உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டுக்கே வழிகாட்டியது இலவச பஸ் பாஸ் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

நாட்டுக்கே வழிகாட்டியது இலவச பஸ் பாஸ் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மாணவர் மட்டும் சிறப்பு பஸ் திட்டத்தின் வெற்றி குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சட்டசபை உறுப்பினராக, 1989ல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான்.அதனை ஏற்றுக்கொண்டு, கருணாநிதி செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது.அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர் மட்டும் சிறப்புப் பஸ்களை நமது திராவிட மாடல் ஆட்சியில் இயக்கி வருகிறோம்.அமைச்சர் சிவசங்கரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Mahalingam Laxman
செப் 18, 2025 04:39

While I agree free Bus tem apparently looks good, but it has got inherent potential problem creator in other areas. Laxman


Indhuindian
செப் 15, 2025 13:26

உலகுக்கே வழிகாட்டுவது கூகுல் மேப் தான்


பிரேம்ஜி
செப் 14, 2025 07:24

உலகத்துக்கே வழிகாட்டியது இவர்தான்! இதற்காக லண்டனில் பாராட்டு விழா நடத்தி நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்! திருவள்ளுவருக்கு தமிழ் கற்பித்தவரின் அருந் தவப்புத்திரனுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்!


Padmasridharan
செப் 13, 2025 08:57

இந்த காச TASMAC ல குடிக்க வாங்கிடறாங்களே சாமி. .


Varadarajan Nagarajan
செப் 13, 2025 01:01

உழைப்பாளிகளை மாநில அளவில் சோம்பேறிகளாகியது இதுபோன்ற இதர இலவச திட்டங்கள் என்ற பெருமையும் உள்ளது. இலவசங்களிலேயே வாழ்வை ஓட்டுவதால் உழைக்க கடுமையான ஆள்பற்றாக்குறையால் அனைத்து தொழில்களும் தள்ளாடுகிறது. ஹோட்டல்கள், மால்கள், ஜவுளிக்கடைகள், கட்டுமானத்தொழில், தொழிற்சாலைகள் இவைமட்டுமல்ல விவசாயம் உள்பட அனைத்து தொழில்களும் வெளிமாநில தொழிலாளர்களை நம்பித்தான் நடக்கின்றன. இலவசங்களால் பாதிக்கப்படுவது மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் மட்டுமல்ல உழைப்பாளர்களும். இன்று மீட்கமுடியாத நஷ்ட்டத்தில் இயங்குவது போக்குவரத்து கழகமும் மின்சாரவாரியமுமே. அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணப்பயன்கள்?


Sivaram
செப் 12, 2025 22:23

டிரைவர் கண்டக்டர்ஸ் ஓய்வூதியம் கிடைப்பதர்கு நாயா அலையறாங்க பாவம் சும்மா விடாது


theruvasagan
செப் 12, 2025 22:23

இலவச பஸ் பரயாண திட்டத்தில் மட்டுமா தமிழகம் முதலிடம். காற்றில் பறக்கும் கூரை பெயர்ந்து விழும் கதவு கழண்டு ஓடுகிற டயர் லொட லொடவென்று ஆடுகிற இருக்கை இவைகளோடு ஓடும் டப்பா பேருந்துகளிலும் தமிழகம்தான் முதலிடம். அது மட்டுமில்லை. ஒய்வு.பெறும் போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வுகால பணப்பலன்களை செட்டில் பண்ண வக்கில்லாத விஷயத்திலும் தமிழ்நாடு நம்பர் ஒன்தான்.


vbs manian
செப் 12, 2025 21:27

போக்குவரத்து கழக துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னும் ஓய்வூதியம் வழங்கவில்லை என்று செய்தி.


Sudha
செப் 12, 2025 21:20

டாஸ்மாக், கள்ள சாராய சாவுக்கு 10 லட்சம், ஆணவ கொலைகள், கஞ்சா, இந்தி எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு- எல்லாவற்றிலும் தமிழகம் முன்னோடி


G Mahalingam
செப் 12, 2025 20:35

இனி மாணவர்கள் சகட்டுமேனிக்கு பஸ்சில் சுற்றுவார்கள். அந்தந்த பஸ்சில் வீடு மற்றும் பள்ளி கல்லூரி போகும் பஸ்சில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். டில்லியில் இப்படிதான் இருக்கு. பஸ் நம்பர் போட்டு இலவச பாஸ் கிடைக்கும். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடிதம் தேவை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை