உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டது அராஜகத்தின் உச்சம்: நயினார் நாகேந்திரன்

பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டது அராஜகத்தின் உச்சம்: நயினார் நாகேந்திரன்

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவதுாறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து போராடிய பா.ஜ.,வினரை கைது செய்திருப்பது அராஜகத்தின் உச்சம் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.அவரது அறிக்கை:உள்துறை அமைச்சர் அமித் ஷா வை அவதூறாக பேசிய எம்.பி.,ஆ.ராசாவை கண்டித்து போராடிய பா.ஜ., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்திருப்பது அராஜகத்தின் உச்சம்.காவல்துறையின் அராஜகப்போக்கால் சிவகங்கை இளைஞர் அஜித் குமார் பலியான நிலையில், அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், இன்று காலை பா.ஜ.,நிர்வாகி பிரவீன் ராஜ் அவர்களையும், மாலையில் அறவழியில் போராடிய நமது மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியை கைது செய்துள்ளது தி.மு.க., அரசு. சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தும் இந்த திமுக ஆட்சியின் அதிகார மமதையே 2026ல் அவர்களை வீட்டிற்கு அனுப்பும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Velu
ஜூலை 02, 2025 08:31

இன்னும் பாஜகவின் நண்பனாக முயல்கிறார்கள்... ஏற்கனவே அதிமுக விலிருந்து திமுக வுக்கு வந்தவர்... பாஜக வில் சரணடைய பல தூதர்கள் பேசுவது.. ராஜாவுக்கு தெரியல.. எப்படியும் துரைமுருகன் சீட்டுக்கு வர பல முயற்சி எடுத்து பார்க்கிறார். துரைமுருகன் அன்பழகன் இல்லை.. அதனால பாஜக வை திட்டி திட்டி பெரிய ஆளாக மாற வேண்டும்..


Kasimani Baskaran
ஜூலை 02, 2025 04:04

தீம்க்கா சட்டத்தின்படி அமித்ஷா என்ன பெரிய அமித்ஷா... சகல சக்தி மிகுந்த ஒருவர் அவர் வரும் பொழுது மின்சாரம் துண்டித்து என்ன ஆனார் என்று தெரியும்... அடுத்து யாரோ...


raja
ஜூலை 02, 2025 02:23

அனைய போற தீபம் சுடர்விட்டு எரியும்.... இந்த திருட்டு திராவிட இந்து விரோத ஓங்கோல் கோவால் புர கொள்ளை கூட்டத்துக்கு தமிழர்கள் ஆப்படித்து விரட்டி அடிக்க காத்திருக்கிறார்கள்...


Palanisamy Sekar
ஜூலை 02, 2025 02:22

தமிழின தலைவர்ன்னு சொல்லிட்டு கைது செய்தபோது உலகமே தெறிக்கும் அளவுக்கு அய்யய்யோ கொல்றாங்களேன்னு கத்தாமல் கதறாமல் கைதுக்கு பயப்படாமல் சென்றார்களே அதுதான் துணிச்சல் என்பது. கருணாநிதியை போல கதறி கதறி கதறி... ஹாஹாஹா


தாமரை மலர்கிறது
ஜூலை 02, 2025 01:29

ஸ்டாலின் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை ரைடு விட வேண்டிய நேரம் வந்துவிட்டது.


திகழ்ஓவியன்
ஜூலை 01, 2025 22:53

என்ன திருப்பதி நாராயணனுக்கு திருப்பதியை காட்டி விட்டார்கள் போல இருக்கே


Oviya Vijay
ஜூலை 01, 2025 22:29

உங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை... இவிகள எல்லாம் 2 வருஷம் உள்ள தூக்கிப் போடுங்க எஜமான்... எலெக்ஷன் வரைக்குமாவது தமிழ்நாடு நிம்மதியா இருக்கும்... இவனுகளும் நிம்மதியா இருக்க மாட்டாங்க... மத்தவங்களையும் நிம்மதியா இருக்க விட மாட்டாங்க... ஆனா இப்படி அரெஸ்ட் பண்ணா வர்ற எலெக்ஷன்ல தமிழ்நாடு ஃபுல்லாபாஜகவுக்கு கெடைக்கப் போற மொத்த 177 ஓட்டுல இன்னைக்கு அரெஸ்ட் பண்ணவங்களோட ஓட்டு கம்மி ஆகிருமா... அட ஆமால்ல... ஐயகோ...


sridhar
ஜூலை 02, 2025 06:16

ரொட்டி , பால் ..


SP
ஜூலை 01, 2025 22:17

மத்திய ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு எல்லா விஷயத்திலும் ஒரு மாநில அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கூட இவ்வளவு திணறு திணறி கொண்டிருக்கின்றீர்கள் திமுகவை திமுக பாணியில் தான் சந்திக்க வேண்டும்


Indian
ஜூலை 01, 2025 22:15

சட்டம் எல்லோருக்கும் சமம்.


புதிய வீடியோ