உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடற்கரை... கடற்கரை தானே...? எப்படி கல்லறையாக மாறியது? சீமான் கேள்வி

கடற்கரை... கடற்கரை தானே...? எப்படி கல்லறையாக மாறியது? சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சென்னை மெரினா கடற்கரையில் நான்கு கல்லறை இருக்கிறது. அதை யார் இடிப்பது? கடற்கரை...கடற்கரை தானே...? எப்படி கல்லறையாக மாறியது?' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை அடையாறில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறீர்கள். ஆனால், சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆவணங்கள் பற்றிய தகவலை வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்? டாஸ்மாக் விவகாரத்தில் முதலில் ஒரு லட்சம் கோடி என்று சொன்னீர்கள். அதன்பிறகு ரூ.1000 கோடியானது, சரி அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இயற்கையின் அரும்பெரும் கொடையான சதுப்புநில ஏரியை பள்ளிக்கரணை குப்பை மேடாக்கியது யார்? இனிமேல் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். அப்படித்தானே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு 60 ஆண்டுகள் வாழ்ந்தவனை இடித்து வெளியே போடா என்றால் என்ன செய்வது.இ.டி., ரெய்டில் இருந்து தப்பிக்க டில்லி போகத்தான் அவங்களுக்கு நேரம் இருக்கிறது. ஏராளமான அரசு கட்டடங்கள், குடியிருப்புகள், நீர் நிலைகளில் தான் அமைந்துள்ளன. அவற்றை இடிக்காமல் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை மட்டும் இடிப்பது ஏன்? சென்னை மெரினா கடற்கரையில் நான்கு கல்லறை இருக்கிறது. அதை யார் இடிப்பது? கடற்கரை...கடற்கரை தானே...? எப்படி கல்லறையாக மாறியது?தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் மகள், டில்லியில் முதல்வராக இருந்த கெஜ்ரிவால், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆகியோரை இதே சாராய வழக்கில் தான் கைது செய்தீர்கள். தமிழகத்தில் மட்டும் ஏன் நடவடிக்கை இல்லை? பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடத்திய இந்தியாவுக்கு ஆதரவாக டில்லி பா.ஜ., முதல்வரை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் பேரணி நடத்தியுள்ளார். ஆனால், அவங்க மற்றவர்களை தான் பி டீம் என்பார்கள். அதேபோல, போரை நியாயப்படுத்தி பேச வெளிநாடுகளுக்கு செல்லும் குழுவில், கூட்டணி கட்சியான அ.தி.மு.க., எம்.பி.,க்களுக்கு கூட இடமில்லை. ஆனால், கூட்டணியே வைக்காத தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு இடம் கொடுத்துள்ளார்கள். அப்போ, யார் உண்மையான கூட்டணி, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

சிலைமான்
மே 22, 2025 16:07

எப்போ கடற்கரையில் கண்ணகி, உழைப்பாளர் சிலைன்னு வெச்சு சீரழிக்க ஆரம்பிச்சாங்களோ அப்பவே அழிவுகாலம் ஆரம்பிச்சாச்சு. முதலிலி சேதாரம் பெருசாத் தெரியாது. இப்படியே மத்த ஊர்களில் மணிமண்டபம், நாற்சந்தி, முச்சந்திகளில் சிலை வெச்சு சீரழிக்கிறானுங்க.


bharathi
மே 22, 2025 07:54

Right Question in a common public mind...but IPC can't do anything even though instructed to remove the party flags from public property the government doesn't take any action is it not breech of law?


M Ramachandran
மே 21, 2025 23:58

சீமானின் கருத்து ஏற்று கொள்ளும் படி உள்ளது .


M Ramachandran
மே 21, 2025 23:55

அதற்கு தான் திருட்டு திராவிட மாடல் என்ற பெயர்.


துர்வேஷ் சகாதேவன்
மே 21, 2025 22:30

எழுதாத பேணா வுக்கு ஏன் சிலை


veeramani hariharan
மே 21, 2025 21:59

Sometimes I agree with this leader


sridhar
மே 21, 2025 20:58

1969ல் யாரும் தட்டிக்கேட்காததால் வந்த வினை. அழகிய கடற்கரை இன்று இடுகாடு ஆகிறது .


துர்வேஷ் சகாதேவன்
மே 21, 2025 22:32

தோற்பது வோட்டை பிரிக்க.பிஜேபி இடம் காய் ஊட்டு பெற்று வாழும் அற்ப ஜந்து


மணி
மே 21, 2025 20:36

கிறுக்குதனத்தின் மொத்த உரிமையாளர் இந்த நபர்


karthikeyan
மே 21, 2025 21:26

நீ அறிவாளியா நண்பா


V Venkatachalam
மே 21, 2025 22:10

அப்போ முறுக்கு தனத்தின் மொத்த ஏஜன்ட் இந்த மணி என்பவர். விக்கு தலையர் சுடாலின் கிறுக்கு தனம் பற்றி இவர் வாய் திறப்பாரா?


sankaranarayanan
மே 21, 2025 20:17

சென்னை மெரினா கடற்கரையில் நான்கு கல்லறை இருக்கிறது. அதை யார் இடிப்பது? கடற்கரை...கடற்கரை தானே...? எப்படி கல்லறையாக மாறியது? சரியான கேள்வி கடற்கரையை ஆக்கிரமித்து கல்லறையாக மாற்றயதை உச்ச நீதிமன்றமே முன்வந்து தடுத்து நிறுத்தி எல்லா கல்லறைகளையும் அகற்ற ஆணை இடவேண்டும் இல்லையேல் எல்லா மக்களுக்கும் கடற்கரையில் கல்லறைக்கட்ட அனுமதிக்க வேண்டும்.


நிவேதா
மே 21, 2025 21:51

இந்த நீதிமன்றம் தான் மூணு கல்லறை பக்கத்தில நாலாவது கல்லறை வைக்க அனுமதி கொடுத்தது


தத்வமசி
மே 21, 2025 22:38

அந்த பஞ்சாயத்து திமுக, காங்கிரஸ் விவகாரத்தில் குறுக்கே வராது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 23:52

அதுவும் இரவோடு இரவாக தூங்கிக் கொண்டிருந்த நீதிபதியை எழுப்பி இருந்த எல்லா வழக்குகளையும் வாபஸ் பெற வைத்து கல்லறைக்கு அனுமதி.


முக்கிய வீடியோ