உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்

தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன,'' என, சர்வதேச இயந்திர கண்காட்சி துவக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னையில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. சேலத்தில் வெள்ளிக்கொலுசு உற்பத்தி வளாகம் அமைத்துள்ளோம். 2021ம் ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழகம். தொழில் வளர்ச்சி, தொழில் துறையினர், தொழிலாளர் நலனுக்கு என்னவெல்லாம் தேவை என உன்னிப்பாக கவனித்து செயல்படுகிறோம். இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழகத்தின் பங்கு 11.9 சதவீதம் ஆக உள்ளது. ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது.

மிகுந்த நம்பிக்கை

தி.மு.க., ஆட்சியில் 14 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டில் உள்ள மொத்த பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 41 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர். தமிழகம் மீது உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானது மின்சாரம். தொழில் நிறுவனங்களுக்கு கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில், ரூ.3 ஆயிரத்து 617 கோடியே 62 லட்சம் தான் ஒதுக்கினார்கள்.

இரண்டு மடங்கு

தற்போது தி,மு.க., ஆட்சியில், இரண்டு மடங்கு அதிகமாக, இதுவரைக்கும் ரூ.6 ஆயிரத்தி 626 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறோம். தமிழகத்தை இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும். 2024-25ம் ஆண்டில் 30.50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்து, இந்திய அளவில் 3ம் இடத்தை பிடித்துள்ளோம்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

Matt P
ஜூன் 20, 2025 17:35

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் உள்ளவரை இவர் இதுவும் சொல்வாரு இதுக்கும் மேலையும் சொல்வாரு.


Matt P
ஜூன் 20, 2025 17:32

உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்கும். தமிழ்நாட்டை மட்டும் உற்று நோக்குகிறார்கள் என்றால் ஸ்டாலின் என்ற அதி மேதாவிக்காக தான் இருக்கும்.


Matt P
ஜூன் 20, 2025 17:28

உலக நாடுகள் கர்நாடக தமிழ்நாடு கேரளா மஹாராஷ்டிரா என்று ஓவ்வொரு மாநிலத்தையும் தனியா கவனிச்சிட்டு வராங்க. குறிப்பா தமிழ்நாட்டை தனியா உற்று நோக்குகிறாக. ஸ்தாலினிடம் பேச்சு வார்த்தை நடத்த டிரம்ப் தயாராயிட்டிருக்காரு. பாகிஸ்தான் பிரதமர் கூட அடிக்கடி தொலைபேசியில் நண்பர் என்ற முறையில் பேசிப்பாரு. இந்தியா என்று ஒரு நாடு இருப்பதையே உலக நாடுகள் மறந்திடுச்சு. தமிழ்நாட்டின் பிரதம மந்திரி என்ற நினைப்பு தான் இப்படி எல்லாம் பேச வைக்குது.


Rajasekar Jayaraman
ஜூன் 20, 2025 06:49

அசிங்கப்படாமல் புளுகுவதற்கு மிகச் சிறந்த ஆசான் திருட்டு திராவிடம்.


venugopal s
ஜூன் 19, 2025 23:03

சங்கிகளுக்கு புரியாத பொருளாதாரம், ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி இதைப் பற்றி எல்லாம் முதல்வர் பேசுவது வேஸ்ட். அவர்களுக்கு புரிந்த மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள், இதைப்பற்றி பேசினாலாவது ரசிப்பார்கள்!


V Venkatachalam
ஜூன் 20, 2025 20:57

இவர்கள் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மற்றவர்களுக்கு புத்தி சொல்ல வந்துட்டானுங்க. பருத்தி மூட்டைகள் குடோனில் இருப்பது நல்லது.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 19, 2025 21:41

போதையின் பாதையில் விடியல்


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2025 20:43

ஊழல், லஞ்சம், போதைப்பொருள்களின் சொர்க்கம் என்ற வகையில் தமிழகம் உலகப்புகழ் பெற்றுள்ளது.


பாரத புதல்வன்
ஜூன் 19, 2025 19:36

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள், கிராமங்கள் எப்போது உலக நாடுகள் என பெயர் மாற்றம் செய்தார்கள்.... இந்த ஆளுக்கு புரிய வையுங்கள் ...உலக நாடுகள் என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் உலக நாடுகள்மற்றும் உலக தலைவர்கள் உள்ள நாடு....


STN Rajan
ஜூன் 19, 2025 19:00

தமிழகம் மீது தமிழக மக்கள் மீதும் தமிழன் மீதும் உலக நாடுகள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். அதே சமயம் திருட்டு திராவிட கூட்டணி கட்சிகளின் கமிஷன் போட்டியினால் தமிழகத்தில் முதலீடு செய்ய பெரு நிறுவனங்கள் மறுக்கின்றனர் என்பதும் உண்மையே


KavikumarRam
ஜூன் 19, 2025 18:58

"தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்" /// உண்மை. போதை பொருட்கள், தீவிரவாதிகள் அடைக்கலம், கள்ளச்சாராயம், ஊழல் ஹவாலா பணம் எல்லாம் தங்குதடையில்லாமல் புழங்கும் சொர்க்க பூமின்னு இப்போ உலக நாடுகள் தமிழகத்தின் மீதி மாபெரும் நம்பிக்கை கொண்டிருப்பது முற்றிலும் உண்மை.