உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  40 சீட் கேட்கும் அளவுக்கு அரசியல் தார்மீகம் உள்ளது

 40 சீட் கேட்கும் அளவுக்கு அரசியல் தார்மீகம் உள்ளது

நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி நாட்கள் அதிகரித்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரம், அதற்குரிய நிதியை ஒதுக்கி, உழைப்புக்கேற்ற ஊதியம் அதிகரிக்க வேண்டும். பொங்கல் தொகுப்புடன் கட்டாயமாக பணமும் தமிழக அரசு வழங்க வேண்டும். நிதி நிலை ஒத்துழைத்தால், எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம். தி.மு.க., கூட்டணியில், 30 - 40 'சீட்' வரை கேட்க, இ.கம்யூ., கட்சிக்கு அரசியல் தார்மீகம் மற்றும் 100 ஆண்டு கால அரசியல் எங்களுக்கு உள்ளது. எத்தனை சீட் கேட்டாலும், ஜனநாயக விரோதமாக எங்கள் கூட்டணி தலைவர் எடுத்துக்கொள்ள மாட்டார். வரும் 26ம் தேதி, இ.கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணு நுாற்றாண்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. - வீரபாண்டியன் மாநில செயலர், இந்திய கம்யூனிஸ்ட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 20, 2025 13:08

நீங்க கேக்கறதையும் நாங்க பாக்கணும், அவங்க அல்வா கொடுக்கறதையும் நாங்க பாக்கணும். கேளுங்க கேளுங்க


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 20, 2025 13:07

ஏணுங்க ஒரே ஒரு டவுட்டு . கம்யூனிஸ்ட் கட்சி வலது இடதுன்னு பிரிஞ்சது 1962 லேதானே. அதுக்குள்ள எப்படி இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு நூறு வருஷ அரசியல் பாரம்பரியம் வரும்?


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 20, 2025 13:05

இ.கம்யூ., கட்சிக்கு அரசியல் தார்மீகம் மற்றும் 100 ஆண்டு கால அரசியல் உள்ளது. எத்தனை சீட் கேட்டாலும் கொடுக்க மனசு உள்ளது . வருஷத்துக்கு ஒரு சீட்டுன்னு வச்சு நூறு ஆண்டு கால அரசியலுக்கு நூறு சீட் கூட கேக்கலாமே. கேக்கறதுக்கு காசா பணமா கசக்கவா போகுது.


senthilanandsankaran
டிச 20, 2025 07:49

நல்லா கேளுங்க....கம்யூனிஸ்டும் இனி ஊழல் ஒரு உரிமைதான் என்று பேசும் காலம் வர போகிறது.அன்று நீங்கள் திமுக உறுப்பினர்..என்று ஊர் அறியும்.


சமீபத்திய செய்தி