உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழைய அடிமை, புதிய அடிமை என்று பூடகமாக பேசும் முதல்வர்: நடிகர் விஜய் காட்டம்

பழைய அடிமை, புதிய அடிமை என்று பூடகமாக பேசும் முதல்வர்: நடிகர் விஜய் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' பழைய அடிமை, புதிய அடிமை என்று பூடகமாகப் பேசி, யார் மீதோ கல்லெறிவதாக எண்ணி களிப்புறுகிறார், முதல்வர். பாவம், அவர்கள். தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் தான் நின்று பேசுகிறோம் என்பதை ஏனோ மறந்து விட்டனர்'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நம்மை முடக்க நினைத்தவர்கள், மக்கள் நம்முடன் முன்பை விட அதிகமாக, அதிகப் பாசத்துடன் ஆணித்தரமாக அணிவகுத்து நிற்பதைப் பார்த்து விழிபிதுங்கி, முனகத் தொடங்கினர். நம்மீது அவதூறு பூசலாம் என்ற நப்பாசையில், தங்கள் முகமூடியைத் தாங்களே கழற்றிக்கொண்டனர்.முதல்வரே பழைய அடிமை, புதிய அடிமை என்று பூடகமாகப் பேசி, யார் மீதோ கல்லெறிவதாக எண்ணிக் களிப்புறுகிறார். தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்புதான் நின்று பேசுகிறோம் என்பதை ஏனோ மறந்துவிட்டனர்.குறைந்தபட்ச செயல்திட்டம் என்றெல்லாம் மக்களைக் குழப்பி, 1999 முதல் 2003 வரை தாங்கள் அடைக்கலமாகி, முதல் அடிமையாக இருந்து, தமிழகத்தில் தாமரை மலருக்குத் தரிசனம் செய்து தாங்கள் இருந்த இடத்தை மறைக்க முடியாமல், மனத்தில் இருந்ததை ஒருவித மறதியால் பேசி இருக்கலாமோ? காரணம் எதுவாயினும் கொண்டையை மறைக்க இயலாமல் குட்டு வெளிப்பட்டுவிட்டது.இளைஞர் பெருங்கூட்டமும் பெண்கள் பெரும்படையும் நம்முடன் மனத்தளவிலும் உறுதியாக இணைந்துவிட்டனர். அதை ஆழமாக அறிந்ததால் தான் அவர்களை விவகாரமாகப் பேச வைக்கிறது.அவர்களின் ஏசுதலையும் ஏகடியம் பேசுதலையும் புறந்தள்ளி மக்களுடன் மக்களாக இணைந்து களமாடுவதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்றாலே தகுதி மிக்க, தரம் மிக்க, ராணுவக் கட்டுப்பாடு மிக்க, கண்ணியம் மிக்க அரசியல் போர்ப் பெரும்படை என்பதைத் தரணிக்கு உணர்த்த வேண்டும். உணர்த்தியே ஆக வேண்டும்.நம் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் நரித் தந்திரச் சூழ்ச்சிகளை ஆழமாகப் புரிந்து, உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். செயல்மொழியே நமது அரசியலுக்கான தாய்மொழி. அதை மனத்தில் கொண்டு, தொடர்ந்து களமாடுங்கள். தொய்வின்றிக் களமாடுங்கள். இப்போதே துரிதமாகக் களமாடுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Sri Kumaran
டிச 24, 2025 22:32

தகுதி மிக்க தரம் மிக்க ராணுவ கட்டுப்பாடு


sankaranarayanan
டிச 24, 2025 21:45

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் ஒரு சிறு துளிகூட அதன் விவரம் வெளி வரவில்லை இதையம் உடைப்பிலே பூட்டுவிட்டார்ககளா எந்த விசாரணையும் ஒரு காலக்கெடு பொருந்தியதாக இருக்காதா


Pandianpillai Pandi
டிச 24, 2025 21:32

தி மு க விற்கு மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு போகும் கொடூர எண்ணம் என்றைக்கும் கிடையாது. நிலைக்கண்ணாடி முன் அலங்காரம் செய்து கொண்டு முகத்தை சோகமாக வைத்துகொள்பவர் தி மு க வை குறைகூறுவதா? உங்களுக்கு தி மு க எதிரி ? காரணம் மக்களுக்கு நல்லது செய்யவில்லை. இதுதான் உங்கள் கொள்கையா ? கரூர் சம்பவத்திற்கு வெட்கி தலைகுனிந்து அரசியலில் இருந்து விலகியிருக்கவேண்டும் அதை செய்யாமல் பா ஜ க வோடு கைகோர்த்து உங்கள் இடத்தை வெற்றிடமாக மாற்றிவிட்டீர்கள். தி மு க வின் காலக்கண்ணாடி முன் நீங்கள் நின்று பாருங்கள். வீரம் வரும் தன்மானம் பிறக்கும் . விசுவாசம் பிறக்கும். நாங்கள் மக்கள் பணிக்கு செல்லும்போது நிலைக்கண்ணாடி பார்த்து அலங்காரம் செய்வதில்லை. எங்களின் காலக்கண்ணாடி முன் நிற்கிறோம். எங்கள் அய்யா கலைஞர் அவர்களின் வீரம் எங்கள் நெஞ்சில் ரீங்காரமிடுகிறது. இளைஞர்களின் திறவுகோலாக இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் துணிச்சல் எங்களுக்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது. உங்கள் தொண்டர்களை நீங்கள் எவ்வாறு வழிநடத்துகீறீர்கள் என்பதை உணருங்குள். போதைக்குள் இருக்கும் உங்கள் தொண்டர்களை நல்ல பாதைக்கு கொண்டுவாருங்கள்.


karupanasamy
டிச 24, 2025 21:29

இவருடைய சினிமா ரிலீசுக்கு நம் பிள்ளைகள் தோரணம்கட்டி அம்மன்கோவிலில் மண்சோறு சாப்பிட்டதன் விளைவு இது.


SIVA
டிச 24, 2025 21:01

நடிகர் ஜோசேப்பு விஜய் சந்திரசேகர் அவர்களே பேச்சு மட்டும் தான் ப்ளாஸ்ட் ப்ளாஸ்ட் செயல் எல்லாம் புஷ் புஷ் தான் .....


திகழ்ஓவியன்
டிச 24, 2025 19:03

41 பேர் இறந்தவுடன் அவர்களுக்கு உதவ கூட செல்லாமல் எங்கே தன்னை கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி தலை தெறிக்க ஓடிய ஒரு பயந்தான்கொள்ளி தான் இந்த பனையூர் பண்ணையார்


karupanasamy
டிச 24, 2025 18:55

கருவூர் சம்பவத்திற்கு பின் தீபாவளி கொண்டாடாதீர்கள் என்று சொன்னான் செத்தது யாரும் இவனைபோன்ற கிறிஸ்ட்டின் கிடையாது இப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்கிறான் இவனால் இறந்த இந்துக்களின் தர்மன் இவனுக்கும் இவனைப்போன்ற க்ரிஸ்டீன்களுக்கும் கிடையாது. இந்துமத நம்பிக்கையாளர்களே இவனுடைய சினிமா வசனம் வேறு இவனுடைய நம்பிக்கை செயல்பாடு வேறு .


Barakat Ali
டிச 24, 2025 18:45

சூப்பருங்கோ ...... எழுதிக்கொடுத்தது யாரு ???? புச்சி யா


முருகன்
டிச 24, 2025 18:44

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடக்க ஆரம்பித்த உடன் புதிய அடிமை என்பது உங்கள் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் நன்றாகவே தெரிகிறது


சமீபத்திய செய்தி