நீதிபதி அருணா ஆணையத்தின் விசாரணை துவங்கியது
கரூர்: கரூர் நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில், ஐந்து பேர் கொண்ட குழுவினர், நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினர்.