உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வர் பதவி எனக் கூறி கூட்டணிக்கு அழைத்தார்கள்; சீமான்

துணை முதல்வர் பதவி எனக் கூறி கூட்டணிக்கு அழைத்தார்கள்; சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துணை முதல்வர் பதவி தருவதாகக் கூறி தன்னை அ.தி.மு.க., கூட்டணிக்கு வருமாறு ஆதவ் அர்ஜூனா அழைத்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h8iyth71&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழ் திரையுலகில் மறக்க முடியாத ஒரு பெரும் ஆளுமை ராஜேஷ். கன்னிப்பருவத்திலே, பயணங்கள் முடிவதில்லை என மிகச்சிறந்த படங்களில் அவரது பங்களிப்பு இருக்கும். திரைக்கலைஞராக எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஒரு மிகச்சிறந்த இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர், ஜோதிடக் கலை நிபுணர். ஒரு அறிவுப் பெட்டகமாக வாழ்ந்து கொண்டிருந்தார். எனக்கு மூட்டை மூட்டையாக புத்தகங்களை அனுப்புவார். அவர் அனுப்பிய புத்தகங்களை என்னுடைய நூலகத்தில் தனியாக வைத்துள்ளேன். நாங்க சந்திக்கும் போது எல்லாம் திரைப்படங்கள் பற்றி பேசிக் கொள்வது குறைவு தான். இலக்கியம், உலக அரசியலை பற்றி தான் பேசுவோம். சிவக்குமார், சரத்குமார், அர்ஜூனைப் போல ராஜேஷூம் உடல்நலத்தை பேணுவார், என்றார். மற்றொரு பேட்டியில், அ.தி.மு.க., பா.ஜ., குறித்து த.வெ.க., நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பேசியது பற்றி சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் பதிலளிக்கையில், 'புரணி பேசுவதற்கு எல்லாம் நான் கருத்து சொல்ல முடியுமா என்ன? இதே ஆதவ் அர்ஜூனா தான் என்னை அ.தி.மு.க., கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். துணை முதல்வர் பதவியும் தருகிறோம் என்றார். அதுக்கு என்ன பண்ணுவது,' என்று சிரித்தபடி கூறிவிட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

R.MURALIKRISHNAN
மே 31, 2025 20:32

இலங்கை அதிபர் பதவி தர்றாங்கன்னு கள்ளதோணி ஏறி இராமேஸ்வரம் போனீங்களே அது போலத்தானே


R.MURALIKRISHNAN
மே 31, 2025 20:31

எப்படி சீமான் உமக்கு மூட்டை மூட்டையா பொய் சரளமாக வருகிறது. எங்கிட்டாவது போய் டிரெயினிங் எடுத்தியாலே.


sridhar
மே 31, 2025 19:30

சாதாரண mla கூட ஆக முடியாதவர் துணை முதல்வர் .


theruvasagan
மே 31, 2025 18:49

ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த ட்ரம்ப்பும் புடினும் எவ்வளவோ முயன்றும் தங்களால் முடியாது என்று தெரிந்துகொண்டு உங்களை மத்தியஸ்தத்துக்கு கூப்பிட்டதை சொல்ல மறந்துட்டீங்க. அதை ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை.


Narasimhan
மே 31, 2025 18:45

ஒரு மனிதன் பொய் பேசலாம். ஆனா கிலோ கணக்குல பேசக்கூடாது. தம்பிகளின் 70% வோட்டு விஜய்க்கு போகப்போவது உண்மை.


என்றும் இந்தியன்
மே 31, 2025 18:20

சிறு வயதில் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்வோம் நீ நல்லா படிச்சு ஒரு ஐன்ஸ்ட்டின் போல நியூட்டன் போல நிறைய விஷயங்கள் கண்டு பிடிக்கணும்ன்னு. அனால் இப்போது என்னவென்றால் நீ நல்லா படிக்கமுடியாது என்றால் ஒரு அறிவே இல்லாத மூடனாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நீ டாஸ்மாக்கினாட்டின் முதல்வர் அல்லது துணை முதல்வர் ஆகலாம் என்று இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்


Rajarajan
மே 31, 2025 17:12

அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சின் கூபிட்டாங்கோ, ஜப்பான்ல ஜாக்கிசான் கூபிட்டாங்கோனு, இப்படி ஆளாளுக்கு கலர் காலரா ரீல் விடுங்க.


madhesh varan
மே 31, 2025 16:10

2000 ஆயிரம்கோடி பணம் தர்றன்னு சொல்லி கூட்டணிக்கு சேரச்சொல்லி வற்புறுத்தியதை மறந்துட்டிங்க


madhesh varan
மே 31, 2025 15:58

முஹம்மது ஸல் பயன்படுத்திய உபகரணம், கடவுள் க்ரிஷ்ணரு ஊதீய புல்லாங்குழல், ராமர் வச்சிருந்த வில்லு, ஏசுநாதரு கட்டின துணியக்கூட சீமானு இன்னும் பத்திரமா லைப்ரேரில வச்சுஇருப்பாரு, பித்தலாட்டக்காரன்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 31, 2025 15:57

யாரு, எங்க, எங்க கூப்டாங்களோ .... உன்னைய விஜயலட்சுமி திரும்ப கோர்ட்டுக்கு கூப்புடுற நேரம் வந்தாச்சு ..... 2026 தேர்தல் .......


Natarajan Mahalingam
மே 31, 2025 18:11

அருமை


முக்கிய வீடியோ