உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக மாறிய தமிழகம்: அண்ணாமலை கண்டனம்

சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக மாறிய தமிழகம்: அண்ணாமலை கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது'', என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில், இரவு நேரக் காவலாளிகளான பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த கோவில் உண்டியலில் உள்ள பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்து வைக்கப்படும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவிலில், உள்ளூரைச் சேர்ந்த உயிரிழந்த இருவரும் தற்காலிக காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவுப் பாதுகாப்பு பணிக்கு, போலீசார் ஏன் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். முழுக்க முழுக்க, சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது. அரசுக்கோ, போலீசாருக்கோ, குற்றவாளிகள் பயப்படுவதில்லை. நான்கரை ஆண்டுகளாகச் செயல்படாமல், முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் துருப்பிடித்துவிட்டது. இத்தனை கையாலாகாத ஆட்சியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. இனிமேலும் காணப்போவதில்லை. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

kamal basha
நவ 11, 2025 20:48

ஹாய் அண்ணாமலை


முதல் தமிழன்
நவ 11, 2025 18:54

டெல்லி மேட்டர்


Sundar R
நவ 11, 2025 18:33

At present, huge number of Anti-social Elements are roaming in our Tamil Nadu State.


T.sthivinayagam
நவ 11, 2025 18:20

சமுக விரோதிகள் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார்கள் அவர்களுக்கு இங்கு யார் ஆதரவு தருகின்றனர் என்பதை அண்ணாமலை சார் தெளிவாக சொல்ல வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள்.


Sundar R
நவ 11, 2025 18:12

AnnamalaiJis observation on the presence of Anti-social Elements in Tamil Nadu is absolutely correct.


Priyan Vadanad
நவ 11, 2025 18:08

போகிற போக்கை பார்த்தால் இவர் திரும்பவும் வெல்வெட் சவுக்கால் தன்னையே அடித்துகொள்வார் போல தெரிகிறது.


Priyan Vadanad
நவ 11, 2025 18:05

இவர் அறிக்கை அரசியல்வாதி.


sengalipuram
நவ 11, 2025 17:35

இங்கு கருத்து போடும் ட்ராவிடிய அடிமைகளுக்கு தனி மனித தாக்குதலுக்கும் , தீவிரவாத தாக்குதலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை . Rs.200/- வாங்கி வாங்கி அறிவு வளராமல் வைத்துள்ளார்கள் . வாழ்க திராவிடன் மாடல் ..


chandran
நவ 11, 2025 19:28

இங்கே பிரச்சினை என்ன என்றால் தீவிரவாதம் சமூக விரோதிகளை விட பயங்கரமானது. தீவிரவாதத்தை ஏன் தலைநகரிலேயே கட்டு படுத்த முடியவில்லை என்பது தான் கேள்வி


ramesh
நவ 11, 2025 17:17

அண்ணாமலை அவர்களே உங்கள் கட்சி ஆட்சி செய்யும் டெல்லிஇல் தான் நேற்று காரில் குண்டு வெடிப்பு நடந்து பொது மக்கள் பலியாகி உள்ளார்கள் . அப்படி இருக்கும் பொது கூச்சமில்லாமல் சமூக விரோதிகளின் சொர்க்கபுரி தமிழ் நாடு என்று கூறுகிறீர்கள்


Kumar Kumzi
நவ 11, 2025 17:16

வரும் சட்டசபை தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்துமத ஜென்ம விரோதி துண்டுசீட்டு கோமாளியை விரட்டியடிப்போம்


Indian
நவ 11, 2025 18:36

எல்லோரும் சேர்ந்து உன்னை தான் விரட்ட போறாங்க


முக்கிய வீடியோ