UPDATED : அக் 24, 2024 07:34 PM | ADDED : அக் 24, 2024 07:28 PM
சென்னை: '' விளையாட்டு துறையில் இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் புகழ்பெற்றுள்ளது,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எனது ஆட்சி விளையாட்டு துறையை பொழுதுபோக்காக பார்பது இல்லை. தமிழகத்தில் விளையாட்டு துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. உதயநிதி துணை முதல்வர் ஆனதில் விளையாட்டு துறையினரின் பங்கு உள்ளது. விளையாட்டு துறையும் வளர்ந்துள்ளது. உதயநிதியும் வளர்ந்துள்ளார்.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தமிழக அரசை பாராட்டினர். இதன் துவக்க மற்றும் நிறைவு விழா சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.விளையாட்டுதுறை மகத்தான சாதனை செய்து வருகிறது. தமிழகத்தில் நடத்தப்படும் விளையாட்டுபோட்டிகள் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகிறது. தொழில்முறை வீரர்களை உருவாக்க உதவுகிறது.விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தமிழக அரசு சார்பில் ஏராளமான உதவிகளை செய்து வருகிறோம். இந்த துறையில் இன்னும் ஏராளமான திட்டங்கள் செய்யப்படுகிறது. விளையாட்டுத்துறையில், இந்தியா மட்டும் அல்லாமல், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் புகழ்பெற்றுள்ளது. இதற்காக விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். தி.மு.க., ஆட்சியில் விளையாட்டுக்கு சமமாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.விளையாட்டு என்பதுபோட்டி அல்ல. உடல் வலிமையையும், மன வலிமையையும் தரக்கூடியது. குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை முதலிடம்!
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலப் பதக்கங்கள் வென்று சென்னை அணி முதலிடம் பிடித்தது. செங்கல்பட்டு 2ம் இடமும், கோவை 3ம் இடமும் பிடித்துள்ளன.