உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக தஞ்சை பல்கலையில் பாடிய கவர்னர்

தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக தஞ்சை பல்கலையில் பாடிய கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் நேற்று நடந்த 14வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி பங்கேற்று, 668 மாணவ - மாணவியருக்கு முனைவர் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முதுநிலை பட்டம், கல்வியியல் நிறைஞர் பட்டம், இளங்கல்வியியல், இளங்கலை பட்டம், முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை மூலம் எட்டு தங்க பதக்கங்களை வழங்கினார்.விழாவில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் ஆகியோர் பங்கேற்பதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. இருவரும் வரவில்லை. நேற்று முன்தினம் சென்னையில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவதில், 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டதால், கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, விழாவை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்ததாக பேசப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் பல்கலை கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை கவர்னர் ரவி உள்ளிட்டோர் முழுமையாக பாடினர்.இதற்கிடையே, தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலையில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் ரவி பேசுகையில், ''உலக அளவில் போர்ச்சூழல் நிலவும் நிலையில், இந்தியா அமைதியின் பக்கம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. நாடுகளுக்குகிடையே மோதல்கள் நிலவும்போது, அதற்கு தீர்வு ஏற்படுத்த இந்தியாவை உலகம் உற்று நோக்குகிறது. இந்தியாவால் உதவி செய்ய முடியும் என உலகம் நம்புகிறது,'' என்றார்.

பிற மொழி கற்க வேண்டும்

காந்தி கிராமிய நிகர்நிலை பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம், தமிழ் பல்கலை விழாவில் பேசியதாவது:உலகிலேயே ஒருமொழிக்கென்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பல்கலை என்றால் அது, தமிழ் பல்கலை மட்டுமே. நம் தமிழ் மொழியை அனைத்து நாட்டவர்களும் விரும்புகின்றனர்; ஆர்வத்தோடு கற்கின்றனர். அது போல நாமும் ஏன் பிறமொழிகளை கற்றுக்கொள்ள முன்வரக்கூடாது. நம் தாய்மொழியை மறந்துவிடாமல், மொழிகள் என்ற வண்ணக் கண்ணாடிகளை அணிந்து கொண்டு இந்தியாவை, உலகை வலம் வரலாம். நம் வாழ்வில் வளம் பெறலாம். பிற மொழிகளை கற்பதில் தயக்கம் காட்டக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

Pattabiraman Vengeteraman
அக் 24, 2024 23:11

சிறுபான்மையினர் என்ற போர்வையில் நீங்கள் பண்ணும் சால்ஜாப்பை விடவா ஆளுனரின் செயல். தமிழ், தமிழ் என்று சொல்லி துண்டு சீட்டில் எழுதியதை பார்த்து படிக்க கூட தெரியாத ஸ்டாலினை பார்க்கும்பொழுது ஆளுனர் ஒரு உண்மையான தமிழ் பற்றுள்ள தமிழறிஞர் என்றே கூட சொல்லலாம்.


Jose Varghese
அக் 21, 2024 22:28

தான் செய்த தவறு திருப்பி அடித்தபின் செய்யும் சால்ஜாப்புகள் தான் இவை..


Pattabiraman Vengeteraman
அக் 24, 2024 23:17

தமிழ், தமிழ் என்று சொல்லி துண்டு சீட்டில் எழுதியதை பார்த்து கூட படிக்க தெரியாத ஸ்டாலின் செய்யும் சால்ஜாப்பை விடவா...


M S RAGHUNATHAN
அக் 21, 2024 20:22

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் தமிழ் மொழி பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், முனைவர் ஆகிய அனைவரையும் அவமானம்.செய்து விட்டனர். இது தமிழுக்கு நேரிட்ட அவமானம். தமிழ் பட்டதாரிகளுக்கு செய்த துரோகம். தமிழ் ஆர்வலர்கள் வாய் மூடி மவுனம் காப்பதேன்? அரசு அடக்குமுறை பாயும் என்ற அச்சம்.


K V Ramadoss
அக் 21, 2024 18:14

நன்றாகச்சொன்னீர் திரு பஞ்சநதம் அவர்களே


Power Drive
அக் 21, 2024 09:23

திராவிடம் அடித்த அடி ? அப்படி ?????


venugopal s
அக் 20, 2024 17:27

உங்கள் தலைவர் பாணியில் டெலிப்ராம்ட்டர் உதவியுடன் தானே?


ஆரூர் ரங்
அக் 20, 2024 17:19

ஸ்டாலின் நாண நன்னயம் செய்து விட்டார் கவர்னர்.


Chandra
அக் 20, 2024 11:49

மிக சரியான கருத்து ..வேண்டுமென்ற தவறு செய்தவர்களை 6 மாதம் பனிஇடை நீக்கம் செய்ய வேண்டும் ..அல்லது தமிழக சலுகைகள் ரேஷன் , EB , ... தரக்கூடாது. "தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக தஞ்சை பல்கலையில் பாடிய கவர்னர்" - வாங்கிய அடி அப்படி ..பாடித்தான் ஆகவேண்டும் ...


SIVA
அக் 20, 2024 12:11

அட அட என்ன அறிவு கவர்னர் தமிழ் தாய் வாழ்த்தை சரியாக பாடி விட்டார், இனிமேலும் எந்த விழாவானாலும் பாடி விடுவார், இனி நம்ம திராவிட மாடல்கள் எப்படியும் தமிழ் தாய் வாழ்த்தை பாட வேண்டும், இனி அவர்களுக்கு வேறு வழி தமிழ் தாய் வாழ்த்தை படித்தே ஆக வேண்டும், இந்த முறை பி ஜே பி போட்ட ஸ்கெட்ச் திராவிடத்துக்கு அல்ல முதல்வருக்கும் , துணை முதல்வருக்கும்....


Dharmavaan
அக் 20, 2024 12:13

ஆளுநர் பாடியது தவறு .ஆனால் அவர் பெருந்தன்மை அல்பங்களுக்கு காட்டியது


God yes Godyes
அக் 20, 2024 11:15

திராவிடம் என்ற வேலைக்கு ஆகாத ஏமாற்று சொல்லை பயன் படுத்த தடை செய்ய சட்டம் போடவேண்டும்.


God yes Godyes
அக் 20, 2024 11:13

இல்லெனாக்கா ஆரியர் நல் திருநாடு என மாத்துங்க. நல்ல தமிழடங்கிய சனாதனத்தை பிராம்மனன் தான் கோயில்களில் வளர்த்தான்.


புதிய வீடியோ