உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: அரசு பெருமிதம்

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: அரசு பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதால், சிறந்த தரமான பள்ளிக்கல்வியை வழங்குவதில், தமிழகம் இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது' என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது. அரசின் அறிக்கை: தமிழக மாணவர்கள் ஒவ்வொருவரும் உயர் கல்வி பெற வேண்டும் என, பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி வருகிறார். புதிதாக வெளியிடப்பட்ட, மாநில கல்விக்கொள்கை, கல்வியாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாநிலம் முழுதும், 28,067 அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், வேகமான இணையவசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,540 அரசு பள்ளிகளில், பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 38 மாதிரி பள்ளிகள், 352 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் படித்தவர்கள், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 519 கோடி ரூபாயில், 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் படிக்கும் 16.7 லட்சம் மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், 455 கோடி ரூபாய் செலவில், 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநிலம் முழுதும் உள்ள, 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு, 81 கோடி ரூபாயில், கைக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின், 2021ல் ஆட்சி பொறுப்பேற்ற பின், பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ததால், சிறந்த தரமான பள்ளிக்கல்வியை வழங்குவதில், இந்திய அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Padmasridharan
ஆக 26, 2025 11:36

உண்மை, ஆனால் படிச்சதற்கு employment office லேயே மதித்து பேசமாட்டேன் என்கிறார்களே. Register செய்ததை காணோம், Renewalக்கு செல்லும்போது UG & PG பிரித்ததில் சிலதை காணோம், பலருடைய முழு விவரங்களை காணோம், புதிதாக பதிவிடுங்களென்று மரியாதையுடன் மரியாதையில்லாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். Online இல் செய்யலாமென்றால் கடைகளில் பணம் கொடுத்தால் அவர்களுக்கு திறக்கும் விவரங்கள், கடவுச்சொல்லுடன் எனக்கு திறக்கமாட்டேன் என்கிறது. ஏராளமான படிப்புகள் அதற்கேத்த மாதிரி சரியான வேலைகளும் இல்லையே. சென்னை ECR & OMR இல் வேலை செய்பபர்களெல்லாம் வட இந்தியர்கள்


venugopal s
ஆக 25, 2025 18:46

இதற்கு என்ன அர்த்தம் என்றால் மற்ற மாநிலங்களில் கல்வியின் தரம் இதைவிட மட்டமாக உள்ளது என்பது தான்!


panneer selvam
ஆக 25, 2025 17:16

Stalin ji , as usual you are blowing the trumpet on someones work . First primary education was well spread by Kamaraj that too with new concept government aided private schools . Kamaraj knows government school will not fulfill the education target . It was stopped by your father . College educations especially private engineering colleges are spread widely by MGR during his second terms thanks to RMV gang . Private universities along with a few public universities are developed by Jayalalitha . Around dozen public medical colleges as well various private medical institutes especially nursing institution by Jayalalitha followed by Edappady . Now Stalin ji what you have done for the last 4 and half years . Nothing , Nothing and Nothing . So do not live on others credit .


rvs
ஆக 25, 2025 16:37

Nearly 9000 assistant professor posts are vacant over arts colleges in Tamil Nadu. Already 4000 posts recruitment started, but so many court cases are pending, govt not keen to proceed with court cases and make an appointment of 4000 assistant professors before the election, because the government could face financial problems because of that simply make announcement thats all


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 25, 2025 13:47

ஆமாம் .... கல்வியிலே தமிழகம் சிறந்து விளங்குது ..... பல மாணவர்கள் தமிழிலேயே தேர்ச்சி அடையாமல் போவது ஒரு சிறந்த உதாரணம் .....


raja
ஆக 25, 2025 12:27

தமிழக கோயபல்சா நம்ப முதல்வர்.... இல்லை கோயபல்சையே பின்னுக்கு தள்ளி இதிலையும் அதாவது பொய் சொல்வதிலும் தான் தான் நம்பர் ஒன்னு என்று மார்தட்டுகிறார் மக்க thamilaa...


Sadananthan Ck
ஆக 25, 2025 11:56

இந்த பிதற்றலுக்கெல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை எதையாவது சொல்லி அடிச்சு விட வேண்டியது அகில இந்திய அளவில் நடக்கும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் தமிழக மாணவர்கள் மிக மிகக் குறைவு இங்குள்ள ஆட்சியாளர்கள் தனக்குத்தானே சொரிந்து கொண்டு சுகம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் சொல்லுவதெல்லாம் வெறும் வெற்று முழக்கங்களே நிஜத்தில் அப்படி இல்லை


shyamnats
ஆக 25, 2025 11:47

அரசு நடத்தும் டாஸ்மாக், மற்றும் கிடைக்கும் போதையை தாண்டியும் மாணவர்கள் தேர்வுகளில் பாஸாவது, இவர்களை இவ்வாறு பேச தூண்டுகிறது.


SUBBU,MADURAI
ஆக 25, 2025 11:11

தாய் மொழியான தமிழ் பாடத்தில் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்கள் நாற்பதாயிரம் பேர் ஃபெயிலாகி இருக்கிறார்கள் அப்படியென்றால் இந்த திமுக திராவிட மாடல் ஆட்சியில் கல்வியின் தரம் எப்படியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். விளம்பரத்தை வைத்துதான் இந்த ஆட்சி திருட்டு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.


Subburamu
ஆக 25, 2025 10:11

I am a retired teacher from the Agricultural university. Last teachers recruitment was done during 2014. Afterwards more than a dozen new colleges are opened in different places of the state. But no new teaching posts to such colleges. In many colleges teachers are taking the classes from the nearby research station on tour. Those teachers are also under stress now due to heavy work load. More than 45 percent of the teaching post is being kept vacant after the retirement of teachers from 2014 onwards. VCs, Deans, Directors, Principals posts more than 200 posts in several universities and colleges are being kept vacant for a longer periods. But under stress condition, frequent review meetings are conducted by government beaurocracy and ruling party netas by video conference. Meetings, eating, sleeping of teachers are alone taking place daily. No quality productive work in higher education. we can expect closer of more Engineering, Agricultural, Polytechnic colleges in the state in future.


rvs
ஆக 25, 2025 16:46

Sir, your views are absolutely correct. There could be 9000 assistant professors posting vacant over tamilnadu arts and science colleges, no posting to be filled after 2014. Guest lectures paid Rs25000 how could they teach effectively, nothing. The govt initiated 4000 posting filling in Mar2024, still it is pending because of court cases. In higher education department so many intelligence people are there even though they allowed those who writing SET also eligible to apply for asst prof posting in Apr 2024 and it totally delayed the recruitment process and other court cases. Govt no mood to make fast of court cases.