உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை நடத்திய விதம் மனிதத்தன்மையற்ற செயல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் அதிகாரிகள் முறையீடு

அமலாக்கத்துறை நடத்திய விதம் மனிதத்தன்மையற்ற செயல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் அதிகாரிகள் முறையீடு

சென்னை : 'அமலாக்கத்துறை சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது; மனிதத்தன்மை அற்ற செயல்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், 'டாஸ்மாக்' நிர்வாக இயக்குனர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், டாஸ்மாக் தலைமை கணக்கு அதிகாரி உள்பட பெண் அதிகாரிகளும் பிரமாண மனு தாக்கல் செய்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=avmmbxo0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதன் விபரம்

அமலாக்கத்துறை சோதனையின் போது, நீண்ட நேரம் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டோம். உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டோம்.காலையில் பணிக்கு வந்த எங்களை, நள்ளிரவில் தான் வீட்டுக்கு அனுப்பினர். மறுநாள் விரைவாக வரும்படி கூறினர்.இதன் காரணமாக, மூன்று நாட்கள் துாக்கமின்றி பாதிக்கப்பட்டோம். பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பினர். அதிகாரிகள், ஊழியர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் காரணமாக, குடும்பத்தினரிடம் தகவல் கூட சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.விசாரணையில் நேரடியாக ஈடுபடாத ஊழியர்களுக்கு, இந்த சோதனையால் தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தினர். விசாரணை என்ற போர்வையில், எந்தவொரு ஊழியரும், குறிப்பாக பெண்கள், இதுபோன்ற ஒரு சோதனையை சந்திக்க வேண்டியதில்லை.அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமன்றி, மனிதாபிமானமற்ற நடவடிக்கை. அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்காக, மார்ச் 6ம் தேதி காலை 11:54 மணிக்கு நுழைந்து, 8ம் தேதி இரவு 11:46 மணிக்கு வெளியேறி உள்ளனர். சோதனை தொடர்பாக மூன்று நாட்கள், 'சிசிடிவி' காட்சிகள் விபரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 91 )

Narayanan
ஏப் 01, 2025 15:21

திருடர்களை எப்படி நடத்தவேண்டுமாம் ? அவர்கள் காலில் விழுந்து கொஞ்சி கேட்க்கவேண்டுமா ? அநியாயம் . அமலாக்கத்துறை அப்படி ஒன்றும் மனித தன்மையற்ற முறையில் நடக்கமாட்டார்கள். செந்தில்பாலாஜி ,பொன்முடி இவர்களிடம் அப்படி நடக்கவில்லை . இவர்கள் வழக்கை திசைதிருப்ப நடிக்கிறார்கள் , டெல்லிக்கு தூக்கிகொண்டுபோய் விசாரிக்கவேண்டும் . டாஸ்மாக் அதிகாரிகளின் முறையீடை தள்ளுபடிசெய்து வழக்கிற்கு ஒத்துழைக்க சொல்லுங்கள் . மேலும் அந்த அதிகாரிகளின் வங்கிக்கணக்கை முடக்கவேண்டும் .


S Ramkumar
ஏப் 01, 2025 09:46

ரெய்ட் என்றால் இப்படித்தான் இருக்கும். மொபைல் போன்றவைகள் பறிமுதல் செய்து வைத்த்து கொண்டு தான் சோதனை செய்வார்கள். பெண்களை லேட்டாக அனுப்பினார்கள். அவ்வளவு கரிசனம் இருந்தால் கேஸ் போட்டவர்கள் துணைக்கு போக வேண்டியதுதானே. சாப்பாடு எல்லாம் அந்த அந்த அலுவலகமே ஏற்ப்பாடு செய்து கொள்ள வேண்டியதுதான். இது இந்த அரசாங்க அதிகாரிகளுக்கு தெரியாதா. நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.


ramani
மார் 27, 2025 12:35

கொள்ளையடிச்சவங்களை முட்டிக்குமுட்டி தட்டாம விட்டார்களே அவர்களை சொல்லணும்.


Kannapiran Arjunan
மார் 28, 2025 06:26

மகா கொள்ளை காரங்கள்


James Mani
மார் 27, 2025 11:22

IT Raid is,Good one


theruvasagan
மார் 26, 2025 22:19

ராத்திரி வேளையிலதான்.திருடப் போக முடிகிறது. இரக்கமே இல்லாம பணம் நகைகளை அலமாரி லாக்கர் இப்படி எதுலயாவது நாங்க எடுக்க முடியாத மாதிரி பூட்டி வச்சுடறாங்க. செக்யூரிட்டி சிசி டிவி அலாரம் இப்படி ஏகப்பட்டட பாதுகாப்புகளை தாண்டி நாங்க ரிஸ்க் எடுத்து தொழி்ல் செய்ய வேண்டியிருக்கு. எங்க மேலே யாருக்கும் மனிதாபிமானமே இல்லை. இதல்லாம் ரொம்ப அநியாயம்னு அப்படின்னு களவாணி பயலுக புலம்பற மாதிரி இருக்கு.


Vasoodhevun KK
மார் 26, 2025 21:57

அதாவது நாங்க கொள்ளை அடிச்சது உண்மை, ஆனா ஆமலாக்க துறை மசியல , அதனால அந்த வேலைய கோர்ட்ல பார்துக்கிறோம்.


தநாவின் பரிதாபம்
மார் 26, 2025 20:54

உண்மை கன்டறிய அதிரடி சோதனை இப்படித்தான் இருக்கும். மணல் கொள்ளையை கலெக்டர் ஆஜராக எதிர்ப்பு, அப்புறம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு , பின் ஆஜரானர்கள். ஊழலில் எப்படி இவர்கள் விஞ்ஞானிகளோ, அது போல எந்த கேஸையும் நீர்த்து போக செய்வதிலும் இவர்கள் விஞ்ஞானிகள் தான். பாவம் மக்கள். காசுக்கு வாக்கை விற்காமல் இருந்தால் பிழைக்கலாம்


venugopal s
மார் 26, 2025 16:50

இவர்கள் அடித்ததில் பாதியை மத்திய பாஜக அரசின் அமலாக்கத்துறையுடன் பங்கு போட்டுக் கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லாமல் போயிருக்கும்! மறுத்ததால் வந்த வினை!


Venkatesan Srinivasan
மார் 28, 2025 09:22

அதுதான் காட்டும் வியாபார கணக்கே பாதிதான் மறு பாதி சட்ட விரோத வியாபாரம். கண்டிப்பாக மொத்த வியாபாரத்தின் ஜி எஸ் டி யில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளது. ஒரு காலத்தில் சில உணவு விடுதிகளின் உண்மையான வியாபார வருமானம் கண்டுபிடிக்க அவர்கள் கொட்டிய கழிவு இலைகளை அரசு வரி வசூல் துறைகள் கணக்கிட்டதாக கூறுவதுண்டு. அப்படி இருக்க ஒரு மதுக்கடையில் ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து செல்கின்றனர் என வரி வசூல் துறைகள் கவனிக்காமல் இருக்குமா? அதன்மூலம் உண்மை மற்றும் உண்மைக்கு புறம்பாக நடக்கும் வியாபாரம் பற்றிய விவரம் புரிந்து கொள்ள முடியும். மதுபான வியாபாரத்தை பொருத்த மட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு வரி வருவாய் அதிகம். ஆகவே முறைகேடுகள் நடக்கும் பட்சத்தில் வரி ஏய்ப்பு கூட மிகவும் அதிகமாக இருக்கும். எனவேதான் மத்திய புலனாய்வு துறைகள் தீவிரமாக விசாரணை செய்கின்றன. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ் தமிழகம்.


Udayasuryan
மார் 26, 2025 16:02

தரமற்ற மதுவை கொடுத்து அதற்கு 10, 20, 30 , 40 ரூபாய் எக்ஸ்ட்ரா வசூல் செய்து மனித இனத்தை அழித்து சில அதிகார வர்கத்தினர் கோடி கோடியாக பணம் ஈட்டி வருகின்றனர் இதில் சம்பத்தபட்ட அனைவருக்கும் சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்து டாஸ்மாக்கை சீல் வைத்து மூடிவிட்டு பழைய முறையில் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் மற்றும் தென்னை பனையிலிருந்து கள் பானம் இறக்குவதற்கு அனுமதி அளிக்க பட வேண்டும்.


Baskaran M
மார் 26, 2025 15:47

Information regarding excess money collection in the selling point was widely talked. No action was taken. Now the surprise check disturbed their freedom of corruption. So, they called


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை