உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிர்வாக சீர்குலைவைத் தமிழகம் இனியும் தாங்காது: அண்ணாமலை

நிர்வாக சீர்குலைவைத் தமிழகம் இனியும் தாங்காது: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' நிர்வாக சீர்குலைவை தமிழகம் இனியும் தாங்கிக் கொள்ளாது,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவையில் வாகனம் மோதியதை தட்டிக்கேட்ட ஒரே காரணத்துக்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான சுராஜ் என்பவர் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.சிவகங்கையில் பணிபுரிந்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த மோனிஷ் ஸேரன், சுஷாந்த கோஹோரி ஆகிய இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள், நேற்று இரவு கஞ்சா போதையில் இருந்த கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.திமுகவின் பிரிவினைவாத அரசியலால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. வெறுப்புணர்வு இயல்பாக்கப்படுவதும் அரசியல் லாபத்துக்காக ஒருவரது அடையாளம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்போதும் வன்முறை நிகழ்வது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது. இத்தகைய நிர்வாக சீர்குலைவைத் தமிழகம்இனியும் தாங்கிக்கொள்ளாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

vivek
டிச 31, 2025 23:34

அது எப்படி ஓவியாரே...பிஜேபி அல்லது அண்ணாமலை பேரை கேட்டாலே இப்படி கதி கலங்குது


Oviya Vijay
டிச 31, 2025 22:48

தான் மறைந்தாலும் பல நூற்றாண்டுகள் கடந்தும் அதிமுக நிலைத்து நிற்கும்... இது ஜெயலலிதா அம்மையார் உதிர்த்த பொன்மொழி... அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு தான் கூறுவார்கள்... ஆனால் உண்மையில் நடப்பது என்ன... ஜெயலலிதாவோடு முடிந்து போனது அதிமுகவின் சகாப்தம்... தற்போது மிஞ்சி எஞ்சி இருப்பது அதன் எச்சம் மட்டுமே... ஓபிஸ் இபிஎஸ் தினகரன் சசிகலா அனைவருமே ஒன்றிணைந்தாலும் அதிமுக இனி மீண்டெழவோ பழைய நிலைக்குத் திரும்பவோ வாய்ப்பேயில்லை... அதே போல் திமுகவிற்கும் ஸ்டாலினுக்குப் பிறகு அஸ்தமனம் தான்... கலைஞர் மற்றும் ஸ்டாலினுக்குக் கிடைக்கும் வரவேற்பு உதயநிதிக்கு இருக்காது... ஸ்டாலின் காலத்திற்குப் பிறகு புதிய கட்சிகள் தலை தூக்க ஆரம்பிக்கும்... தேசியக் கட்சி என்ற அளவில் பாஜகவிற்கும் இதே நிலை தான்... குஜராத் முதல்வராக அறியப்பட்ட மோடியை மீடியாக்கள் இந்திய அளவில் மிகப்பெரிய விளம்பரம் தேடிக்கொடுக்க தற்போது பிரதமர் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறார்... ஆனால் அவர் காலத்திற்குப் பின்னே???... இதை என்றேனும் நாம் யோசித்துப் பார்திருக்கிறோமா??? கடைசியில் பாஜகவும் மோடிக்குப் பின்னே படுகுழியில் வீழும்... வாஜ்பாய் மற்றும் மோடி அளவிற்கு ஒருவரை பாஜகவில் இனி அடையாளம் காட்ட முடியாது... அதற்கடுத்தத் தலைவராக வருவதற்கு ஷாவுக்கு எல்லாம் தகுதியே கிடையாது... மோடியின் தலைமைக்குப் பிறகு பாஜகவிலும் குடுமிப்பிடி சண்டை ஆரம்பிக்கும்... ஆகையால் தான் நான் பலமுறை கூறி வருகிறேன்... தமிழகத்தில் பாஜக என்றைக்குமே காலூன்ற முடியாது என்று...


vivek
டிச 31, 2025 23:28

ஓவியரே பல முறை சொல்லியாச்சு... எவளோ கதறினாலும் உனக்கு இருநூறு மட்டுமே....


Manian
டிச 31, 2025 22:01

Annamalai is a capable leader who can retrieve TN from the present mess in which an individual is not safe.


புதிய வீடியோ