உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கொள்ளையடிப்பவர்களிடம் கொத்து சாவியைக் கொடுத்தது தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை,'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பள்ளிச் சுவர்களை இடியவிட்டு கல்வியில் சிறந்த தமிழகம் எனப் போலி பிம்பச் சுவரை எழுப்பும் திமுக அரசு!கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த துயரத்தில் இருந்தே தமிழகம் இன்னும் மீண்டு வராத நிலையில், கோவையில் உள்ள 100 அரசுப் பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் முற்றிலுமாக சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி விளம்பர விழா நடத்த நிதியிருக்கும் திமுக அரசுக்குப் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மனமில்லை என்பதற்கான மற்றொரு சான்று இது.எளிய பின்புலம் கொண்ட பிள்ளைகளின் புகலிடமாகத் திகழும் அரசுப் பள்ளிகளை எதற்கு இத்தனை அலட்சியத்துடன் ஆளும் அரசு கையாள்கிறது என்று புரியவில்லை. அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பிள்ளைகள் ஊற்று தோண்டி தண்ணீர் குடிப்பதையும், கழிவறை இல்லாததால் இயற்கை உபாதை கழிக்க பிள்ளைகள் திறந்தவெளிகளை நாடுவதையும், சத்துணவில் புழு, பூச்சி, பல்லிகள் மிதப்பதையும், புதிய கட்டடங்களின் மேற்கூரை பெயர்ந்து விழுவதையும் கண்டு நமக்கு தான் நெஞ்சம் பதறுகிறதே தவிர, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் அமைதியாக வேடிக்கை தான் பார்க்கிறார்கள்.அரசுப்பள்ளிகள் எனது கோட்டை என்று பஞ்ச் வசனம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைதியாகப் பதுங்கிவிட்டார், “நான் உங்கள் அப்பா” என சென்டிமென்ட் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின் விளம்பர போட்டோஷூட்களில் பிஸியாகிவிட்டார். இவர்களை நம்பி வாக்களித்த மக்கள் தங்கள் குடும்பத்துடன் நிற்கதியற்று நிற்கிறார்கள். அதுசரி, மக்கள் நலனைப் பேணுவதற்கா திமுக ஆட்சிக்கு வந்தது? கொள்ளையடிப்பவர்களிடம் கொத்து சாவியைக் கொடுத்தது தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை!இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

xyzabc
டிச 26, 2025 21:29

அந்த சாவிக்கொத்து இன்னும் 5 வருஷங்களுக்கு கொள்ளையர் கைகளில் தொடரும் என்றால், நிலைமை? மக்கள் இலவசங்களை மறந்து விழிப்புணர்வோடு இருப்பார்களா?


D Natarajan
டிச 26, 2025 21:14

200 rs உடன் பிறப்புகள் கதறல் அதிகமாக உள்ளது.


Gokul Krishnan
டிச 26, 2025 20:58

கொள்ளை அடிக்காத ஒரு அரசியல் கட்சியை காட்டுங்கள் பார்க்கலாம்


vivek
டிச 27, 2025 04:09

திராவிட சொம்பாக நீ மட்டும் இருந்தால் போதும்


முருகன்
டிச 26, 2025 20:49

உருட்டு இங்கே எடுபடாது தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கு முன் மாதிரி


vivek
டிச 27, 2025 04:11

அதை மக்கள் முடிவு செய்யட்டும்..முருகா


Prabhu
டிச 26, 2025 20:45

Sir.. Please ask Union government not to hold Tamil Nadu's education fund.


vivek
டிச 27, 2025 04:10

DMK will loot mr prabhu


சாமானியன்
டிச 26, 2025 20:37

ஜனநாயகமே வந்தாலும் நமது கட்சிகள் குடும்ப அரசியலையே திணிக்கிறார்கள். புதிய திறமையான நல்ல ஆளுமையை அடையாளம் காண முடிவதில்லை. கோடீஸ்வரனுக்கே சீட் கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி தூய அரசியல் வரும் ?


pachai thamizhan
டிச 26, 2025 20:30

உங்க தொகுதி பள்ளிக்கூடங்கள் எப்படி இரூக்கிறது .1200 கோடி ரூபா செலவில் நெல்லை ஸ்மார்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டிலே என்ன வேளை நடந்தது என்று திரு நைனார் நாகேந்திரன் சொல்ல முடியுமா .


M.Sam
டிச 26, 2025 19:48

தமிழ்நாட்டின் வரலாறு முதல உனக்கு தெரியுமா உனக்கு ஒரு புண்ணாக்குகளும் தேறியது நீ எல்லாம் வந்து


Mannan
டிச 26, 2025 19:42

கர்நாடக மக்கள் உங்களிடம் சாவியை கொடுத்த போது நீங்கள் என்ன செய்தீர்கள்?


ssh
டிச 26, 2025 19:29

இப்போதைக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பிழை நயினார் நாகேந்திரன் தாங்கள் பாஜக தலைவர் ஆனதுதான்.


முக்கிய வீடியோ