உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்; முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

திமுகவை ஒழித்துவிடலாம் என கனவு காண்கின்றனர்; முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நெருக்கடி நிலை காலத்தில் திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பலர் கொடுமைகள் அனுபவித்தனர். எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் திமுகவினர். அதனால் தான் இன்றைக்கும் கம்பீரமாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர். இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம் ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சட்ட போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக நவ., 11ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் படிவங்களில் அளிக்கும் பெயர்கள் மட்டும் தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் வரும் போது நாம் வீட்டில் இல்லாமல் போய்விட்டால் ஓட்டுக்களை இழக்கும் சூழல் ஏற்படும். ஏழைகள், கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

RAVINDRAN.G
நவ 07, 2025 14:51

காசுக்கு ஓட்டை விற்கும் மக்கள் இருக்கும்வரை இந்த தத்திகளின் ஆட்சியே தொடரும்.இனிமேல் இந்த நாடு திருந்தது. ஜனநாயகம் செத்துப்போய் பலவருஷம் ஆகிவிட்டது.தமிழன் இலவசத்துக்கு அடிமை ஆயிட்டான். உழைக்க தகுதி அற்றவன் ஆயிட்டான்.


Sivaswamy Somasundaram
நவ 07, 2025 14:43

கொம்பன் அப்படிங்கறவரு யாருங்க? அதுக்கு ஏதாவது கதை/விளக்கம் இருக்குதுங்களா?


Sundar R
நவ 07, 2025 14:24

Oh No No No Oh No No No தமிழகத்தில் தேர்தலில் தனியாக நின்றால் ஒரு தொகுதியில்கூட திமுக டெபாசிட் வாங்க மாட்டார் என்ற விஷயம் தெரிந்துமா


Muthuraj
நவ 07, 2025 13:51

மக்களால் முடியும் முதல்வரே.. கொஞ்சம் பொறுங்கள்


Chandru
நவ 07, 2025 13:42

அழிக்க எவருமே வேண்டாம். அதுவே அடுத்த வருடம் அழிந்து விடும். எல்லாம் சில காலம்.


Perumal Pillai
நவ 07, 2025 13:34

திமுக மட்டுமல்லாது திராவிட கட்சிகள், அண்ணாதிமுக, விஜய் கட்சி, பிரேமலதா கட்சி, வைகோ கட்சி, சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் ஒழிக்க படல் வேண்டும்..


Ramalingam Shanmugam
நவ 07, 2025 13:24

ஒருவரே போதும் துணைக்கு உ. நிதி இருக்காரே


M Ramachandran
நவ 07, 2025 13:19

அது எங்களால் தான் முடியும். எங்க அமைச்சர் பட்டாளம் அதை நடத்தி காட்டும். MLA க்கள் ஜால்ரா தட்டவும் MP க்கள் ஊது குழல் உதவும் நல்லமுறையில் அடக்கம் செய்து ஜால்றா கட்சி திருட்டமா தம்பட்டம் அடிக்க உம் கம்மிகள் பின்புறமிருந்து ஒத்து ஊதவும்


vivek
நவ 07, 2025 13:19

கொத்தடிமையின் கதறலே அதிகமாக இருக்கு...தலைசிறந்த சொம்பு போல....


P.M.E.Raj
நவ 07, 2025 13:17

திமுக ஒழிக்கப்பட மற்றும் அழிக்கப்பட வேண்டிய கம்பெனி. திமுக இருக்கும்வரை கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் மற்றும் ரவுடிசம் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும்.