உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மின் நுகர்வு ஓராண்டில் 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு

தமிழக மின் நுகர்வு ஓராண்டில் 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மின் நுகர்வு, 2023 - 24ல் 11,096 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதற்கு 'ஏசி' சாதனங்கள், மின்சார வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பே காரணங்களாக அமைந்துள்ளன. தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. மாநிலம் முழுதும் ஒரு நாள் அதாவது 24 மணி நேரமும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு மின் நுகர்வு எனப்படுகிறது. தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, கோடை வெயிலால் இந்தாண்டு ஏப்ரல், 30ல், 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.சமீப காலமாக, சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கவும், பெட்ரோல் மற்றும் டீசலால் ஏற்படும் செலவை குறைக்கவும் பலரும், இ.வி., எனப்படும் மின்சாரத்தில் ஓடும் பைக், கார்களை வாங்கி வருகின்றனர். இந்தாண்டு தமிழகம் உட்பட நாடு முழுதும் லோக்சபா தேர்தல் நடந்தது. தமிழகத்தில் ஏப்ரல், 19ல் தேர்தல் நடந்ததால், மார்ச்சில் தேர்தல் பிரசாரம் நடந்தது.அம்மாதம் வெயில் கடுமையாக சுட்டெரித்தால் வீடு, அலுவலகங்களில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு வழக்கத்தை விட மிகவும் அதிகம் இருந்தது.இதுபோன்ற காரணங்களால், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த, 2023 - 24ம் நிதியாண்டில், தமிழக மின் நுகர்வு, 11,096 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுவே, 2022 - 23ல், 10,354 கோடி யூனிட்டாக இருந்தது. கடந்த ஆண்டில் மட்டும் கூடுதலாக, 742 கோடி யூனிட்கள் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Loganathan Kuttuva
நவ 24, 2024 08:34

வீடுகளில் வணிக இடங்களில் சோலார் பானல் நிறுவி மின்சாரம் பெறப்படுகிறது .அதை மென்மேலும் ஊக்குவித்தால் மின்சார பயன்பாடு EB மூலம் பெறுவது குறையும் .


Mohammad ali
நவ 24, 2024 08:31

ஊரெல்லாம் தெரு விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டு உள்ளது . கேட்க ஆளில்லை


Kasimani Baskaran
நவ 24, 2024 07:44

இது மின்சாரம் கடைசியில் நுகர்வோருக்கு சென்று சேர்வது. அரிசி 2000 கோடிக்கு மேல் சிந்தி வீணானது போல மின்சாரம் எவ்வளவு வீணானதோ தெரியவில்லை.


chandrasekar
நவ 24, 2024 07:11

எவ்வளவு யூனிட்டுகள் நாங்கள் செலவழித்தாலும் குறைந்த விலையில் கிடைக்கும் ஏற்கனவே உள்ள காற்றாலை மின்சார உற்பத்தியை முழுவதும் வாங்கி விநியோகிக்க மாட்டார்கள் புதிதாக காற்றாலை போடுவதற்கு அதானியுடன் ஒப்பந்தம் போடுவார்கள். ஏன் என்று எல்லோருக்கும் தெரியும்


சமீபத்திய செய்தி