உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி

"பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை" : அடித்து சொல்கிறார் அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: சின்ன சின்ன குழப்பங்கள் எல்லாம் இருக்கிறது. இதெல்லாம் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும். நீங்கள் அது எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டாம். நாம் வேகமாக முன்னேறுவோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f8cr2xym&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் கிடையாது. பா.ம.க., ஒரு ஜனநாயக கட்சி. பொதுக் குழு தேர்வு செய்பவருக்கே கட்சியில் அதிகாரம். நிரந்தரமாக இங்கு யாரும் இருக்க முடியாது.நான் தான் பெரியவன் என்ற எண்ணம் இல்லை. என்னை நீங்கள் தேர்வு செய்தீர்கள். ஒரு தொண்டனாக செயல்படுகிறேன். பா.ம.க., எல்லா மதத்திற்கும் சார்ந்த கட்சி. நம்மிடம் தெளிவான கொள்கை இருக்கிறது. நீங்கள் வேகமாக பண்ணுங்கள். எதுவாக இருந்தாலும் உங்களுடன் நான் இருக்கிறேன். தைரியமாக பண்ணுங்கள். உங்களுக்கு என்னை பத்தி நன்றாக தெரிந்திருக்கும். நான் உங்களுக்கு கட்சியிலும் சரி, வெளியிலும் சரி எந்த பிரச்சனை வந்தாலும் நான் நன்றாக பார்த்துக் கொள்வேன். இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மீனவ நண்பன்
ஜூன் 01, 2025 21:50

கொரானா தாக்கம் அதிகரிக்கும் நிலைமையில் ரெண்டு டாக்டர்களும் அரசியலை விட்டு விலகி மருத்துவ சேவை செய்யலாம் .


Yaro Oruvan
ஜூன் 01, 2025 20:15

இவராவது பொது வெளியில் நாகரீகமாக விட்டு கொடுக்காமல் பேசுகிறார்.. ஆனால் தந்தை இந்த வயதிலும் முதிர்ச்சி இல்லாமல் கூவுகிறார் .. அவருக்கு அதிக காலம் இல்லை எனவே தொண்டர்கள் அன்புமணி பக்கம் உள்ளது தெரிகிறது.. தேர்தலுக்கு பிறகு பார்ப்போம்


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
ஜூன் 01, 2025 17:56

இதென்ன பிரமாதம்.... உன் கட்சியே நிரந்தரம் கிடையாது.....


Naresh Kumar
ஜூன் 01, 2025 17:28

I support Ramadoss Ayya. Anbumani is Not truthful to his father not to his party.


அப்பாவி
ஜூன் 01, 2025 14:58

குலசாமி மட்டும்தான் உண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை