உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்ற ரூ.12 கோடி கோவில் நிலம் மீட்பு

பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்ற ரூ.12 கோடி கோவில் நிலம் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருநறையூரில், ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 12 கோடி ரூபாய் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, பிளாட் போட்டு விற்பனை செய்த முகமது சலீம் என்பவரிடம் இருந்து மீட்ட அதிகாரிகள், கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநறையூரில், ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 57,063 சதுர அடி இடத்தை கடந்த பல ஆண்டுகளாக, முகமது சலீம் குடும்பத்தினர் குத்தகைக்கு வைத்து இருந்தனர். குத்தகை காலம் முடிந்தும் இடத்தை காலி செய்யாமல், சிலருக்கு அந்த இடத்தை பிளாட் போட்டு விற்றுள்ளார். இதில் சிலர் வீடு கட்டி வந்துள்ளனர். இதையறிந்த கோவில் நிர்வாகம்,முகமது சலீமிற்கு, நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் முறையாக அவர் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக, கோவில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க,இணை கமிஷனர் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில், ஹிந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை துணை கமிஷனர், கும்பகோணம், உதவி கமிஷனர் ராமு அவர்கள் முன்னிலையில், கும்பகோணம், ஆலய நிலங்கள் மீட்பு தனி தாசில்தார் கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர் பிரபாகரன், நாச்சியார்கோவில் வருவாய் ஆய்வாளர் சக்திதேவி, திருநறையூர் வி.ஏ.ஓ., தியாகராஜன் ஆகியோர், ஆக்கிரமிப்புகளை அகற்றி, கம்பி வேலி போட்டு, அறிவிப்பு பலகை வைத்து, கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: முகமது சலீம் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுக்கு முன்பு, குத்தகைக்கு எடுத்து இருந்தார். ஆனால் சமீபத்தில் கோவில் இடத்தை பிளாட் போட்டு சிலருக்கு விற்பனை செய்ததாகவும், அவர்களில் சிலர் வீடுகளை கட்டியது தெரியவந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தி இடத்தை மீட்டுள்ளோம். மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

shakti
ஜூலை 24, 2025 16:13

காசு கொடுத்து வாங்கியவனுக்கு குல்லாவா ???


KANDASAMY N
ஜூலை 20, 2025 20:34

நீதி மன்றங்களில் நீதிபதிகளாகிய நாம் நாட்டில் தர்மத்தை நிலைநிறுத்த தான் இந்த இருக்கை நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்ற உணர்வுடன் செயலாற்றினால் நமக்கு தகுதி உள்ளது நாம் பணியாற்றலாம் இல்லையேல் இந்த கிரீடம் எதற்கு என்று இறங்கி விட வேண்டும்.........?


Satish Chandran
ஜூலை 19, 2025 13:17

கோவில்களை அம்போ என விட்டு விட்டு ஓடிவிட்ட அர்ச்சகர்களை அல்லவா குறை கூற வேண்டும். மற்றவர்களையாவது கோவில்களை கவனிக்க சொல்லி இருக்கலாம்.


Chandrasekaran
ஜூலை 19, 2025 11:32

தமிழ்நாட்ல கோயில் நிலங்கள் பட்டியலே இணைய தாளத்தில் ஏற்றப்படாதீருக்கிறது. இதுவே ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பதாகும் கண்டுபுடிக்கவே வாய்ப்பில்லாது பலரால் சீந்தமாக்கப்பட்டு வருகிறது. 2026 தேர்தலுக்குப்பின் நீதித்துறைக்கு பணிச்சுமை கூடும். இடத்தின் தன்மை மாற்றப்பட்டுவிடும். கிராமங்களில் அச்சத்தின் காரணமாகவே இந்த போக்கு வெளிவராமல் இருக்கிறது. செய்தீத்துறை ஒடிஞ்சு விழுவப்போற போஸ்ட் குழிவிழுந்த சாலை அடையாளப்படுத்தி பெருமை கொள்வதுபோல் இதனையும் செய்ய வேண்டும். தினமலர் கருப்பு சிவப்புக்கு துணை போவதாக கமீப காலமாக அதாவது முதல்வ செய்தி ஊடகத்துறை கூட்டம் நடத்தியதற்கு பின்பு என்கிறார்கள். எனவே தினமலர் இதைச்செய்யாது எ நம்புவோமாக.


Palanisamy Palanisamy
ஜூலை 19, 2025 06:55

நிலத்தை திருடி விற்றவனுக்கு என்ன தண்டனை...???


M Saravanan.
ஜூலை 18, 2025 15:33

கோவில் நிலங்களை கண்ட நாய்க்களுக்கு முதலில் ஏலம் விடுவதை நிறுத்துங்கள்


Sathya Murthy
ஜூலை 18, 2025 14:56

ரொம்ம naavan


Sathya Murthy
ஜூலை 18, 2025 14:53

நல்லவன்


sabapathi57
ஜூலை 18, 2025 10:27

மற்ற ஊடகங்கள் இது போன்ற செய்திகளை வெளியிடாது.


agri sampath
ஜூலை 18, 2025 10:06

Vellore lla etha vitta Periya landa Pala kodi porathatheye kovil landa attaiya potting allum dmk Atha Evan keppan


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை