உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உற்பத்தி துறையின் முன்னோடி தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

உற்பத்தி துறையின் முன்னோடி தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உற்பத்தி துறையின் லீடராக தமிழகம் மாறி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (அக் 07) சர்வதேச வணிக மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலகை ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. உற்பத்தி துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகம் நடத்தும் மாநாடு தான் உலக அளவில் பேசப்படுகின்றன. இந்தியாவின் வாகன உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 40 சதவீதம். 3ல் இரண்டு பங்கு மின்னணு டூவீலர் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. புதிய தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களை கண்டறிந்து புதிய தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தளமாக இந்த மாநாடு திகழ்கிறது. விண்வெளி- பாதுகாப்புத் தொழில் சர்வதேச மாநாடு தமிழகத்தில் தான் முதல்முறையாக நடக்கிறது. உலக அளவில் வளரும் பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகம் அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்ததோடு, உற்பத்தி துறையின் லீடர் ஆக மாறி வருகிறது. அனைத்து விதமான வளர்ந்துவரும் தொழில்களை கொண்ட மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குவதன் அடையாளம் தான் இந்த மாநாடு. தமிழகத்தில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. எதை செய்தாலும் ஆல்ரவுண்டாக, பெஸ்ட்டாக செய்வதால்தான் இது சாத்தியம் ஆகி உள்ளது. இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பெற்ற ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழகம் உறுதுணையாக இருக்கும். பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற உள்ளது. பாதுகாப்பு துறையில் முக்கிய மையமாக தமிழகம் மாறும் என்று நம்புகிறேன். உயர்தர ஜெட் இன்ஜின் பாகங்களில் இருந்து டிரோன்கள் உற்பத்தி வரை நடக்க உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

N S
அக் 07, 2025 12:50

ஊழலுக்கு உலகை ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது. உடன்பிறப்பு மற்றும் தலைமுறை உற்பத்தி துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. ஜெர்மனியிலும், துபையிலும், பாரெங்கும், தமிழகம் நடத்தும் இந்த மாநாடு தான் உலக அளவில் பேசப்படுகின்றன.


ஆரூர் ரங்
அக் 07, 2025 12:48

கள்ளக்குறிச்சி ஸ்டைல் உற்பத்தி மையங்கள் நிறைய உண்டு. 2 மந்திரிகள் மற்றும் ஒரு எம்பி சரக்கு உற்பத்தியில் முன்னணி.


திகழ்ஓவியன்
அக் 07, 2025 12:37

உற்பத்தி துறையின் முன்னோடி தமிழகம்: அதை சீர்குலைக்க தான் ஒன்றிய அரசு எல்லா தடங்கல்களும் கோவெர்னெர் மூலம் செய்து வருகிறது


திகழ்ஓவியன்
அக் 07, 2025 12:35

இங்கு வரவேண்டிய SEMICONDUCTOR INDUSTRYயை மிரட்டி குஜராத் கொண்டு சென்ற பிறகும் இப்படி, அனால் அங்கு போன அந்த இண்டஸ்ட்ரி புலம்புகிறது ஏன் எனில் அதற்கு தகுந்த INFRASTRUCTURE இல்லை, எடப்பாடி காலத்தில் மைனஸ் என்கிற GDSP RATION TODAY 11.60% இது எந்த மாநிலமும் ACHIVE பண்ண முடியாத விசய ம்


sengalipuram
அக் 07, 2025 12:34

உருட்டு , நல்லா உருட்டு.


Anand
அக் 07, 2025 12:33

ஊழல்துறையின் முன்னோடி திருட்டு தீயசக்தி...


Kumar Kumzi
அக் 07, 2025 12:24

ஆமா டாஸ்மாக் சரக்கை டார்கெட் வச்சி விற்பனை செய்து சாதனை படைத்த திராவிஷ மாடல் ஆட்சினு உலகுக்கே தெரியுமே விடியாத விடியல்


C G MAGESH
அக் 07, 2025 12:21

மது உற்பத்தியில் தானே


raja
அக் 07, 2025 12:07

இந்த வெட்டி பேச்சு கூடாது... புள்ளி விவரத்தை சொல்லணும்... அப்படி இருந்தா ஏ ன் ஓ எம் ஆர் ரோட்டில் இருந்த பல ஆலைகள் அடுத்த மாநிலத்துக்கு போயின என்ற விவரத்தையும் சொல்லணும்... நல்லா வாயாலேயே வடை சுட்டு பிலிம் காட்டுறீங்க....


Indian
அக் 07, 2025 12:25

உண்மையை சொன்னால் உனக்கு ஏன் வயிறு எரியுது ?


திகழ்ஓவியன்
அக் 07, 2025 12:32

இதற்கு நிதி ஆயோக் சொன்ன தமிழ்நாட்டின் GDSP RATE 11.6 % இது போதுமே படித்தவர்கள் புரிந்து கொள்ள


raja
அக் 07, 2025 12:01

இதனுடன் சேர்த்து பின் வருவனவற்றிலும் உற்பத்தி மற்றும் உபயோகத்தில் முன்னோடி மாநிலம் என்று பெருமித பட்டு கொள்ளலாம்.. சாராய உற்பத்தி மற்றும் உபயோகம்..கஞ்சா உற்பத்தி மற்றும் உபயோகம்... மெத் உற்பத்தி மற்றும் உபயோகம்...சுடோபெற்றின் உற்பத்தி மற்றும் உபயோகம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை