உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ஆகியோர் தப்பியோடியது ஏன்' என்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.கோவை வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; டாஸ்மாக் ஊழலை பற்றி நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் அதில் அமலாக்கத்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கி உள்ளனர். அதில் சம்பந்தப்பட்ட துணை முதல்வர் நண்பர்களாக இருக்கக்கூடிய ரத்திஷ், ஆகாஷ் ஆகியோரை விசாரித்தால் தெரியும் என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது.ஆனால் ஆகாஷூம், ரத்திஷூம் லண்டனுக்கு போய்விட்டதாக சொல்கின்றனர். சிலர் இங்கேயே இருப்பதாக சொல்கின்றனர். துணை முதல்வர் உதயநிதி, நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈடிக்கும்(அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்.2011ம் ஆண்டு தேர்தல் நடக்கும்போது மாடியில் ஈடி ரெய்டு நடந்து கொண்டு இருந்தது. கீழே அதன் பேச்சுவார்த்தை ஓடிக் கொண்டு இருந்தது. ஆனால் அன்று மட்டும் ஈடிக்கு பயந்துதான் பேச்சு வார்த்தையை முடித்தார்களா என்று தெரியவில்லை. அன்று முதல் இன்று வரை ஈ.டி. மீது பயம் உள்ளதால் தான் பயப்பட மாட்டோம் என்று உதயநிதி சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் ரத்தீஷ், ஆகாஷ் ஏன் பயந்து வெளிநாட்டுக்கு போக வேண்டிய அவசியம் என்ன? என்றார்.அப்போது நிருபர் ஒருவர், 'ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவித்துள்ளனர், அண்ணாமலைக்காக அ.தி.மு.க.,விடம் ராஜ்ய சபா சீட் கேட்பீர்களா' என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் வருமாறு: அதாவது இந்த ராஜ்ய சபா, தேர்தல் கூட்டணி இதை பற்றி எல்லாம் தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்ல முடியாது. இதை எல்லாம் எங்கள் தலைமை முடிவு செய்யும். எங்களிடம் இருப்பது 4 எம்.எல்.ஏ.,க்கள்தான். தலைமை என்ன சொல்கிறதோ அதன் படி கேட்போம். அதிமுகவுடன் நாங்கள் இப்போது கூட்டணியில் இருக்கிறோம். அதிமுக ஆதரவு என்றால் கண்டிப்பாக ஆதரவு கொடுப்போம் என்று கூறினார்.தொடர்ந்து அவர் கூறியதாவது; நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கி அறிவிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சரிடம் பேசுவோம். எவ்வளவு இலகுவாக மாற்ற முடியுமோ அவ்வாறு செய்ய முயற்சிப்போம். திமுக ஆட்சியினால் மக்களுக்கு நிறைய சிரமங்கள் இருக்கிறது. சொத்து வரி உயர்வு 300 மடங்கு கூட்டியுள்ளனர். மின்சார கட்டணம் ஒவ்வொரு வருஷமும் 6 சதவீதம் கூட்டுகின்றனர். தொழிற்சாலைகள் நடத்த முடியாது.ஹோட்டல் நிர்வாகங்கள் நிச்சயமாக நடத்த முடியாது.கட்ட பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல் எல்லாம் இந்த ஆட்சியில் அளவுக்கு அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை காவல் துறையால் பராமரிக்க முடியவில்லை. இந்த ஆட்சி மக்களுக்கு விரோதமாக இருக்கிறது. ஆகவே எல்லா கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கையாக நாங்கள் வைக்கிறோம். கல்வி நிதி பிரச்னையில் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மும்மொழிக் கொள்கையில் எவ்வளவு பணம் செலவு செய்கிறோமோ அதை தான் இவர்கள்(தமிழக அரசு) கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆண்டுதோறும் கொடுக்கக்கூடிய தொகையை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். முதல்வர் டில்லி சென்று பிரதமரை சந்தித்த போது இதுகுறித்து விளக்கி இருப்பார் என்று நம்புகிறோம். அவர் என்ன பேசினார் என்பது எங்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

pmsamy
மே 28, 2025 09:30

this is vacation time


Minimole P C
மே 28, 2025 07:42

Those who claim their honesty in Tasmac operations and no fear for EDs raid, why they obtain stay after stay at different courts and the concerned underground people shall go aborad? I feel those who support DMK are born dynasty idiots.


Kasimani Baskaran
மே 28, 2025 04:05

இதில் கேடித்தனம் மறைத்து இருக்கிறது என்பதை உதார் விடும்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும்.


ராஜா
மே 28, 2025 00:46

நிரவ் லலித் ஏ1ஏ2 மற்றும் நித்தி இன்னும் பல கேடிகள் உண்டு என்பதை ஊர்ரிந்த உண்மை தான்


என்னத்த சொல்ல
மே 27, 2025 21:55

பா ஜா க அரசு அவர்களை எப்படி வெளிநாடு செல்ல அனுமதி கொடுத்தது? எந்த நாட்டுக்கு போய் இருக்கிறார்கள் என மத்திய அரசுக்கு தெரியாதா.. என்ன நைனா, இப்படி படுத்ததரையே...


ஆரூர் ரங்
மே 27, 2025 22:31

எல்லாப் பயணிகளும் தனித்தனியாக அரசின் அனுமதி பெற்றா.பயணிக்கின்றனர்? குற்றப்பத்திரிகை தாக்கல் அல்லது வழக்குபதிவாவது செய்யப்பட்டிருந்தால் மட்டுமே விமான நிலையத்தில் தடுக்க முடியும். துவக்க நிலையில் சட்டப்படி தடுக்க வழியில்ல. லஞ்சம் வாங்கிக் கொண்டு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருகிற நாடுகள் ஏராளம்.


துர்வேஷ் சகாதேவன்
மே 27, 2025 21:52

அய்யா மாட்டி விட்டாரே அண்ணாமலை அன்றே கணித்து நீ தான் அடுத்த தலைவலி அவருக்கு என்று , இப்படி தான் KT ராகவனுக்கு ஒரு வீடியோ சாப்டர் கிளோஸ் , அந்த 4 கோடி என்ன ஆச்சு , முதலில் கதையை ப்பார் ஸ்டாலின் இடம் கெஞ்சி அதில் இருந்து தப்பித்த


Raja k
மே 27, 2025 21:43

வெளிநாடு தப்புச்சு போயிட்டாரா? அவரை தப்பிக்க விட்டது யார்? உங்க ஜி அரசாங்கம்தானே, அவர் தப்பி போகும் அளவிற்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது உங்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தானே, பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களையும் தப்பிக்க விட்டாச்சு, இப்போ இவரும் வெளிநாடு தப்பி போயாச்சு, ஆக உள்துறையின் கையலாகதனமே இதற்கு காரணம், இதற்கு பொறுபேற்று உங்க உள்துறை அமைச்சர் ஏன் இன்னும் ராஜினமா செய்யாமல்,, பதவியில் ஒட்டிக்கொண்டு உள்ளார்??


Minimole P C
மே 28, 2025 07:43

Do you know what is Government and how it functions?


Bala1 C
மே 27, 2025 21:16

அய்யா அந்த அஞ்சு கோடி என்னாச்சுன்னு கேட்டு சொல்லுறீங்களா ?


chinnamanibalan
மே 27, 2025 20:50

டாஸ்மாக் நிறுவனம், போக்குவரத்து நிறுவனம், மின் வாரியம் போன்றவைகளில் மலிந்துள்ள ஊழலை நாடு நன்கறியும். இன்று பல லட்சம் கோடி ரூபாய் கடனில் அரசு மூழ்க காரணம், நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் ஆகியவைதான்.


Ramesh Sargam
மே 27, 2025 20:37

வெளிநாடு தப்பியது ஏன்? ஆதாரங்களை அழிக்கத்தான். வெளிநாட்டில் ஆதாரமா? ஆம், அங்குள்ள வங்கிகளில் பினாமி பெயரில் பணம் சேமித்து வைத்திருப்பார்களே, அது சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்டுகளை அழிக்கத்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை