உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டாஸ்மாக் ஊழியர்கள் 2,000 பேருக்கு நோட்டீஸ்

 டாஸ்மாக் ஊழியர்கள் 2,000 பேருக்கு நோட்டீஸ்

சென்னை: மதுக்கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட, 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு, டாஸ்மாக் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுக்கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதலாக பணம் வசூலித்ததாக எழும் புகார்களுக்கு ஆளான பணியாளர்கள் மீது, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை 250க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், கடந்த வியாழக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் பல பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, மதுக்கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட, 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், இரு நாளுக்குள் விளக் கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, அவர்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை