உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் கரூர் சம்பவத்தை அரசு தடுத்திருக்கலாம்: இபிஎஸ்.,

முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் கரூர் சம்பவத்தை அரசு தடுத்திருக்கலாம்: இபிஎஸ்.,

சென்னை: 'கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அவரது அறிக்கை: கரூர் துயரத்திற்கு காரணமான தி.மு.க., அரசை கண்டிக்க திராணியில்லாமல், ஏதோ இந்த சம்பவத்தில் அரசுக்கு தொடர்பே இல்லை என்பதுபோல அரசியல் கட்சிகள் பக்கவாத்தியம் வாசிக்கின்றன. கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ கூற முடியாது. சரியாக திட்டமிட தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறைவாலும் ஏற்பட்டது என, அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக, செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்தியில் இருந்து தெரிவது என்னவென்றால், இந்த நிகழ்வை, அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கையாண்டிருந்தால், இந்த துயர சம்பவத்தை தடுத்திருக்க முடியும். கள நிலவரப்படி கூட்டம் நடந்த இடத்தில், போதுமான போலீசாரை நிறுத்தி, ஆரம்பம் முதலே கூட்டத்தை ஒழுங்குப் படுத்த, அரசு தவறி விட்டது என்பது தான் இதன் பொருள். விஜய் வாகனத்தை கூட்ட நெரிசலில் உள்ளே கொண்டு வரவும், அதை பாதுகாக்கவும் காட்டிய அக்கறையில், பொதுமக்களை பாதுகாப்பதில் போலீசார் காட்டவில்லை என்பது, இதன் வாயிலாக தெரிகிறது. இந்த துயர சம்பவத்திற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய, மாநில அரசின் தவறுகளை மறைத்து, இந்த அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்கவாத்தியக்காரர்கள் நடுநிலையோடு உண்மையை பேச வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

K.SANTHANAM
அக் 06, 2025 13:40

முதல்ல நீங்க ஆட்சியிலிருந்த போது நடந்த சம்பவங்ளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு பின் அடுத்தவர்களை குறை கூறும்.


திகழ்ஓவியன்
அக் 06, 2025 12:33

ரொம்ப கரெக்ட் ஆஹ் சொல்லி இருக்கிறார்


திகழ்ஓவியன்
அக் 06, 2025 12:32

எப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூடு போலவா


சேகர்
அக் 06, 2025 12:24

ஆம். tv மட்டும் பார்க்காமல் என்ன நாட்டில் நடக்கிறது என்று உளவுத்துறை மூலம் வந்த தங்களின் மூலம் முன்னெச்சரிக்கையாக நீங்கள் செயல் பட்டிருந்தால் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தவிர்த்திருக்கலாமே


Madras Madra
அக் 06, 2025 12:07

41 பேர் மரணத்துக்கு காரணம் தவேக மற்றும் திமுக


Santhakumar Srinivasalu
அக் 06, 2025 11:43

தினமும் செய்திகளில் வெளிவர வேண்டும் என்பதற்காக அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்!


PALANISWAMY
அக் 06, 2025 11:28

ஆமாம். இவர் ஆட்சியில் எல்லாத்தையும் முன் எச்சரிக்கையுடன் தடுத்துவிட்டார். இந்த பிரச்சனையில் உண்மையாக அரசியல் ஆதாயம் தேடுவது இவர் மட்டுமே.


Venugopal S
அக் 06, 2025 11:19

எப்படி? இ பி எஸ் முதல்வராக இருந்த போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுத்தது மாதிரியா?


Natchimuthu Chithiraisamy
அக் 06, 2025 11:13

குழந்தைகள் சிறுவர்கள் சிறுமிகள் இளம் வயதினர் நேரடியாக பார்க்க அறிய சந்தர்ப்பம் என்று கூடிவிட்டனர் அங்கு அரசியல் கூட்டம் இல்லை ஆனால் விஜய் அரசியல் பேசினார். வேறு இடத்தில எடப்பாடியாரை மிகவும் குறைவாக விஜய் நீ ஒரு பொருட்டே இல்லை என்பது போல் பேசிவிட்டார் அது தவறு. அதிமுகவுக்கு மிக பெரிய வலி. விஜய் ஷோ காட்டியது மிகவும் லேட்டாக வந்தது தவறு நீண்ட நேரம் உணவில்லாமல் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை உணராமல் இருந்தது தவறு. அரசு அதிகாரிகள் கவனிப்பில்லாமல் பலர் அறிவுரைப்படி தவறாக நடந்து விட்டனர். எடப்பாடியார் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டிருக்கிறார்


baala
அக் 06, 2025 10:14

பெரிய நிர்வாக திறன் உள்ளவர்.


முக்கிய வீடியோ