உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!

சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா எழுதியுள்ள 'பிலாங்கிங் - ஏ ஜர்னி ஆப் லவ்' சுயசரிதை புத்தகம் வெளியாகியுள்ளது. அதில் அவர் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் பற்றி வெவ்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப பாராட்டியும், குறை கூறியும் வருகின்றனர். இந்த புத்தகத்தில் ஆய்வு செய்தவர்கள், அதில் ஏராளமான தகவல் பிழைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.• ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, 1921ல் தொடங்கப்பட்டது என்று சோனியா குறிப்பிட்டுள்ளார். உண்மையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நாக்பூரில் ஹெட்கேவாரால் 1925ல் தான் தொடங்கப்பட்டது.சோனியாவின் உதவியாளராக இருந்த காங்கிரஸ் நிர்வாகி அஹமத் பட்டேல், 2022ல் இறந்தார் என்று சோனியா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அஹமத் பட்டேல், 2020ல் இறந்தார் என்பதே சரியான தகவல்.2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தை பற்றி குறிப்பிட்டபோது, மாநில தலைநகர் ஆமதாபாத் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குஜராத்தின் தலைநகர் காந்திநகர் என்பதை பள்ளிக்குழந்தைகள் கூட சொல்லி விடுவர்.கோத்ரா கலவரத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன என்று சோனியா கூறியுள்ளார். ஆனால் எஸ் 6 என்ற பெட்டிதான் தீக்கிரையானது.2014ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வென்றதாக சோனியா கூறியுள்ளார். ஆனால், அந்த அணி 336 இடங்களை மட்டுமே வென்றிருந்தது.1984ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி, 405 இடங்களில் வென்றதாக ஓரிடத்திலும், 404 இடங்களில் வென்றதாக இன்னொரு இடத்திலும் சோனியா குறிப்பிட்டுள்ளார்.அப்போதைய பிரதமர் வாஜ்பாய், இஸ்லாமாபாத் சென்றிருந்தபோது, கார்கிலில் ஆடு மேய்ப்பவர்கள் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை கண்டனர் என்று சோனியா குறிப்பிட்டுள்ளார். ஆனால், வாஜ்பாய் பாகிஸ்தான் சென்றது, 1999 பிப்ரவரி மாதத்தில்; ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பபட்டது அதே ஆண்டு மே மாதத்தில்தான்.கார்கிலில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை இந்திய ராணுவம், 10 மாதங்களுக்கு பிறகு மீட்டது என்று சோனியா குறிப்பிட்டுள்ளார். ஆனால், மே மாதத்தில் கண்டறியப்பட்ட ஊடுருவல், ஜூலை மாதத்தில் முடிவுக்கு வந்தது என்பதே உண்மை.1999ல் வாஜ்பாய் அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தது பற்றி குறிப்பிடும்போதும், அது நம்பிக்கை இல்லா தீர்மானம் என்று சோனியா தவறான தகவலை குறிப்பிட்டுள்ளார். உண்மையில், அது அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானம்.இதேபோல, ராகுல் மீதான குற்ற வழக்கு தொடர்பாகவும் தவறான தகவலை சோனியா பதிவு செய்துள்ளார்.நெல்சன் மண்டேலா, பாரத ரத்னா விருது பெறுவதற்காக 1991ல் வந்தார் என்று நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், அது 1990ம் ஆண்டு நடந்த நிகழ்வாகும்.தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் அதிபர் பதவியேற்பு விழாவில், இந்தியா சார்பில் ஜனாதிபதி ஆர்.கே.நாராயணன் தலைமையிலான குழு கலந்து கொண்டது என்று சோனியா கூறியுள்ளார். துணை ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணன் தலைமையிலான குழு, அந்த விழாவில் கலந்து கொண்டது. அதை ஜனாதிபதி என்றும், ஆர்.கே.நாராயணன் என்றும் மாற்றி குழப்பியுள்ளார் சோனியா.1988ல் அப்போதைய பிரதமர் ராஜிவ் சீனப்பயணம் சென்றபோது, அந்நாட்டு அதிபர் டெங் ஜியோ பெங் என்று குறிப்பிட்டுள்ளார். டெங் ஜியா பெங், சீனாவின் உயர் அதிகாரம் கொண்ட தலைவராக இருந்தார்; ஆனால், அதிபராக இருந்தவர் யாங் ஷாங்குன் என்பதே சரியான தகவல்.இதுபோன்ற ஏராளமான தகவல் பிழைகள், சுயசரிதை என்ற பெயரில் சோனியா எழுதிய புத்தகத்தில் உள்ளன. 'அரசியல் நிகழ்வுகள், சர்வதேச தலைவர்கள் தொடர்புடைய நிகழ்வுகளை எழுதும்போது கவனத்துடன் எழுத வேண்டியது முக்கியம். ஒரு முறைக்கு நான்கு முறை தகவல்களை சரி பார்க்க வேண்டும். தவறினால் இப்படி அசிங்கப்பட நேரிடும்' என்கின்றனர், ஆய்வாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

ராஜா
நவ 13, 2026 09:13

சுய சரிதை என்பதை விட சுய புராணம் என்பதே சரி.


மணி
நவ 13, 2026 05:38

இத்தாலியில் என்ன வேலை செய்தார் என குறிப்பிட்டு உள்ளாரா??


theruvasagan
நவ 12, 2026 22:10

மண்டபத்தை யாரோ எழுதிக் குடுத்ததை அந்தம்மா தன்னோட பேரை போட்டு அப்படியே வெளியிட்டுட்டாங்களே ஒழிய சொந்தமாக நாலுவரி எழுதக்கூடடிய திறமையோ சரக்கோ எள்ளளவு கூட இல்லைங்கிற உண்மை குழந்தைக்கு கூட தெரியும். ஆகவே அந்த புத்தகத்தில் 55000 பிழைகள் இருந்தாலும் அதற்கெல்லாம் அவங்களை குற்றம் சொல்லுவது தகாது.


Duruvan
நவ 12, 2026 20:02

பாம்பு பஞ்சாங்கத்தில் குரு உடன் கேது சேருவதால் படிக்கும் புத்தகத்தினால் பிரச்னை என்று உள்ளது|


Pandi Muni
நவ 12, 2026 19:48

பேசுவது மட்டுமே பொய் இல்லை எழுதுவதும் பொய்தான்


Palakkad Samaniyan
நவ 12, 2026 17:08

மிக முக்கிய பதவியில் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை பொது வெளியில் டோலன்ட் டிரம்ப் என்று உச்சரித்தது எல்லாம் தவறு இல்லை சோனியா சுயசரிதையில் உள்ள தவறு மட்டும் கண்ணுக்கு தெரியுது


Pandi Muni
நவ 12, 2026 19:46

ஸ்வாமி விவேகானந்தரையும் டெண்டுல்கரையும் வேண்டுமென்றே உளறி உச்சரித்த லோலான் டிரம்புக்கு பதிலடியாகத்தான் மோடி அவ்வாறு உச்சரித்தார் என்பது கூட உன் சின்ன புத்திக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை


MP.K
நவ 12, 2026 16:37

Before publications, they did not check the date the year, numbers etc. which It can be avoided in future.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 12, 2026 16:15

மோடியை விட அதிகம் படித்தவர் .... ஆங்கிலம் நன்கு பேசக்கூடியவர் ..... கொத்தடிமைஸ் சீற்றம் ......


ராஜா
நவ 12, 2026 20:56

லண்டனில் பிக் பாக்கெட், யாசகம் பெறுபவர்கள் எலாம் மிக அருமையாக ஆங்கிலம் பேசுவார்கள். அவர்களை பேசாமல் காங்கிரஸ், திமுக கட்சிகளுக்கு தலைவர்கள் ஆகிவிடலாமா?


P.sivakumar
நவ 12, 2026 16:13

எத்தன பிழை இருக்கோ அத மட்டுப்படுத்தும் ஓட்டு போடுங்க ப்ளீஸ்!


Madhusudhanan Kuppuswami
நவ 12, 2026 15:55

சோனியா ஒரு வரலாற்று பிழை. சுய சரிதை ஒரு கேடு .மனச்சாட்சிக்கு பயந்து எழுதினாதன் அது சுய சரிதை .அம்மையார் எழுதியது சும்மா உடான்ஸ்.