தாயுமானவர் திட்டம் போராட்டம் வாபஸ்
திருப்பூர்: வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்த ரேஷன் பணியாளர் சங்கம், அமைச்சருடன் நடந்த பேச்சை தொடர்ந்து, போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், பொது செயலர் தினேஷ்குமார் கூறியதாவது: ரேஷன் கடைகளில், 'தாயுமானவர்' திட்டத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென, ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இன்று முதல் இத்திட்டத்தைப் புறக்கணிப்பதாகவும், இம்மாதம் முதல், வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் பணியில் ஈடுபட மாட்டோம் என்றும் அறிவித்திருந்தோம். இதையறிந்து, எங்களை அழைத்துப் பேசிய துறை அமைச்சர், இதுகுறித்து முதல்வரிடம் பேசி, 15 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். அதனடிப்படையில், இந்த போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.