உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணி உடனான பிரச்னை சரி செய்யப்படும்: ராமதாஸ்

அன்புமணி உடனான பிரச்னை சரி செய்யப்படும்: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' அன்புமணி உடனான பிரச்னை சரி செய்யப்படும். சரி செய்தால் தான் தேர்தலை சந்திக்க முடியும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.சென்னையில் நிருபர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறியதாவது: அன்புமணி உடனான பிரச்னை சரி செய்யப்படும். சரி செய்தால் தான் தேர்தலை சந்திக்க முடியும். வரும் வியாழக்கிழமைக்குள் நல்ல செய்தி வரும். 36 வியாழன் தொடர்ச்சியாக உங்களை சந்தித்து உள்ளேன்.வரும் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சரியாகத் தான் சொல்லி உள்ளார்.தற்போது எந்த கட்சியையும் குறை சொல்வதற்கான நேரம் அல்ல. நேரம் வரும்போது, எந்த கட்சியுடன் கூட்டணி என்பது முடிவு செய்த பிறகு கருத்து சொல்லப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.பா.ம.க.,வை பிரிக்க பா.ஜ., முயற்சிக்கிறது என ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவரின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை மனதில் உள்ளதை எப்படி நடக்க வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்பதை உடன் இருந்தால் நன்றாக சொல்வார்கள். இல்லை என்றால் வேறு மாதிரி சொல்வார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஜூன் 09, 2025 07:02

திராவிட நடிப்பை விடவெல்லாம் பெரிய நடிப்பாக இருக்கிறது..


Anantharaman Srinivasan
ஜூன் 09, 2025 00:07

ஒவ்வொருவரின் விருப்பப்படி. அவர்களின் விருப்பத்தை பொறுத்து மனதில் உள்ளதை, சமயத்துக்கு ஏற்றபடி, எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி தான் சொல்வார்கள். நான் சொல்லலையா? அன்புமணியை MP ஆக்கியது தவறு. வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது என்று


Anantharaman Srinivasan
ஜூன் 09, 2025 00:06

ஒவ்வொருவரின் விருப்பப்படி. அவர்களின் விருப்பத்தை பொறுத்து மனதில் உள்ளதை, சமயத்துக்கு ஏற்றபடி, எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்வார்கள். நான் சொல்லலையா? அன்புமணியை MP ஆக்கியது தவறு. வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது என்று


RAJ
ஜூன் 08, 2025 21:53

உங்களாலையோ உங்க குடும்பத்தாளையோ நாட்டுக்கு நயாபைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.. ... ஜாதி மக்களுக்கும் ஒரு யூஸும் இல்லை.. உன்குடும்பம் ஜெகஜோதியா இருக்கு.. உன்னை சுத்தி 10 அல்லக்கைகள் ..அவ்ளோதான்...


Ramesh Sargam
ஜூன் 08, 2025 21:51

ஆக பிரச்சினை என்பது இவ்வளவு நாட்களாக இருந்திருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை