உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை கேமரா எதிர்க்கட்சி பக்கம் திரும்பவே இல்லை; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சட்டசபை கேமரா எதிர்க்கட்சி பக்கம் திரும்பவே இல்லை; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபை கேமராக்கள் எதிர்க்கட்சி பக்கம் திரும்பவே இல்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டசபை? சட்டசபையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்? https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9w2u8zhm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0யார் அந்த SIR? என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு? மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை!தமிழக சட்டசபை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.தமிழக சட்டசபை பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; தி.மு.க.,வின் பொதுக்கூட்ட மேடையல்ல! இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Laddoo
ஜன 10, 2025 10:51

பத்து தோல்வி பல்னீஸ் இதுதான் ஒனக்கு கடேசி பத்வி. கட்சி கஜானா இருக்குறவரைக்கும் காசு எடு கொண்டாடு.


பேசும் தமிழன்
ஜன 09, 2025 18:52

சென்ற அதிமுக ஆட்சியில் தி.மு.க எத்தனை போராட்டம் செய்தது.... நாட்டின் பிரதமர் அவர்களுக்கு கறுப்பு கொடி.... கறுப்பு பலூன் என்ற பெயரில் கூத்து அடித்தார்கள்..... அப்போது பங்காளி கட்சி என்பதால் தான்..... திமுக ஆட்களை கைது செய்யவில்லையா ???


தமிழன்
ஜன 09, 2025 14:21

போராடும் எதிர்க்கட்சிகள் அண்டை மாநிலத்தில் இருந்து இந்த போராட்டத்தை தொடங்கலாம். பாண்டிச்சேரி ஆந்திரா கர்நாடக கேரளா போன்ற மாநிலத்தில் தமிழகம் சார்பாக போராட்டம் செய்யலாம். அப்படி செய்தால் தமிழகத்தில் எப்படி குரல்வளை நெருக்க படுகிறது என்பதை பதிவு செய்ய முடியும். இதை எதிர்க்கட்சியும், போராட்டத்தில் முனைப்பு காட்டும் மற்ற கட்சிகளும் முன் எடுக்கலாம்.


S.L.Narasimman
ஜன 09, 2025 12:56

ஊழல் ரவுடிதனம், கள்ளசாராயம், அராசகம். பொய் பித்தலாட்டம், போலித்தனம் இவைகளின் மறுபக்கமே விடியல் குருப்ப. இவர்களிடம் நியாயம் ஒழுக்கத்தை எடப்பாடியார் எதிர்பார்க்கலாமா.


Murugan
ஜன 09, 2025 12:43

மத்தியில் ஆளும் இவருடைய கூட்டணை ஆட்சி என்ன செய்துகொண்டிருக்கிறது என்று இவருக்கு தெரியாதா? கூண்டுக்குள் இருக்கிறாரா?


சம்பா
ஜன 09, 2025 12:07

புறக்கணிக்கவும்


sundarsvpr
ஜன 09, 2025 11:41

சட்ட மன்றம் கூடும்போது எல்லா உறுப்பினீர்கள் அவைக்கு வந்து ஏன் கால சம்பள படி விரயம் செய்யவேண்டும். சபைக்கு நாயகர் இதனை கவனித்தால் அரசுக்கு செலவு குறையும். நடவடிக்கையில் நடந்துகொண்டவர்களுக்கு மட்டும் சம்பளம் படி என்று நிர்ணயித்தால் பண விரையும் குறையும். ஸ்டாலின் ரொம்பநேரம் பேசுகிறார். இவர்க்கு பேசாதவர்கள் சம்பளம் படியை இவர்க்கு வழங்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.


MADHAVAN
ஜன 09, 2025 11:18

அது அண்ணாமலை சார்


புதிய வீடியோ