உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாடகை கொடுக்க வேறு வழியில்லை: முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை

வாடகை கொடுக்க வேறு வழியில்லை: முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை

சென்னை: வாடிக்கையாளர்கள் வராததால், கடை வாடகை உள்ளிட்ட செலவை சமாளிக்க, முதல்வர் மருந்தகத்தில் பாக்கெட் உணவு பொருட்கள் மற்றும் மாவு வகைகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்து, மாத்திரைகள் கிடைக்க, மாநிலம் முழுதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை, பிப்ரவரியில் அரசு துவக்கியது. இதில், 462 மருந்தகங்களை, தனியார் தொழில் முனைவோர் நடத்துகின்றனர்; 538 மருந்தகங்களை கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன.

75 சதவீதம் குறைவு

இந்த மருந்தகங்களில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள், தலை சுற்றல் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள், வெளிச்சந்தையை விட 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.பல மருந்தகங்களில் நோயாளிகள் கேட்கும் மருந்துகள் கிடைப்பதில்லை. இதனால், மருந்தகம் நடத்தும் செலவை சமாளிக்க, உணவு பொருட்கள் போன்றவை விற்கப்படுகின்றன.இது குறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:ஏழை மக்கள் பயன் பெற, முதல்வர் மருந்தகம் என்ற நல்ல திட்டத்தை அரசு துவக்கியது. கடை உள்கட்டமைப்பு பணிகளுக்கு அரசு வழங்கிய 3 லட்சம் ரூபாய் போதவில்லை. மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் மருந்தகங்களை நடத்துகின்றன; அவற்றில் தள்ளுபடி வழங்கப்படுவதுடன், அனைத்து வகை மருந்துகளும் விற்கப்படுகின்றன.இதனால், ஒரு முறை கடைக்கு செல்வோர், ஒரு வாரம், மாதத்திற்கான மருந்துகளை மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.முதல்வர் மருந்தகத்தில் வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்துகளில் ஒன்று இருந்து, மற்றொன்று இல்லை என்றாலும், இருக்கிற ஒன்றை கூட வாங்காமல் சென்று விடுகின்றனர். இது தொடர்பாக, கூட்டுறவு துணை, இணை பதிவாளர்களிடம் புகார் அளித்தாலும் தீர்வு கிடைப்பதில்லை.

உணவு பொருட்கள்

ஒரு முறை மருந்து கிடைக்காமல் திரும்பிச் சென்றவர்கள், மீண்டும் வருவதே கிடையாது. மருந்தக வாடகை, 'பிரிஜ்' உள்ளிட்ட மின் கட்டண செலவுகளை சமாளிக்க முடியவில்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயனில்லை.எனவே, செலவுகளை சமாளிக்க மருந்து மட்டுமின்றி, பால் பவுடர், மாவு வகை, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் விற்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முதல்வர் மருந்தகத்தில் விற்பனை அதிகரித்து வருகிறது; கூடுதல் மருந்து விற்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

ஆர்வம் இல்லாத அதிகாரிகள்

தமிழகம் முழுதும் 35,000 ரேஷன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன. அவற்றில் மாதம் இரண்டு கோடி குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பேர் என்னென்ன மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகின்றனர் என்ற விபரங்களை கேட்டறிந்து, அவற்றை வாங்கி அவர்களிடம் விற்றாலே, மக்களுக்கு பயன் கிடைக்கும்; கூடுதலாக முதல்வர் மருந்தகம் திறக்க வாய்ப்பு ஏற்படும். இதை செயல்படுத்த, கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு ஆர்வம் இல்லை என்று, முதல்வர் மருந்தக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Chandrasekaran Balasubramaniam
ஜூன் 22, 2025 07:57

ஆம். ஒரு நாள் வாங்கிவிட்டு அதே மாத்திரையை 1 வாரம் கழித்து வாங்கினால் 2 மடங்கு விலை சொல்கிறார்கள். வேஸ்ட். மோடியின் மக்கள் மருந்தகம் மிகவும் மலிவு விலை எப்போதுமே. விலை ஏற்றமில்லை.


nallakumar kumar
ஜூன் 21, 2025 15:51

Amma amma Rompa straight.


nallakumar kumar
ஜூன் 21, 2025 14:57

Veli market price i vida 200 / கோஸ்டலி.எக்சாம்ப்லே aatடா பிலோவேர் நாகா 1 கிலோ போர்ட்டி ருபேஸ்..சிஎப் மினிஸ்டர் ஷாப் 120


ஆரூர் ரங்
ஜூன் 20, 2025 14:28

அயலக அணியின் சிறப்பான மாவா?


ஆரூர் ரங்
ஜூன் 20, 2025 14:07

மோடி மக்கள் மருந்தகங்களில் மிகக் குறைவான டிமாண்ட் உள்ள மருந்துகளை வாடிக்கையாளர்கள் கோரிக்கைக்கு ஏற்ப 20 சதவீத அளவு வரை உள்ளூரில் (பிராண்ட் பெயருள்ள ) கொள்முதல் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனால் மருந்து சீட்டில் பரிந்துரைக்கபட்டுள்ள ஒரே ஒரு மருந்து இல்லை என்பதற்காக வாடிக்கையாளர்கள் ஒன்றும் வாங்காமல் திரும்பச் செல்வது தடுக்கப் படுகிறது. முதல்வர் மருந்தகம் தெண்டம்.


உண்மை கசக்கும்
ஜூன் 20, 2025 12:03

மா.சு மா.சு மாவு வாங்கலையோ மாவு.. மா.சு மா.சு


SUBRAMANIAN P
ஜூன் 20, 2025 09:38

மாவு விற்பனையா அல்லது?


Bhaskaran
ஜூன் 20, 2025 08:47

மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தைப்பார்த்து புலியைப்போல் பூனை சூடு போட்டு கொண்ட கதை. திராவிட மாடல்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 07:25

இதுதான் சிறந்த நிர்வாக திறன் ..எந்த கொம்பனாலும் இதுபோல் மாவை விற்று வாடகை கொடுக்கும் அரிய திட்டத்தை கொண்டுவர முடியுமா ? எம்ஜிஆர் ..ஜெயலலிதா போன்றவர்கள் அரசு பணத்தை விரையம் செய்து வாடகை கொடுத்தனர் .. அனால் கழக அரசோ தொலைநோக்குடன் சிந்தித்து..தமிழர்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு .. மாவை விற்று வாடகைகொடுக்கும் முறையை அறிமுக படுத்தி உலக புகழ் பெறுகிறது ..இதனால்தான் தான்சேனியா மக்கள் கூட தமிழக முதல்வரின் படத்தை வைத்து அவரை புகழ்ந்து ஆடி பாடுகிறார்கள் ..


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 20, 2025 05:32

மாவு விற்பனையுடன் பாட்டிலுக்கு பத்துக்கு பதிலாக எட்டு ரூபாய் வைத்து விற்கலாம்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 09:20

இந்திய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் இதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் .. அமல் படுத்த வேண்டும் ...இந்திய பொருளாதாரத்தை நம்பர் ஒன் ஆக்கவேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 20, 2025 09:29

மகளிருக்கு இலவசமாக அல்லது தள்ளுபடி சலுகையில் உற்சாக பானம் விற்பனை செய்யலாம். கடைக்கு வந்து போக ஏற்கனவே ஓசி பஸ் இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை