உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு யூனிட் 30 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கிய வாரியம்!

ஒரு யூனிட் 30 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கிய வாரியம்!

சென்னை: ஒரு யூனிட் மின்சாரத்தை, 25 ரூபாய் - 30 ரூபாய் விலைக்கு, மின் வாரியம் வாங்கிய தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த வாரத்தில் தினசரி மின் தேவை சராசரியாக, 21,000 மெகா வாட்டாக இருந்தது. காற்றாலை மின்சாரம் குறைந்ததால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், 1,500 - 2,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டது. பல மாநிலங்களிலும் மின் தேவை அதிகரித்துள்ளதால், மின்சார சந்தையில் விலை மிகவும் அதிகமாக இருந்தது. இதனால், மின் கொள்முதல் செய்ய, தமிழக மின் வாரிய அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.மின் பற்றாக்குறையை சமாளிக்க, இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து, சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில், ஒரு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது. இதனால், மக்கள் மற்றும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. பின், மின் பற்றாக்குறையை சமாளிக்க, கடந்த வார இறுதியில் இருந்து, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து, 2,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த மின்சாரத்தின் யூனிட் விலை, 20 ரூபாய்க்கு மேல் என, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று தெரிவித்தார். அதேசமயம், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை. மாலை, 6:00 மணி முதல் இரவு வரையிலான உச்ச நேரத்தில் வாங்கிய போது, 25 ரூபாய் - 30 ரூபாயாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது:மின் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கியதற்கு, கடந்த ஆட்சிகளில் அதிகளவில், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததே முக்கிய காரணம். இந்த அரசு, வெளிப்படையான அரசு என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, மின் பற்றாக்குறையை சமாளிக்க, எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு மெகா வாட் மின்சாரம், என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்பதை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
செப் 17, 2026 09:20

யூனிட்டுக்கு 10 ரூவா கமிஷன்

Vasan
செப் 17, 2026 10:44

தயவு செய்து அபாண்டமாக பழி சொல்லாதீர்கள்,

c.mohanraj raj
செப் 17, 2026 00:05

மத்திய அரசிடம் முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவர்களிடம் குறைவான தொகைக்கு வாங்கி இருக்கலாமே இது மாநில அரசின் திருட்டுத்தனம் அல்லவா ஏற்கனவே முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் இரண்டு கால் ரூபாய்க்கு கிடைத்த மின்சாரத்தை ஆறு ரூபாய் கொடுத்து வாங்கினார்

Vasan
செப் 16, 2026 23:07

இந்த தற்காலிக மின் பற்றாக்குறை, ஏற்ற தாழ்வுகள் உள்ள காற்றாலை மின்சாரத்தின் சீரற்ற தன்மையால் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மாலை நேர உச்ச கட்ட நேரத்தில் மின் தேவை சுமார் 21000 மெகா வாட். ஆகும். அதில் காற்றாலையின் மூலம் சுமார் 5000 மெகா வாட் கிடைத்து வந்தது, சென்ற வாரம் வரை. ஆனால் நேற்றைய தினம் காற்றாலைகள் மாலை நேர உச்ச கட்ட நேரத்தில் சுமார் 2000 மெகா வாட் அளவிற்கு தான் உற்பத்தி செய்தன. எனவே 3000 மெகா வாட் அளவிற்கு பற்றாக்குறை நிலவியிருக்கும். அதனை சமன் செய்ய மாலை நேர உச்ச கட்ட நேரத்தில் மட்டும் அதிக விலை கொடுத்து, மின்சாரம் கொள்முதல் செய்து, மக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இடையூறு இல்லா வண்ணம் செய்துள்ளது மின்சார வாரியம். இது, வாடிக்கையாளர் திருப்தி நோக்கத்தில், பாராட்டப் பட வேண்டிய விஷயம். இது மிக மிக குறுகிய கால அவசர நடவடிக்கையே தவிர, யூனிட் 20 ரூபாய்க்கு நீண்ட கால கொள்முதல் அல்ல. எதிர் கட்சிகள் இதனை திரித்து பொய்யான கருத்து மக்களிடையே சேரா வண்ணம், உண்மை நிலையை அன்றாடம் பொது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது மின்சார வாரியத்தின் கடமை. ஒவ்வொரு நாளும், மணி பூஜயத்திலிருந்து 24 மணி நேரம் வரை, ஒவ்வொரு கால் மணி நேரத்திலும் எவ்வளவு கூடுதல் மின்சாரம் என்ன விலைக்கு வாங்கப்பட்டது என்ற விவரத்தை முன்னணி பத்திரிக்கைகள் வாயிலாக, பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ஒரு பத்தி செய்தியின் வாயிலாக, பிரசுரித்து உண்மையை உள்ள படியே மக்களிடையே கொண்டு சேர்க்கலாம். இல்லா விடில் வெறும் வாய்க்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போல், எதிர் கட்சிகள் இந்த விவரத்தை கிளறிக்கொண்டே இருப்பர், மக்களையும் குழப்புவர்.

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை