உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மின் வாரிய கடனை அடைக்க செயல் திட்டம்; ஆணையம் தகவல்

தமிழக மின் வாரிய கடனை அடைக்க செயல் திட்டம்; ஆணையம் தகவல்

சென்னை 'மின் வாரியத்தின், 83,000 கோடி ரூபாய் கடனை அடைக்க, தமிழக அரசு செயல் திட்டம் வகுக்கும்' என, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தனியாரிடம் மின்சாரம் வாங்குவது உள்ளிட்ட காரணங்களால், தமிழக மின் வாரியம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. எனவே, புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, மின் வாரியத்தின் கடன், 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. இதேபோல், பல மாநில மின் வாரியங்கள் கடன்களை வாங்கியுள்ளன. இதனால், அவை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. எனவே, மாநில மின் வாரியங்களின் கடனை அடைக்க, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை தெரிவிக்குமாறு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை, டில்லியில் உள்ள மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கேட்டுள்ளது. அதற்கு ஆணையம் அளித்துள்ள பதிலில், 'மின் வாரிய கடனில் ஆணையம் அனுமதித்தது, 83,000 கோடி ரூபாய். அந்த கடனை அடைக்கவும், மின் வாரிய நிதி நெருக்கடியை சரிசெய்யவும், ஏற்கனவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது, மின் கட்டணம் உயர்த்தப்படாது. மின் வாரியத்தின் இழப்பை அரசு ஏற்கிறது. கடனை அடைக்கும் வழி வகை தொடர்பாக, அரசு செயல் திட்டம் வகுக்கும். இது, தயாரானதும் தெரிவிக்கப்படும்' என, தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழன்
செப் 14, 2025 20:50

தோட்டக்கலை விவசாய மின் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியும் மின் லவாரியத்தில் இவ்வளவு கடன் இருக்கிறது என்றால் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் வந்த வருமானம் யாருக்கு சென்றது என்ற கேள்வி அனைவரும் மத்தியில் விழுகிறது. ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்தால் இன்னும் மூன்று மடங்கு மின்கட்டணத்தை விவசாயத்திற்கு உயர்த்தினால் விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை கைவிட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைமை வரும் அப்பொழுது தமிழ்நாடு உணவு பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமல் பிச்சைக்கார மாநிலமாக மாறிவிடும்.விவசாயத்திற்கு மின் கட்டணம் இல்லை இலவச மின்சாரம் என்று யாராவது கருத்து தெரிவிக்கும் முன் உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளவும். தோட்டக்கலை விவசாய மின் இணைப்பு மின் கட்டணத்தை கட்டிய ரசீதுடன் ஆதாரத்தை சமர்ப்பிக்க நான் தயார்


sasikumaren
செப் 14, 2025 17:22

தமிழக மின்சார வாரியத்தில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் ஊழல் தான் எத்தனை லட்சம் மீட்டர்கள் கேபிள்கள் வாங்கினாலும் மின்சார கடத்தும் தெரு கம்பங்கள் வாங்கினாலும் எத்தனை ஆயிரம் சொந்த கட்டங்கள் கட்டினாலும் பணியாளர்கள் அதிகாரிகள் வேலைக்கு சேர்ந்தாலும் எல்லாமே லஞ்ச மயம் தான் என்ன செய்தாலும் தமிழக மின்சார துறை மீள முடியாது கடைசியில் மக்களிடம் பணத்தை பிடுங்க வேண்டியது பழைய சென்னையை தவிர ஒரு சில பகுதிகளில் மட்டுமே பூமிக்கடியில் செல்லும் கேபிள் வழி மின்சார வசதி இருக்கிறது தொண்ணூறு சதவீதம் பகுதிகளுக்கு கம்பம் வழி செல்லும் மின்சார வசதி மட்டுமே இருக்கிறது சிறிது மழை பெய்தாலும் மின்சார துண்டிப்பு தான்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 12:54

இலவச மின்சாரத்தை அறிவித்து கடனில் தள்ளிய அரசியல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து கடனை அடைக்க ஏற்பாடு செய்யணும் .....


Kasimani Baskaran
செப் 14, 2025 09:07

நிர்வாகம் என்று ஒன்று இருந்தால்தான் கடனை அடைக்க முடியும். நாடக கோஷ்டி + புரையோடிப்போயிருக்கும் ஊழல் == திவால்தான் ஒரே வழி.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 14, 2025 07:47

மாண்புமிகு சீமான் அவர்கள் மின் கம்பங்கள் மாநாடு நடத்தி அரசுக்கு விழிப்புணர்வு தர வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 14, 2025 07:46

முதலமைச்சர் ஒரு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு கடனை அடைக்க முதலீடு ஈர்த்து வரலாம். அந்த மூதலீடு 83000 கோடி என்றால் விளம்பரமும் நன்கு செய்யலாம். அப்படியே திராவிட செம்மல்கள் உருவ படங்களை திறந்து வைக்கலாம்.


visu
செப் 14, 2025 07:35

ஊழலை ஒழித்தால் போதும் எல்லா கடன்களும் சரியாகிவிடும்


Gajageswari
செப் 14, 2025 07:00

யார் அப்பன் வீட்டு காசு. என்னுடைய பொருள் என்னை கேட்காமல் எப்படி கடன் கொடுக்கப்பட்டது, வாங்கப்பட்டது. மக்கள் வரிப்பணத்தில் உருவாகிய மின்துறை, மக்கள் சொத்து


Rajasekar Jayaraman
செப் 14, 2025 06:07

ஒட்டு திருட்டுக்கு இலவச மின்சாரம் தருவது மின்சாரம் திருடும் கட்சிகாரணை காப்பது எல்லாத்தையும் சேர்த்து கேனை தமிழனை ஏமாற்றி கட்டண கொள்ளை அடிப்பது இதுவே திருட்டு திராவிட மிவாரிய திட்டம்.


சிட்டுக்குருவி
செப் 14, 2025 05:32

கடன் கொடுக்கும்போதே வாங்கிய கடனை எப்படி அடைக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு தான் வங்கிகளோ அல்லது வங்கிஅல்லாத நிதி நிறுவனங்களோ கடன்கொடுக்கும் .அந்த நிபந்தனகளை கடைபிடிக்காவிட்டால் அபராதவட்டியும் கொடுக்கவேண்டிவரலாம் .அப்படியிருக்கும்போது வாங்கியக்கடனை எப்படி திருப்பி கொடுக்கலாம் என்று இனிமேல் திட்டம் வகுப்பது என்பது விசித்திரமாக உள்ளது .கடனுக்காக கையெழுத்திட்ட கடன் பதித்திரத்தில் இந்த விபரங்கள் இருக்கும் .


புதிய வீடியோ