உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  போட்டி அரசாங்கம் நடத்துகிறார் கவர்னர்

 போட்டி அரசாங்கம் நடத்துகிறார் கவர்னர்

லோக்பவனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் அர்லேக்கர், 'மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, லோக் பவனை அணுகலாம். சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய முயல்வோர், எந்த உதவி வேண்டுமானாலும் கேட்டு முறையிடலாம்' என குறிப்பிட்டுள்ளார்.அவரது பேச்சு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாக உள்ளது. கவர்னரின் இந்த செயல், மாநில அரசின் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகார அத்துமீறல். கவர்னரின் அதிகார அத்துமீறலை தடுத்து நிறுத்த, தமிழக அரசும், முதல்வரும் உடனடியாக சட்ட நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்டம் கவர்னருக்கு வழங்கியுள்ள அதிகார எல்லையையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மதிக்காத கவர்னர் அர்லேக்கரின் அத்துமீறலை, ஜனாதிபதி தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். - வீரபாண்டியன், மாநில செயலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
ஜூலை 06, 2026 12:09

ஐயா, பள்ளிப் படிப்பை முடித்து அதன்பின் வாய் திறக்கலாம்


sankaranarayanan
ஜூலை 06, 2026 08:37

மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண லோக் பவனை அணுகலாம் என்று தமிழகத்தின் ஆளுநர் கூறியதை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது இதில் எந்த தவறும் இல்லை இந்த மாநிலத்தின் ஆளுநர்தான் அவர் இந்த மாநிலத்தின் மீதுள்ள அக்கறையில்தான் அவ்வாறு பேசியுள்ளார் இதை ஊதி பெரிதாக செய்தவர் எதிர் கட்சி தலைவர் அதை தாங்க முடியாமல் முழுதும் அறியாமல் அமைச்சர் நிர்மல் குமார் வெளியே ஆளுநரை பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது இப்பொது இருக்கும் ஆளுநர் இவர்களுக்கு மிக துணையாகத்தான் இருக்கிறார் அந்த உறவை எதிர்க்கட்சி தலைவர் சொன்னார் என்பதற்காக வீணாக கெடுத்துக்கொள்ள கூடாது


சமீபத்திய செய்தி