உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி

காலியான கல்லுாரி பணியிடங்கள்; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: சாடிய அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு கல்லுாரிகளில் காலியான முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் நிர்வாகமும், கல்வித்தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயிலும் அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்காமல் அவை சீரழிவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.இவற்றில், 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆகவும், 2024 ஜூன் மாதத்தில் 60 ஆகவும் இருந்தன.கடந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 90 ஆக உயர்ந்திருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் 6 பேர் ஓய்வு பெற்றதால் காலியிடங்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருந்தால், அந்த இடத்தில் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படும் மூத்த இணைப் பேராசிரியருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். இதனால் மாதத்திற்கு சுமார் ரூ.38.40 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.4.60 கோடி வரை கூடுதலாக செலவு ஏற்படும். ஆனாலும், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது.உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் இருப்பதாக பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. 4 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளுக்கு ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப் படவில்லை; இரு ஆண்டுகளாக கல்லூரி முதல்வர்களை நியமிக்கவில்லை. அப்படியானால் தமிழகத்தில் யாருக்கும் பயனில்லாத இப்படி ஓர் அரசு எதற்காக தொடர வேண்டும் என்ற வினா தான் எழுகிறது.உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது. தமிழகத்தில் காலியாக உள்ள 96 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அதேபோல், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 9000-க்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram
ஜூலை 06, 2025 18:51

தமிழ்நாட்டின் அரசு பல்கலைக்கழகங்களில் படிப்பது இப்போது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதுபோல் ஆகிவிட்டது .... மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு மத்தியஅரசின் உலகபுகழ்வய்ந்த பல்கலையில் படியுங்கள்


Oviya Vijay
ஜூலை 06, 2025 15:11

லவ்பெல் செல்லம்... மொதோ போயி அப்பாவப் பாருயா செல்லம்... இங்கே மொதலுக்கே மோசம் போயிக்கிட்டு கெடக்கு... நீ என்னடான்னா இன்னும் அவியல் சாரி அரசியல் பண்ணனும்னு நெனைச்சுக்கிட்டு... போயா... போயா... போயி இனிமேயாவது மரத்தை வெட்டாம கொழந்த குட்டிகள படிக்க வைக்கப் பாருயா... நோக்கு புண்ணியமாப் போகும்... இம்புட்டு நாள் நோகாம நொங்கு தின்னுகிட்டு இருந்தீக... இனிமேலாவது அரசியல் தவிர்த்து உன்னோட ஜாதிக்காரய்ங்க எப்படி கஷ்டப்பட்டு ஒழைக்குற மாதிரி ஒடம்புல வேர்வை சிந்தி ஒழைச்சு சம்பாதி யா... அப்போ தான் எதுவா இருந்தாலும் ஒடம்புலயும் ஒட்டும்... மனசுல நிம்மதியும் கெடைக்கும்...


முக்கிய வீடியோ