உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!

கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டூர்: கர்நாடகா காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரில் காரத்தன்மை அதிகமாக இருப்பதால், மீன்கள் ஓடைகள் வழியாக வெளியேறி வருகின்றன. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் ஓடைகளில் மீன்பிடிக்க தொடங்கியுள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் பெய்யும் கன மழை காரணமாக, காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக, மேட்டூர் அணைக்கு புதுத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு வரும் கர்நாடகா தண்ணீரில், காரத்தன்மை அதிகமாக உள்ளது. ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதால் இவ்வாறு காரத்தன்மை அதிகரித்துள்ளது. புதிதாக வரும் தண்ணீரில் காரத்தன்மை அதிகமாக இருப்பதை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருக்கும் மீன்கள், ஓடை வழியாக வெளியேற தொடங்கியுள்ளன. பாலமலை ஓடையிலிருந்து மழைக்காலங்களில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும். அந்த ஓடையில் இப்போது மேட்டூர் அணை மீன்கள் எதிர்நீச்சல் போட்டு செல்லத் தொடங்கியுள்ளன.லட்சக்கணக்கான மீன்கள் இப்படி ஓடையில் படையெடுத்து செல்வதால், சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் ஓடையில் மீன் பிடிக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பாலமலை கோடையில் நான்கு டன்கள் வெவ்வேறு வகை மீன்கள் பிடிபட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

veeramani
மே 26, 2025 09:15

காவிரியின் மாசு ..தளிகாவிரியில் உருவாகி கர்நாடக தமிழகம் புதுவை மக்களை செல்வசெழிக்கவைக்கும் காவிரி தண்ணீர் சிலகாலமாக மிகுந்த மாசு அடைந்து சுடான்லி அணைக்கு வருகிறது . தமிழக அரசிற்கு ஒரு வேண்டுகோள்.. பில்லிகுண்டு வில்காவிரி தண்ணீர் அளவை கண்காணிப்பதுபோல தண்ணீரின் மாசு பற்றியும் பகுப்பாய்வு செய்யலாமாம். ஒரு மணிக்கொரு சாம்பி ல் எடுத்து அனலிஸ் பண்ணலாம். இதனால் தண்ணீர் சுத்தம் பற்றி தரவுகள் கிடைக்கும் . எவரையும் மனது நோகாமல் இதை செய்யவேண்டும்


Ramesh Sargam
மே 25, 2025 21:10

ஒருவேளை பச்சைமிளகாய் தோட்டம் வழியாக கர்நாடக அரசு தண்ணீர் விடுகிறதோ?


Svs Yaadum oore
மே 25, 2025 13:22

கேரளா காரன் அவன் மாநிலத்து மருத்துவ கழைவி இங்கே கொண்டு வந்து கொட்றான் .....ஆனால் அந்த மாநிலத்து முதல்வருக்கு விடியல் மலையாளத்தில் வாழ்த்து .....கர்நாடக காங்கிரஸ் அரசு கழிவு நீரை காவேரியில் இங்கே அனுப்புது .....இதை கேட்க வக்கில்லாமல் டெல்லியில் காங்கிரஸ் இத்தாலி வீடு தேடி சென்று பார்த்து பிறகு சிறப்பான அரவணைப்பு , குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு என்று செண்டிமெண்ட்..இந்த லட்சணத்தில் முன்னேறிய மாநிலமாம் ......கேவலமாயில்லை ....


ஆரூர் ரங்
மே 25, 2025 12:45

இந்த சாக்கடை நீர் வேண்டுமென்று அடம் பிடித்து 40 வருஷமா கோர்ட் வழக்கு உண்ணாவிரதம் போராட்டம்? எல்லாம் வேஸ்ட்டா கோப்பால் ?


Rajpal
மே 25, 2025 12:42

கேரளாக்காரன் மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து தமிழ் நாட்டிற்குள்ள கொட்டுவான். கர்னாடகாக்காரன் கழிவுகளை காவிரி ஆற்றில் கலந்து தமிழ் நாட்டிற்கு அனுப்புவான். ஆந்திராக்காரன் எந்தக் கழிவை தமிழ் நாட்டிற்கு அனுப்புவானோ தெரியலை. அவனுகளுக்குத் தெரியும் தமிழ் நாட்டுக்காரனுக கேனப்பயலுக, என்ன செஞ்சாலும் பொறுத்துப்பானுக, ரொம்ப நல்லவனுக என்று.


S.சங்கரநாராயணன், திருநெல்வேலி
மே 25, 2025 11:34

மொத்த சாக்கடையும் தமிழ்நாட்டுக்கு தான் அனுப்பி வைக்கிறார்கள் அதைத்தான் நம் மாநில மக்கள் குடிக்கும் அவலம்


M Ramachandran
மே 25, 2025 11:15

நேரு விடம் மூதறிஞ்சர் ராஜாஜி அப்பவே கூறினார் மொழி வாரி ராஜ்ஜியம் வேண்டாம் என்று. அவர் கூறியது கசந்தது. இப்போது உள்ள ஆரசியல்வாதிகளுக்கு சுத்த மாக முன் யோசனை கிடையாது. சுய நலமாக சுரண்ட தெரிகிறது. மக்கள் மக்களுக்கு நன்மை செய்வது வர வர பூஜ்யம். தமிழ்நாடு அதன் பலனை அனுபவிக்கிறது.


சமீபத்திய செய்தி