உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சம்பளமின்றி வேலை; விலகும் பயிற்றுநர்கள் ஹைடெக் ஆய்வகங்களால் திண்டாடும் ஆசிரியர்கள்

சம்பளமின்றி வேலை; விலகும் பயிற்றுநர்கள் ஹைடெக் ஆய்வகங்களால் திண்டாடும் ஆசிரியர்கள்

கோவை: மத்திய அரசின் நிதிஉதவியுடன், தமிழக அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட, 'ஹைடெக்' ஆய்வகங்கள், பயிற்றுனர் பற்றாக்குறையால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

அதிக பணிச்சுமை

தமிழகத்தில், 6,000க்கும் மேற்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 'ஹைடெக்' ஆய்வகங்கள் தலா, 6.04 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளன.நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆய்வகங்களில் 10, மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்களில், 20 கம்ப்யூட்டர்கள் உள்ளன.இந்த ஆய்வகங்களை நிறுவுவதில் இருந்து தேவையான கம்ப்யூட்டர்கள், புரொஜக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவது மற்றும் பயிற்றுநர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகள், 'கெல்ட்ரான்' என்ற நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது.பல பள்ளிகளில் ஹைடெக் ஆய்வக பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிக பணிச்சுமை, சரியாக ஊதியம் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால், பயிற்றுநர்கள் பணியில் தொடர ஆர்வம் காட்டவில்லை. இதனால், ஆய்வகங்களை பயன்படுத்த முடியாமல் தலைமையாசிரியர்கள் உள்ளனர்.

ஆய்வக பயிற்றுநர்கள் கூறியதாவது:

கடந்த, 2024ல் தேர்வு நடைபெற்று கவுன்சிலிங் வாயிலாக பணியில் சேர்ந்தோம். 11 மாதங்களுக்கு ஒப்பந்தப்படி, மாதம், 11,400 ரூபாய் சம்பளம்; பிடித்தம் போக, 9,700 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.

நிறைய சிக்கல்

ஒவ்வொரு மாதமும், 7ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், மாத இறுதியில் சம்பளம் வழங்கப்படுகிறது. சில இடங்களில் இரண்டு மாதம் கூட சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் பயிற்றுநர், இரண்டு ஆரம்பப்பள்ளிகளை சேர்த்து கவனிக்க வேண்டும். ஸ்மார்ட் போர்டு, எமிஸ் உள்ளிட்ட பணிகளையும் கவனிக்க வேண்டும்.ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மற்றொரு பள்ளியில் இருந்து அழைப்பு வரும். இதனால், நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த நிலை அனைத்து இடங்களிலும் தொடர்கிறது. எங்களுக்கு பயிற்சிகளும் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளரிடம் பலமுறை புகார் அளித்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kutty Kutty
ஜூலை 20, 2025 14:08

ஆம் ஹய் டேக் லேப் அசிஸ்டன்ட் வேலை மட்டும் அல்லாமல் பள்ளியில் உள்ள மற்ற வேலைகளையும் தருகின்றனர் உதாரணமாக மத்திய உணவு திட்டத்திற்கு வரும் அரிசி பருப்பு வாங்கி வைப்பது, ஆசிரியர்களின் ஐடியில் லாகின் செய்து அவர்கள் பயில வேண்டிய பயிற்சியை நாங்கள் பயின்று பதில் அளிக்க வேண்டும், மாணவர்களுக்கு இலக்கிய மன்ற போட்டிகளுக்கு பயிற்சி அளிப்பது, வேலும் ஜெராக்ஸ் எடுப்பது, இவர்கள் நடத்தும் நிகழ்வுகளுக்கு ஃபோட்டோ எடுப்பது, இவர்கள் முதியோர் கல்வி எடுக்க ஊருக்குள் சென்று மக்களை கூட்டி வருவது, மேலும் காலை வழிபாடு செய்ய செய்திகள் எழுதுவது என்று பல வேலைகள் ஒரே சமயத்தில் தருகின்றனர் எங்களை அடிமைகள் போல் நடத்துகின்றனர் நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்


vbs manian
ஜூலை 20, 2025 09:17

போலி விளம்பரம் செய்து ஜொலிக்க முயல்கிறது பள்ளி கல்வித்துறை. அரை வேக்காடு திட்டங்கள் மக்கள் வரிப்பணம் விரயம்.


Sampath
ஜூலை 20, 2025 07:11

ஒரு பிட்டர் என்னிடம் 1200 ரூபாய் வாங்குகிறார். 24 நாட்கள் வேலை செய்தால் அவருக்கு 28800 ரூபாய் கிடைக்கும். உங்க வீட்டை விட்டு வெளியே வாருங்கள்


Kasimani Baskaran
ஜூலை 20, 2025 07:10

மனித உரிமை எங்கள் மூச்சு என்பார்கள் - அதே சமயம் அரசாங்கமே ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் வேலைக்கு எடுப்பார்கள். மக்கிப்போன குப்பைகளை வைத்து மாடல் ஆட்சி நடக்கிறது.