உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் தமிழகத்தின் வளர்ச்சி; எச்சரிக்கிறார் அண்ணாமலை

10 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் தமிழகத்தின் வளர்ச்சி; எச்சரிக்கிறார் அண்ணாமலை

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்த முதல்வர் விஜய், சென்னையின் 2வது புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து தேர்வு செய்ய வேண்டும் என்று 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை; பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார். சென்னையின் 2வது விமான நிலையத்தை அமைப்பதற்கு மாற்று இடம் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். புதிய விமான நிலையம் அமையும் இடத்தை தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், தமிழகத்தின் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. எனவே, மாற்று இடத்தை முன்பே பரிந்துரைத்திருந்தால், மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xikul8qw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பரந்தூருக்குப் பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசு நிர்வாக முடிவு எடுத்தாலும் கூட, ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, மத்திய அரசிடமும், சட்டப்பூர்வ அமைப்புகளிடமும் ஒப்புதல் பெற்று, டெண்டர் கோரி, நிலம் கையகப்படுத்தி, உரிமங்களைப் பெற்று, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். இதனிடையே, மற்ற மாநிலங்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி விடும் நிலை உருவாகியுள்ளது.அதேபோல, தற்போது உள்ள சென்னை விமான நிலையமும், போதுமான இடவசதியுடன் இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஹைதராபாத் (5,500 ஏக்கர்), டில்லி (5,100 ஏக்கர்) பெங்களூரு (4,000 ஏக்கர்), நவி மும்பை (2,866 ஏக்கர்) என மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையம் வெறும் 1,300 ஏக்கர் நிலப்பரப்பை மட்டுமே கொண்டுள்ளது. ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்த சென்னை, தற்போது அதிகளவில் பயணிகளை கையாளுவதில் 5வது இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸி வேகள் மற்றும் ஏரோ பிரிட்ஜ்கள் இல்லாததால் 'கோட் எப்' விமான நிலையமாக வகைப்படுத்தப்படவில்லை, இதனால் பெரிய விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாத நிலை உள்ளது. எனவே, சென்னைக்கான 2வது விமான நிலையத்திற்குப் பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்கும் பணிகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கட்சிகள் வரலாம், போகலாம். அரசுகள் மாறும். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, ​​மோசமான கட்டமைப்புகளுடன் கூடிய விமான நிலையம் இருந்து விடக் கூடாது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு தேவைப்படும் 5,746 ஏக்கர் நிலத்தில், தமிழக அரசு 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதாக அண்மையில் கூறப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட இந்த நிலத்தை வைத்து அரசு என்ன செய்யப் போகிறது?, இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

manian
ஆக 25, 2026 11:25

Modi builds new airports.Vijay stops them.


Jagan
ஆக 24, 2026 21:30

சர்வதேச விமான நிலையம் ஸ்ரீ சிட்டியில் கட்டலாம். அரக்கோணம் 79 கிமீ ஆனால் ஸ்ரீசிட்டி 68 கிமீ . ஆந்திராவில் வேலை சீக்கிரம் நடக்கும். சர்வதேச விமானநிலையம் தமிழ்நாட்டுக்கு பட்டா போட்டு கொடுக்கப்படவில்லை.


MSR
ஆக 24, 2026 21:09

இப்போது இருக்கும் ஏர்போர்ட் விரிவாக்கம் செய்தால் போதுமானது. அந்த விரிவாக்கம் 50 ஆண்டு கால வளர்ச்சியை பூர்த்தி செய்யும் விதமாக இருக்க வேண்டும். பயணிகள் மற்றும் சரக்கு தேவைகளுக்கு ஏற்ப.


Sivagiri
ஆக 24, 2026 20:11

பெரிய ஏர்போர்ட் இருந்தால்தான் - தமிழ்நாட்டுக்கு வருவேன்னு யார் சொன்னார்களா ? , யாருமே கம்பளைண்ட் பண்ணல , அவங்க பாட்டுக்கு பிளைட்ல இறங்கி அவங்க அவங்க வீட்டுக்கு போயிட்டே இருப்பாங்க . . . அண்ணாமலை வேணும்னா பாம்பே ஏர்போர்ட்ல இறங்கி , அங்க இருந்து சென்னைக்கு வந்திக்கலாம் . . . சரக்கு போக்குவரத்துக்கு மட்டும் தனியா வேற எங்கயாவது ஏர்போர்ட் கட்டீட்டு , மீனம்பாக்கத்தை முழுவதும் பயணிகள் போக்குவரத்துக்கு மட்டும் யூஸ் பண்ணிக்கலாம் . . .


Kasimani Baskaran
ஆக 24, 2026 19:59

திராவிடனுக்கு விமான நிலையம் பணம் பண்ண முடியாத, தேவையில்லாத ஆணி.


needhi rajan
ஆக 24, 2026 19:38

முதலமைச்சர் விஜய் அவர்களே, ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க ..ஆல் சவுத் ஸ்டேட் முன்னாடி இருக்காங்க


chinnamanibalan
ஆக 24, 2026 19:18

சென்னை அருகே விமான நிலையத்தை அமைக்க எந்த ஒரு இடத்தை தேர்வு செய்தாலும், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு ஒருபுறம், சுயநலம் சார்ந்த அரசியல்வாதிகள் எதிர்ப்பு மறுபுறம் என எதிர்ப்பு தொடரவே செய்யும். இந்நிலையில் தமிழ் நாட்டின் மையப் பகுதியான திருச்சி அருகே விமான நிலையத்தை அமைப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும். ஆனால் எது எப்படி இருப்பினும் தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் பின்தங்கி போகும் என்ற அண்ணாமலையின் கருத்து மிகவும் சரியானதே


Jayakumar J
ஆக 24, 2026 18:34

அரசியல் ரீதியான மாபெரும் தவறு


Nesan
ஆக 24, 2026 18:22

உமது காலெக்ஷனுக்கு, நீர் துடிக்கிறீர்?


spr
ஆக 24, 2026 17:37

இப்படியொரு முக்கியமான திட்டமாக இருந்தால் செயற்பாடுகளை துரிதமாக்கி அதனை அமுல்படுத்துவதுதானே மத்திய அரசுக்கும் முக்கியமான கடமை அல்லவா சென்னையில் இடம் கிடைக்கவில்லையென்றால் தொழில் நகரமான கோவையை தேர்வு செய்யலாமே சென்னையில்தான் பன்னாட்டு விமான நிலையம் இருக்க வேண்டுமென்பது என்ன கட்டாயம் எத்தனை போட்டால் வெளி இருக்கிறது பரந்தூர் மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டுமா அவரவர் வீடு நிலம் பறிபோனால் மட்டும் அடிவயிறு பற்றி எரிகிறதோ அவசியமானால் தமிழ் நாட்டின் தலைநகரைக் கூட கோவைக்கு மாற்றிக் கொள்ளலாமே இங்கே இருப்பவர் பலரும் அங்கிருந்து வந்தவர்கள் என்பதை தீபாவளியும் பொங்கலும் நிருப்பிக்கின்றனவே இங்கே கொஞ்சம் நெரிசல் குறையும் நகரும் தூய்மையாகும்