உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

மயிலாடுதுறை:சீர்காழி அருகே ரயில் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொண்டத்தூர் பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ஆனந்த் .23. இவர் இன்று மதியம் வைத்தீஸ்வரன் கோவில் ஆனந்த தாண்டவபுரம் இடையே ரயில் பாதையை கடந்த போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன் வழக்கு பதிவு செய்து ஆனந்த் எதற்காக ரயில்வே பாதையை கடக்க முயன்றார்? விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர் இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை