதி ஒதுக்குவது கிடையாது. பக்தர்கள் தான் திருப்பணிகளை செய்கின்றனர். அரசு அனுமதி மட்டும் தான் கொடுக்கிறது.கல்வித் துறையில், தி.மு.க., அரசு திராவிட கொள்கைகளை புகுத்துகிறது. ஹிந்துக்கள் நடத்தும் கல்வி நிலையம் ஒடுக்கப்படுகிறது. பள்ளி கல்வி துறையில், 60 சதவீதம் கிறிஸ்துவர்கள் ஆதிக்கம் உள்ளது. ஏராளமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மதமாற்றம் செய்கின்றனர். பள்ளிக் கல்வித் துறையை கிறிஸ்துவர்கள், திராவிட இயக்கத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்.போதைப்பொருள் பயன்படுத்தியதாக சினிமா பிரபலங்களை கைது செய்துள்ளனர். ஆனால், ஜாபர் சாதிக், அமீர் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் பார்ட்டிகளில் போதைப்பொருள் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. போதை மற்றும் கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா துறை சிக்கி உள்ளது.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. இதில், குழப்பத்தை ஏற்படுத்த, தி.மு.க.,வை சார்ந்தவர்கள் சதி வேலையில் ஈடுபடுகின்றனர். அதை முறியடிக்கும் வகையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 234 தொகுதிகளிலும் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் வெற்றியடைய, ஹிந்து மக்கள் கட்சி துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 30, 2025 14:45

முதல்வரின் இரும்புக்கரம் ரிப்பர் செய்யப்பட்டு வரவிருக்கிறது ..பிறகு பாருங்கள் .. போதை கடத்தல் கும்பலை இரும்பு கரம் கொண்டு அடக்குவார்.. இல்லாவிட்டால் இன்னும் பதினைந்து வருடத்தில் இன்பநிதி முதல்வராகி அடக்குவார்


Madras Madra
ஜூன் 30, 2025 14:33

வருகிற படங்களோட லட்சனத்தை பாத்தாலே தெரியுது அது ஒரு கும்பல் பிடியில் தான் இருக்குது


Ramesh Sargam
ஜூன் 30, 2025 12:52

அந்த சினிமாக்காரர்கள் பிடியில் இளைஞர்கள் சீரழிகிறார்கள்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 30, 2025 13:13

உண்மை


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 30, 2025 11:50

போதை மற்றும் கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா துறை சிக்கி உள்ளதுஎன்பது உண்மை ..அதேபோல் தமிழக இளையோர் மத்தியில் அதிக போதை புழக்கம் உள்ளதுஎன்பதும் உண்மை ...


Mettai* Tamil
ஜூன் 30, 2025 10:06

போதையின் பாதையில் செல்ல வேண்டாம் ..ஓரமாக நம்ம கடைக்கு போயிருங்க ....


V RAMASWAMY
ஜூன் 30, 2025 09:34

மசூதிகளும் சர்ச்களும் இவர்கள் கருணையால் தான் நடைபெறுகிறது என்று அங்கெல்லாம் ஏன் விளம்பரப்பலகை வைப்பதில்லை? தமிழ் சினிமா பற்றி குறிப்பிடும்போது இன்னும் பல நல்ல முன்னேற்றங்கள் தேவை. தயாரிப்பார்களும் இயக்குனர்களும் சமூக பொறுப்புடன் செயல்படுவது குறைந்துவிட்டது. வில்லத்தனத்தை பாராட்டுவதுமான, கயமைத்தையும், தீய செயல்களையும் மோசடி களவு கற்பழிப்பு அடிதடி இவற்றை என்னென்ன முறைகளில் செய்யலாம் என்று கற்பிப்பதுபோன்ற காட்சிகளை நீக்க வேண்டும். வசனங்கள் பேசும்போது அவை புரியாத நிலையில் தேவையற்ற கர்ண கடூர பின்னணி இசையை நீக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய நல்வழிப்படுத்தக்கூடிய காட்சிகளை அறிமுகப்படுத்தவேண்டும். எங்கும் துப்புவது, குப்பைகளைக்கொட்டுவது குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து ஏளனப்படுவது, அறுவறுக்கத்தக்க வசனங்கள் இவற்றை அறவே நீக்க வேண்டும். சென்சார் போர்டும் மாநில அரசின் ஒத்துழைப்புடன் இன்னும் கண்டிப்புடன் நடந்து சமூகக் கேடு விளைவிக்கும் காட்சிகளை நீக்கினால் தான் ஒப்புதல் அளிக்கவேண்டும். மக்கள் இம்மாதிரி சமூகக்கேடு விளைவிக்கும் படங்களை நிராகரித்தாலே நன்மை பயக்கும்.


Svs Yaadum oore
ஜூன் 30, 2025 09:31

போதைப்பொருள் விற்பனை குறித்து பாடகி சுசித்ரா கூறியுள்ளார்....அவர் வெளிப்படையாக நேரடியாகத்தானே எவன் போதை பொருள் கொடுத்தது பற்றி பேசியுள்ளார் ...அவரையே சாட்சியாக வைத்து கொடுத்தவனை கைது செய்யுமா விடியல் ??......அதை செய்யாது ..அவனுக்கு ராஜ்ய உறுப்பினர் பதவி கொடுத்தது விடியல் ...இந்த விடியல்தான் ரொம்ப யோக்கியன் மாதிரி சமூக நீதி மத சார்பின்மை பேசுவது .......கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் விடியல் மந்திரியானால் இப்படித்தான் நடக்கும் ....


Pandi Muni
ஜூன் 30, 2025 09:06

சரியாத்தான் சொல்லியிருக்கார்.


சிந்தனை
ஜூன் 30, 2025 09:04

அருமை அத்தனையும் முக்கியமான கருத்துக்கள் அத்தனையையும் இந்துக்கள் ஆதரிக்கிறார்கள் உங்கள் எண்ணங்கள் வெற்றியடையட்டும்


sekar ng
ஜூன் 30, 2025 08:56

தமிழ் சினிமா உதயநிதி கையில் காவல்துறை ஸ்டாலின் கையில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை