உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வியில் வட மாவட்டங்கள் பின்தங்க அரசே காரணம்: அன்புமணி

கல்வியில் வட மாவட்டங்கள் பின்தங்க அரசே காரணம்: அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில், வட மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கி வருவது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. அரியலுார், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், முதல் 15 இடங்களில் வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், கடைசி 10 இடங்களில், வேலுார், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்துார் என, எட்டு வட மாவட்டங்கள் இருப்பது கவலை அளிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இதேநிலை தான் நீடிக்கிறது. வட மாவட்ட அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது; கட்டமைப்பு வசதிகளும் இல்லை. மக்களின் சமூக, பொருளாதார காரணிகளும் தேர்ச்சி குறைய காரணமாகின்றன.தமிழக அரசுக்கு உண்மையாகவே சமூக நீதி பார்வை இருந்திருந்தால், இப்பிரச்னைக்கு எளிதில் தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால், மாற்றாந்தாய் வட மாவட்டங்களுக்கு, கல்வித்துறையில் எப்போது விடியல் ஏற்படும் என்பது தெரியவில்லை.வட மாவட்டங்கள் கல்வியில் முன்னேறாவிட்டால், ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேற முடியாது. இதை தமிழக அரசு உணர்ந்து, வட மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Padmasridharan
மே 20, 2025 06:50

ஆசிரியர் பயிற்சியே சிலர் சரியாக வழிகாட்ட முயற்சிப்பதில்லை அரசு பள்ளிகளில்


Kasimani Baskaran
மே 17, 2025 14:41

மாணவர்கள் படிக்கவில்லை என்றால் அரசு என்ன செய்யும்.


Svs Yaadum oore
மே 17, 2025 10:15

கல்வி வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமாம் ......பத்தாம் வகுப்பில் அணைத்து மாணவர்களும் சமூக நீதி சமத்துவ விலையில்லா பாஸ் என்று அறிவித்து விட்டால் வட மாவட்டங்கள் முன்னேறி விடும் ....


Palanisamy T
மே 17, 2025 08:28

கவலை வேண்டாம் அன்புமணி அவர்களே நாளை நீங்கள் முதல்வராக வந்துவிட்டால் முதல்வேலையாக இதை சரி செய்து விடுங்கள். அப்போது தென் மாவட்டங்கள் பின் தங்கிவிடும் . அப்போது என்ன செய்வீர்கள்?


Gnana Subramani
மே 17, 2025 08:10

ஆண்ட ஜாதி என்று கூறி குடிசை கொளுத்தவும் மரம் வெட்டவும் இளைய தலைமுறையினரை தவறாக வழி நடத்தினால் எப்படி படிக்க முடியும்


Sivakumar
மே 17, 2025 15:34

இதே மாதிரி தான் ஒரு கட்சி மதவெறியை தூண்டி இளம் தலைமுறையினரை திசைதிருப்பி விட்டு, இன்று அவர்கள் முன்னேறிய தென்மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு வந்து குவிகிறார்கள். புரிஞ்சா சரி.


SRIDHAAR.R
மே 17, 2025 07:47

அய்யா தங்களின் தொண்டர்கள் பிள்ளைகளுக்கு தனி பயிற்சி அளித்து அறிவிலும் ஆற்றிலும் சிறந்து விளங்க கூடிய திறமைகளை வளர்த்து அதன் வாயிலாக ஆட்சியில் முக்கிய பங்கு கொண்டு தமிழகத்தை சிறந்த மதுவிலக்கு பகுதியாக மாற்றும் திறன் தங்களுக்கு உண்டு என்பதை நிருப்பிக்க வேண்டுகிறோம்


Raja k
மே 17, 2025 07:39

உங்க கட்சியின் சாதி வெரி தான் காரணம்,


மீனவ நண்பன்
மே 17, 2025 07:27

படிப்பில் நாட்டம் இல்லாதவர்களுக்கு தொழில் கல்வி சொல்லி தரலாம் ..L&T போன்ற நிறுவனங்கள் ஆபரேட்டர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் உதவியாளர்களாக ட்ரெயினிங் தர அரசாங்கம் வரிவிலக்கு போன்ற சலுகைகள் தரலாம்


R Dhasarathan
மே 17, 2025 06:56

அரசு அல்ல அரசியல் வாதிகளே காரணம்


Gnana Subramani
மே 17, 2025 06:42

பா மா கா இல்லா விட்டால் வட மாவட்டங்கள் நன்றாக படித்து முன்னேறும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை