உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபத்துாணில் தீபம் ஏற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்!

தீபத்துாணில் தீபம் ஏற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்!

சென்னை: தீபத்துாணில் தீபம் ஏற்றாவிட்டால் இதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும், என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரித்தார்.அவரது அறிக்கை: திருப்பரங்குன்றம் கோயிலை காக்க வேண்டிய கடமை தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு உள்ளது. அந்த துறை தனது உரிமையை விட்டுக் கொடுக்க தயாராகி இருப்பது கண்டிக்கத்தக்க செயலாகும். கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபமேற்ற சென்ற முருக பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் விளைவாக தேர்தலில் தி.மு.க., தோற்கடிக்கப்பட்டது.இந்த விஷயத்தை புதிய அரசும் புறந்தள்ளி விட்டது. உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய பிறகும் அதனை ஏற்க மறுத்து, மறுசீராய்வு வழக்கு தொடர்ந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்காமல், கார்த்திகை தீபம் ஏற்றும் நாள் வரை காத்திருந்து பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயலை அரசு செய்துள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதே பழமொழி. விஷத்தை விதைக்கும் தமிழக அரசை 8 கோடி தமிழர்கள் அகற்றுவார்கள். இதனை உணர்ந்து செயல்பட்டால் அதன் பலன் தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் கிடைக்கும். இல்லையென்றால் தக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !