உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய சத்தீஸ்கர் முதல்வருக்கு முக்கனி வழங்கி தமிழக விவசாயிகள் பாராட்டு

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய சத்தீஸ்கர் முதல்வருக்கு முக்கனி வழங்கி தமிழக விவசாயிகள் பாராட்டு

தஞ்சாவூர்: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல, நெல் குவிண்டாலுக்கு 3100 ரூபாய் வழங்கி உள்ள சத்தீஸ்கர் முதல்வரை சந்தித்து தமிழக விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, விஷ்ணு தியோ சாய் முதல்வராக உள்ளார்.இவர் தனது தேர்தல் வாக்குறுதியில், ஆட்சிக்கு வந்தவுடன், நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3,100 ரூபாய் கொள்முதல் விலை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறினார்.அதன் படி, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான விஷ்ணு தியோ சாய், நெல் குவிண்டால் ஒன்றிற்கு 3,100 ரூபாய் கொள்முதல் விலையை விவசாயிகளுக்கு வழங்கினார். இதனால், இந்த ஆண்டு ஒரு கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் நெல் கொள்முதலில் புதிய வரலாறு படைத்தது. பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 3,100 ரூபாய் வழங்கியதற்கு, தமிழ்நாடு காவிரி சமவெளி மாவட்ட விவசாய பிரதிநிதிகளான, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தலைமையில், தஞ்சை, நாகை, திருவாரூர், விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சேரன், கும்பகோணம் வட்ட தலைவர் ஆதி கலியபெருமாள், இயற்கை வேளாண் விவசாயி சாமிநாதன், திருப்பந்துருத்தி சுகுமாரன், நாகை மாவட்டம் பாலாஜி, திருவாரூர் மாவட்டம் செங்குட்டுவன், விழுப்புரம் மாவட்டம் சீதாராமன், பாலாஜி உள்ளிட்ட ஒன்பது விவசாய சங்க பிரதிநிதிகள், சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாயை நேரில் சந்தித்து மா,பலா, வாழை ஆகிய முக்கனிகளையும், தென்னங்கன்றுகளை, நெல் மாலையை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.மேலும், சத்தீஸ்கர் மாநில உணவுத்துறை செயலாளர் அன்பழகன் ஆகியோரை விவசாயிகள் நேரில் சந்தித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: சத்தீஸ்கர் முதல்வரின் அறிவிப்பு இந்தியாவிலேயே முன்மாதிரியானது. இந்த அறிவிப்பினால் அம்மாநிலத்தில் நெல் உற்பத்தி அதிக அளவில் 2024- 25ம் ஆண்டு, 1.50 கோடி டன் நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதால் பாராட்டினோம் . தமிழக முதல்வரும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பட்சத்தில், அவரையும் பாராட்ட தயாராக உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venugopal s
மார் 13, 2025 15:27

அண்ணாமலை பத்து பாஜக அடிமைகளைத் திரட்டி அங்கு அனுப்பி உள்ளார்,இது சங்கிகளின் நாடகம் என்று எல்லோருக்கும் தெரியும்!


karupanasamy
மார் 13, 2025 16:15

நீவேனும்னா சுடாலினுக்கும் உதயநிதிக்கு இன்பநிதிக்கும் கள்ளச்சாராயம் காய்ச்சுனத்துக்கும், யார் அந்த சார் மேட்டருக்கும், மங்கை இயக்குனரின் திருமணம் கடந்த உறவின் மெத் உற்பத்திக்கும் பாராட்டு விழா நடத்து.


Youvaraj V
மார் 13, 2025 18:02

திராவிட அடிமையே எப்போது நீ திருந்துவாய்


Nagarajan D
மார் 13, 2025 14:22

நமக்கு கல்லா கட்டுறதுக்கும் பேனா வைக்கவும் நேரம் பத்தலை இதுல விவசாயிங்க பிரச்சனையை பத்தி யோசிக்க தடவை வேணுமில்ல...


ராமகிருஷ்ணன்
மார் 13, 2025 14:15

550 டூபாகூர் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை மடையர்களாக்கி ஆட்சியில் அமர்ந்த புளுகினி முதல்வர் தங்களுக்கு தாங்களே பாராட்டு நடத்தி போட்டோ சூட் எடுத்து அல்லக்கை ஊடகங்கள் மூலம் மக்களை முட்டாளாக்குகின்றார்கள்.


Natarajan Ramanathan
மார் 13, 2025 12:57

இதேமாதிரி மூவாயிரத்து நூறு கொடுக்க ரெடி..ஆனால் நீங்கள் குவிண்டாலுக்கு மூவாயிரம் ரூபாய் கமிஷன் கொடுக்கவேண்டும். சம்மதமா?


Ram
மார் 13, 2025 11:15

இந்த திராவிட நாதாரிகள் கமிஷன் வாங்காமல் எதையும் செய்யமாட்டானுக ... நாசமபோறவனுக


Kannan Chandran
மார் 13, 2025 11:02

விடியலின் முன்னுரிமை, சரக்கு-க்கு மட்டுமே, ஆக, அடுத்து சிறார்கள் மற்றும் குடும்ப பெண்கள் அருந்த வீரியம் குறைந்த சரக்கை அறிமுகம் செய்ய இருக்கிறார்,


N Annamalai
மார் 13, 2025 10:19

தமிழக அரசு அலட்சியம் செய்யும் துறை நெல் கொள்முதல் அதை அரிசியாக்கி விற்கும் துறை .தங்க முட்டையிடும் கோழி போல் .வீண் செய்யும் துறை வீணர்களை நீக்கினால் சரி செய்யலாம் .அரிசி ஒரு விலை நெல் உமி ஒரு விலை என்று வியாபாரம் செய்யலாம் அரசே .


kirupanantham kanthimathinathan
மார் 13, 2025 10:11

நெல் தமிழகத்தில் உற்பத்தி செய்திருக்க வேண்டும்


Kumar Kumzi
மார் 13, 2025 10:08

நம்பிள் துண்டுசீட்டு டுபாக்கூர் அப்பாவா சித்தப்புவா தாத்தாவா என்னனு கூப்பிடுறது துண்டுசீட்டில் எழுதி குடுத்த ஐநூறு ஆயிரம் வாக்குறுதிகளை வாசித்துவிட்டு என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதுனு கேட்டால் துண்டுசீட்டை தேடி போவார்


VENKATASUBRAMANIAN
மார் 13, 2025 09:44

இதுபறாறியெல்லாம் கவலை இல்லை. பெட்டி எவ்வளவு வந்தது பற்றி மட்டுமே கவலை. எப்படி ஏமாற்றுவது. இதுதான் திராவிட மாடல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை